உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 கலப்பைக்காலிகள்‌

796 கலப்பைக்காலிகள் யாக உடற்போர்வையால் (mantle) போர்த்தப் பட்டிருக்கும். உடற்போர்வையின் தோல் மடிப்பு உடலின் மேல்புறம் ணைந்துள்ளது. செவுள்கள் படவங் களாக (lamellate) அமைந்துள்ளன. உடற்குழி குறுகியுள்ளது. இதய உறைக்குள் (pericardium) உள்ள குழியே உடற்குழியாக உள்ளது. ட்ரோக் கோஸ்பியர், வெலிஜர் என்னும் இருவகைப்பட்ட இளவுயிரிகள் கலப்பைக்காவிகளின் வளர்ச்சிப் பருவத்தில் காணப்படுகின்றன. கலப்பைக்காலிகளைச் சேர்ந்த உயிரினங்கள் கடலிலும் காணப்படுகின்றன. இவ்வுயிரினங்களின் இரு வால்வுகளால் ஆன ஓடுகளே கிளிஞ்சல்கள் எனப்படும். ஒவ்வொரு வால்வும் இரு ஃபோலஸ், டெரிடோ. சமச்சீரற்றுக்காணப்படும். போன்ற மெல்லுடலிகளின் ஓடு மெல்லியதாகவும் சிறியதாகவும் உறுதியற்றும் இருக்கும். கலப்பைக் காலிகளின் ஓடு பெரிஆஸ்ட்ரெக்கம் (periostracum) பிரிஸ்மாட்டிக் அடுக்கு அல்லது பட்டகை அடுக்கு, நேக்ரியஸ் அல்லது முத்தின் தாய் அடுக்கு ஆகிய மூன்று அடுக்குகளைக் கொண்டது. இவற்றுள் சிலவற்றின் ஓடு மிகவும் 8 மி.மீ-4 மி.மீ இருக்கும். அம்பே சிறியதாக வெளியேற்றும் துாம்புக் நீல் பந்தகம் குழாய் பாதம் உள்ளிழுக்கும் சாம்புக் குழாப் வளர்ச்சிக்கோடுகள் உடற்போர்வை (mantle layer) ஓடுகளுக்குக் கீழே காணப்படும். உள்ளிருக்கும் மென்மையான உடல் பகுதியைப் போர்த்தியவாறு நெருக்கமாக இணைந்து இருக்கும். இதன் மூலம் வெளியிலிருந்து வரும் சிறு துகள் போன்ற பொருள்கள் மான்ட்டி லுக்கும் ஓட்டுக்கும் இடையில் தங்குவது தடுக்கப் படும். இருப்பினும் சில நேரங்களில். சிறு மணல் போன்ற பொருள்கள் இந்த இடத்தில் தங்க நேரலாம். அச்சமயங்களில் இத்தகைய துகளைச் சுற்றி நேக்ரியஸ் அடுக்கு உண்டாகிறது. இதுவே சிலகாலத்தில் முத்தாக மாறும். முத்துகள் பொது வாக மூன்றாண்டுகளில் முதிர்ச்சியடைகின்றன. பாதம். பொதுவாக, கலப்பைக் காவிகளின் பாதம் ஆப்பு அல்லது கலப்பை வடிவுடையதாகும். இருப்பினும் கலப்பைக்காலிகளின் பல்வே வறு பழக் கங்களைப் பொறுத்து இத்தோற்றம் வேறுபடும். நியுகுலாவில் பாதம் தட்டையாகவும், மைட்டிலசில் உருளை வடிவாகவும், கார்டியத்தில் நீண்டு வளை வாகவும் காணப்படும். ஆஸ்டிரியா என்னும் ஒருவகைச் சிப்பியில் பாதம் இல்லை. மைட்டிலஸ் போன்றவற்றின் பாதத்தில் ஒருவகைச் சுரப்பிகள் காணப்படுகின்றன. இச்சுரப்பிகள் கான்க்யோலின் என்னும் ஒருவகைப் பொருளாலான நூலிழைகளைச் சுரக்கின்றன. இந்நூலிழைகள் வேர்களைப் போன்று அமைந்து இந்த உயிரினங்கள் தரையோடு ஊன்றிக் கொள்ள உதவுகின்றன. வை பிஸ்ஸஸ் எனப்படும். உள்ளுறுப்புத் தொகுதிகள்: உடற்போர்வையில் இருபகுதிகளிலும் உள்ளுறுப்புத் தொகுதிகள் (visceral mass) இணைகின்றன. இந்த இணைப்பிற்குப் புற முதுகில் ஒன்றும் புறவாயில் ஒன்றுமாக இரு தூம்புக் குழாய்கள் உள்ளன. வாயிற்புறத் தூம்புக்குழாயின் விளிம்பில் உணர்வு நீட்சிகள் நீண்டுள்ளன. புறவாயின் தூம்புக் குழாய் வழியாக நீர் உள்ளே இழுக்கப்படுவ தால் அதற்கு உள்ளிழுக்கும் தூம்புக்குழல் (inhalent siphon) என்றும், புற முதுகுத் தூம்புக் குழாய் வழி யாக நீர் வெளியேற்றப்படுவதால் அது வெளியேற்றும் தூம்புக் குழல் (exhalent siphon) என்றும் கூறப்படு கின்றன. இரு போர்வைகளுக்கு இடையில் காணப் படும் இடப்பரப்பைப் போர்வை உட்குழி (mantle cavity) என்பர். இதனுள் மென்மையான உள்ளுறுப் புத் தொகுதிகள் பாதுகாப்பாக உள்ளன. கலப்பைக் காலிகளுக்குத் தனியாகத் தலையென்று எதுவும் இல்லை இவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் செவுள் அல்லது சிப்பிச் செவுள் உள்ளது. செரிமான உறுப்பு கள் இரத்த ஓட்ட உறுப்புகள், கழிவு நீக்கும் உறுப்பு கள் இன உறுப்புகள் உறுப்புகள் ஆகியவை உள்ளுறுப்புத் தொகுதிகளாகும். உடற்குழி. உடற்குழி மிகவும் குறுகியதாகும். உடலின் முதுகுப்புறத்தில் இதயத்தைச் சுற்றியுள்ள முட்டை வடிவமான இதயச் சுற்றறைக்குள் மிகவும் குறுகி உள்ள குழியே உடற்குழியாகும். பக்கத் உணவு மண்டலம். வாயின் ஒவ்வொரு திலும் இரு முக்கோண வடிவுடைய உணர்வு உதடு கள் இரு இரு பகுதியாகப் பிரிந்து குற்றிழைகளால் போர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய குற்றிழைகள் அலை போன்ற அசைவுகளால் நீரை உணவுத் துகள் களோடு வாய்ப்புறம் இழுக்க உதவுகின்றன. இந்த உயிரினங்களுக்குத் தாடைகள் இல்லை. வாய்த்துளை உணவுக் குழலோடு இணைந்துள்ளது. உணவுக்