842 கழிமுகம்
842 கழிமுகம் வரப்படும் நீரில் உணவுச்சத்துப் பொருள்கள் இருப் பதால், கழிமுகங்களின் உற்பத்தித் திறன் மிகுதி. ஆனால் நீரின் இயல்பு எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால், சிலவகை உயிரினங்களே அங்கு வாழ முடியும். அவை எப்போதும் மாறி வரும் உப்பு மற்றும் வெப்பத் தன்மைகளைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. புவியில் உயிரினங்கள் தோன்றியதே கழிமுகங்களில்தான் என்று உயிரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். உயிரினம் கடலில் தோன்றியிருந்தாலும், பல இலட்சக்கணக் கான ஆண்டுகளுக்குப் பின் கழிமுகங்கள் வழியாக உயிரினங்கள் நிலப்பகுதியை அடைந்து நன்கு வாழத் தொடங்கின என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சில மிசிசிபி கழிமுகம். உலகிலுள்ள அனைத்துக் கழி முகங்களிலும் மிசிசிபி நதியால் உண்டாக்கப்பட்டதே மிகப்பெரியதாகும். தொடக்ககாலத்தில் இக்கழிமுகத் 2 3 5 நைகர் நிதி 00 8 படம் 4. நைகர் படிவுகள் 1 உயர்ந்த - மேடுகள்:4 வண்டல் சமவெளி, மணற் பொதிகள், கால்லாய்; சதுப்புநிலம், ஓதச்சமவெளி; 4- கடற்கரை மணல் சமவெளி; B-கடற்கரைகள்; 16. கழிமுகத்தளம்; 7-வெளிப்புற மேற்படுகைகள்: 8 அடிப் படுகைகள் : ஒ -முன்னர் இருந்த சுடற்தளம் தின் மணற் பள்ளத்தாக்கு இல்லினாய்ஸ், கெய்ரோ நகருக்கு அருகிலே அமைந்து இருந்தது. கழிமுகத்தின் சமவெளி பல துணை நதிகளைக் கொண்டுள்ளது. மிசிசிபியின் கழிமுகம் எண்ணற்ற நுண் துகள்களையும், பெரும்பகுதிக் களிமண் இடைப்பட்டதான மணற் பொதிகளையும் கொண்டு அமைந்துள்ளது. இவை நீரின் வேகத்தால் கழிமுகத்தின் வெளிப்புறமாகப் படிகின்றன. மிசிCH கழிமுகம் பறவைக் கால் (bird foot) வடிவத்தில் அமைந்துள்ளது. (படம்-2, படம்-3). அட்சபாலையாவால் பெரும் துணை நதியான பற்பல படிவுகள் இக்கழிமுகத்தின் கீழ்த்தளங்களில் படிந்துள்ளன. இக்கழிமுகத்தின் பரப்பு, சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளது. துணை நதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், உண்டாகும் பெரும் மணற்பரப்பு இக்கழிமுகத்தின் பக்கவாட்டுப் பகுதி களில் காணப்படுகிறது. நைகர் கழிமுகம். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைகர் நதியால் உருவாக்கப்பட்ட நைகர் கழிமுகம் உலகிலுள்ள முக்கிய கழிமுகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கழிமுகம் சமச்சீரான வட்ட மான பரப்பைக் கொண்டுள்ளது. இதன் படிவுகள் சீரான முறையில் நதி நீரின் குறைந்த வேக நீரோட் டத்தால் அமையும். இந்நதி, துணை நதிகளின் படிவு களையும் கடலில் படியச் செய்வதன் மூலமாகக் கினியா வளைகுடா உருவாகத் துணை புரிகிறது. மிசிசிபி நதியைப் போலவே இந்நதியும் துணைக் கால்வாய்களையும் (channel) மணற் பொதிகளையும். குளங்களையும் (swamp) கொண்டுள்ளது (படம்-4). ஒரினாகோ கழிமுகம். தென் அமெரிக்காவின் பெரிய கழிமுகங்களில் இதுவும் ஒன்றாகும். ஓரினாகோ கழிமுகத்தில் காணப்படும் நுண்துகள் படிவுகள், அகன்ற வடிநிலப் பகுதியாலும், வடதிசை யில் பாயும் வடதுருவ நீரோட்டத்தாலும் உரு வானவை. இப்படிவுகள் அமேசான் நதியால் கைவிடப் பட்ட நுண் படிவுகளேயாகும். கழிமுகத்தின் வட பகுதி, நீண்டு ஈரமான மணற் பரப்பையும், இடங்களில் மண் மேடுகளையும் கொண்டுள்ளது. இந்த நீண்ட மண் பரப்புகள் தோன்றுவதற்கு மிகப் பெரிய அலைகள் இல்லாமையே காரணமாகும். கழிமுகத்தின் தெற்குப் பகுதி கைவிடப்பட்ட நிலை யில், எண்ணற்ற கழிமுகங்களைக் கொண்டுள்ளது. இக்கழிமுகங்களில் குறைந்த அளவிலேயே படிவுகள் தோன்றுகின்றன, சில கழிமுகத்தின் உட்பகுதி மணலையும், களி மண்ணையும் (alluvial sand and clay) வெளிப்பகுதி சதுப்பு நில மண்ணுடன் கூடிய களிமண்ணையும் கொண்டுள்ளன. மண் மேடுகள் இக்கழிமுகத்தின் தென்பகுதியைத் தவிரப் பிற இடங்களில் பரவியுள் ளன. உலகில் இன்று அமைந்துள்ள 150-க்கும் மேற் பட்ட கழிமுகங்கள் அனைத்தையும் நதியாலோ பெரு வெள்ளத்தாலோ ஏற்பட்டவையாகக் கொள்ள முடி யாது. சில இடங்களில் காணப்படும் கழிமுகங்கள், முன்னர் புவியில் நிகழ்ந்த பனிக்கால மாற்றத்தாலும். கடல்நீர் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வாலும் உரு வானவை. இவை மிக ஆழமாக உருவாகியுள்ளன. இதற்கு அமேசான் கழிமுகத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் (படம்-5). கழிமுகங்களில் காணப்படும் படுகைகளில் இடத் திற்கு இடம் தடிமன் வேறுபடுகிறது. நைல் நதி உருவாக்கியிருக்கும் படிவுகள் 50 அடி தடிமனானவை. 4