உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 கவ்விகள்‌

822 கவ்விகள் லீகர் சுவ்வி (Leger grab). இது பீட்டர்சன் கவ்வியை ஓரளவு ஒத்திருந்தாலும், இதன் வாளி களும், விடுவிப்பு இயக்கமும் முன்னதிலிருந்து மாறு பட்டுள்ளன. கவ்வியின் இரு வாளிகளும், இரு பக்கங் களிலும் பக்கத்திற்கு ஒன்றாக ஓர் இரும்புப்பட்டை யால் திறந்து வைக்கப்படுகின்றன. கவ்வி, திறந்த வாளிகளோடு தரையைத் தட்டும்போது. ஒரு வாளியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு பக்க முனைப் பட்டையும், அடுத்த வாளியில் பொருத்தப்பட்டுள்ள எதிர்முனைப்பட்டையும் விடுவிக்கப்படுவதால், வாளி கள் மூடிக் கொள்வதற்கு ஏற்ற நிலையை கின்றன. வாளிகள் மூடும்போது அவற்றின் எடையில் ஒரு பெரிய கல் போன்ற பொருள் தற்செயலாக அகப்பட்டு வாளிகள் மூடிக்கொள்வதைத் தடுத்து நிறுத்தினாலும், முன்பே வாளிகளுக்குள் அகப்பட்ட சேறு வெளியே போகாதவாறு க்கவ்வியின் வாளி கள் அமைக்கப்பட்டுள்ளன. அடை ஃபார்ஸ்ட் பீட்டர்சன் கவ்வி. (Foerst petersen grab), இக்கவ்வி பீட்டர்சன் கவ்வியில் உள்ளது போன்ற வாளிகளையும், கல்வியில் வான்வீன் உள்ளது போன்ற நெம்புகோல் புயங்களையும் கொண்டுள்ளது. கவ்வியின் வாளிகளை மூடுவதற்குரிய நெம்புகோல் புயங்களை இயக்குவதற்கு ஓர் உலோகத்தண்டு பயன்படுகிறது. கிலாசன் கவ்வி. (Klassen grab). இக்கவ்வியின் வாளிகள் அரை உருளை வடிவத்தைக் கொண் டுள்ளன. வாளிகள் திறந்த நிலையில் தரையை அடைந்ததும் ஒரு தனி வடக்கயிறு விடுவிப்புப் பகுதியையும் நெம்புகோல் புயங்களையும் இயக்குவ தால் வாளிகள் மூடப்படுகின்றன. செகி அடிமட்டக் கவ்வி (Seki bottom garab). ஆழ மற்ற பகுதிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய இக்கவ்வி, 500 கன செ. மீ. கொள்ளளவைக் கொண்டுள்ளது. இரு வாளிகளின் ஓரத்திலும் பற்கள் உள்ளமையால் வாளிகள் மூடும்போது நன்றாகப் பிணைப்புறு கின்றன. இரு வாளிகளும் திறந்த நிலையில் வைக்கப் படுவதற்கு உலோகத் தண்டுகள் உதவுகின்றன. 10 13 14 படம் 10. எமரி கவ்வி எமரி கவ்வி (Emery grab). இது வான்வீன் கவ்வியை ஒத்துள்ளது. இதன் கொள்ளளவு 2000கன செ. மீட்டராகும். 11 12 படம் 11. ஃபார்ஸ்ட் பீட்டர்சன் கவ்வி படம் 12. கிலாசன் கவ்வி படம் 13.செகி அடிமட்டக்கவ்வி படம் 14. உல்ஸ்கி கவ்வி உல்ஸ்கி கவ்வி (lsky grab). இக்கவ்வியின் வாளி கள் இயக்கப்படுவதற்கு இரும்புத் தகடுகள் அடங்கிய பளுவான இரு பித்தளைக் கோப்பைகள் துணைபுரி கின்றன. இக்கவ்வி ஆயிரம் மீட்டருக்கும் மேலாக உள்ள தரைப்பகுதியிலிருந்தும் மாதிரிப் பொருள் களை எடுக்க வல்லது. எக்மன் கவ்வி (Ekman grab). மென்மையான தரைப்பகுதிகளுக்கேற்ற இக்கவ்வி, முதன்முதலாக நன்னீர் நிலைகளில் பயன்படுத்தும் பொருட்டுக் கண்டுபிடிக்கப்பட்டாலும், பின் கடலிலும் இது பயன் படுத்தப்பட்டது. பெட்டி போன்ற வடிவத்தையும், குடைந்தெடுக்கக்கூடிய இரு வாளிகளையும் இக்கவ்வி கொண்டுள்ளது. முள்களில் சேர்க்கப்பட்டுள்ள சங்கிலி