உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கனநீர்‌

86 கனநீர் ! லூயிஸ். டோனால்ட் என்போர் சிறிதளவு காரம் கலந்த நீரை நீண்டநேரம் மின்னாற்பகுத்துக் கன நீரைப் பெற்றனர். மிகக் பண்புகள் H,O மூலக்கூறு நிறை 18.015 H,'O (D,O) 20.028 குறைந்த உருகுநிலை, °C 0.00 3.81 மின் கொதிநிலை, °C 100.00 101.42 உயர் அடர்த்தியில் வெப்பநிலை, °C 3.98 11.23 அடாத்தி கிடைக்குமிடம், மழைநீரில் அளவிலும், சூரிய ஒளியால் உருகியபின் பெரும் பனிப் பாளங்களில் எஞ்சும் நீரில் சிறிதளவும், நீரை னாற்பகுக்கும்போது மிஞ்சும் எச்சத்திலும் கனநீர் உள்ளது. சாதாரண நீரில் டியூட்டீரியம் 0.0145% வரையுள்ளது. காரம் கலந்த நீரைத் தொடர்ச்சியாக மின்னாற்பகுத்தும், நீரைக் காய்ச்சி வடித்தும் வேதிப் பரிமாற்ற முறையினால் கனநீரைப் பெறலாம். மின் னாற்பகுத்தலாலும், காய்ச்சி வடித்தலாலும் மிகக் குறைந்த அளவில் கனநீர் கிடைத்தாலும், இதற்குத் தேவையான ஆற்றல் மிகுதியானதாகும். வேதிப் பரி மாற்ற முறையில் நீரினுள் உயர் அழுத்தத்திலுள்ள ஹைட்ரஜன் சல்ஃபைடு வளிமம் 120°C வெப்பநிலை யில் செலுத்தப்படுகிறது. இதனால்ஹைட்ரஜன் சல்ஃ பைடிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் நீரிலுள்ள கன ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாகப் பதிலீடு செய்யப்படுகின்றன. இப்பரிமாற்றத்தால் விளையும் 2H,S + HDO + D,O → HDS + H,S + 2H,O வளிமங்கள் குளிர்விக்கப்பட்டு 28°C வெப்பநிலை யிலுள்ள நீரினுள் செலுத்தப்படுகின்றன. 2H,O + D, S + HDS → HDO + D,O + 2H,S மேற்காணும் மாற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்த் தப்படுகின்றன. இதனால் 12% D,0 உள்ள நீர் கிடைக்கிறது. இதைக் காய்ச்சி வடிக்கும்போது 90% D, 0 நீரும், மின்னாற்பகுக்கும் போது 99.8% D,0 நீரும் கிடைக்கின்றன. இயற்பண்புகள். கனநீர் சாதாரண நீரைப் போலவே நிறம், மணம், சுவையற்ற நீர்மமாகும். கனநீரின் இயற்பண்புகள் சாதாரண நீரின் இயற் பண்புகளை விட மிகுதியானவை. கனநீரின் உயர் உருகுநிலை, கொதிநிலை, மிகு பாகுத்தன்மை, அடர்த்தி போன்றவை சாதாரண நீரின் அமைப்பை விட மிகுதியான ஹைட்ரஜன் பிணைப்பால் பிணைக் கப்பட்டுள்ளதையும், அப்பிணைப்புகள் மிகவும் வலிமை வாய்ந்தவையாக உள்ளதையும் காட்டு கின்றன. அட்டவணையில் சாதாரண நீர், கனநீர் ஆகியவற்றின் சில இயற்பியல் மாறிலிகள் ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளன. கனநீர் உயிர்த் திசுக்களைப் பாதிக்கும் தன்மை காண்டது. கரைபொருள்கள் நீரில் கரைவதைவிடக் கனநீரில் குறைவாகக் கரைகின்றன. வெப்பநிலை மிகும்போது கனநீரிலுள்ள பிணைப்புகள் சாதாரண நீரிலுள்ள பிணைப்புகளைவிட வேகமாகப் பிளவுறு (25°C, கி/க. செ3) நிலைமாறுமாறிலிகள்] வெப்பநிலை. °C (critical constants) அழுத்தம், mpa பாகுத்தன்மை 0.99701 1.1044 374.1 371.1 22.12 21.88 (55°C, mpa.s) 0.8903 1.107 ஒளிவிலகல் எண், (D) .20 1.3330 1.3283 தன்வெப்பம் 1.018 1.000 கின்றன.H'1 இன் அணுக்கருச் சுழற்சி}: H', இன் அணுக்கருச் சுழற்சி 1. எனவே இவ்விரண்டு ஐசோ டோப்புகளையும் அணுக்கருக் காந்த உடனிசைவு நிரலியலில் (N.M.R. spectroscopy) பயன்படுத்தலாம். வேதிப் பண்புகள். கனநீரை மின்னாற்பகுத்தால் கன ஹைட்ரஜன் வெளியாகிறது. நீரால் கனிம குளோரைடுகளும், உப்புகளும் பிரிகையடைவது போலவே கனநீராலும் பிரிகையடைகின்றன. இதற் குக் கனநீராற் பிரிகையடைதல் (deuterolysis) என்று பெயர். கணநீர் பல ஹைட்ரஜன் சேர்மங்களுடன் வினை புரிகிறது. இவ்வினைகளில் ஹைட்ரஜன் சேர்மங்களி லுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் கன ஹைட்ரஜ னால் பதிலிடப்படுகின்றன. H,O, + D, 0 → D, 0, + H,O ― மனித உடலிலுள்ள நீர்மங்களில் மூன்றில் ஒரு பங்கைக் கன நீரால் பதிலீடு செய்வதால் மரணம் நேரிடலாம். இதேபோல் மூன்றில் இரண்டு பங்கு கனநீரை ஒரு தாவரத்துள் செலுத்துவதால் தாவரம் அழிந்துவிடும். அமில நீரிலிகளுடன் இது வினைபுரிந்து அவற்றை யொத்த டியூட்டிரோ அமிலங்களைக் கொடுக்கிறது. SO, + D,0 + D,SO, . டியூட்டிரோ சல்ஃப்யூரிக் அமிலம்