உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கனற்சி நிறமாலையியல்‌

94 கனற்சி நிறமாலையியல் படுகிறது. பின் எந்தவிகித ஐசோ ஆக்டேன் - இயல்பு ஹெப்டேன் கலவை. அவ்வாறு உதைப்புக் கொடுக் கின்றது என்பதை அறிவர். அக்கலவையிலுள்ள ஐசோ ஆக்டேன் எத்தனைச் சதவிகிதம் கலந்துள்ள தோ அதுவே அப்பெட்ரோலின் ஆக்டேன் எண் என்பதாகும். சீட்டேன் எண். பெட்ரோல் எரிபொருளுக்கு ஆக்டேன் எண் குறிப்பிடப்படுவதைப் போல் டீசல் எரிபொருளுக்குச் சீட்டேன் எண் (cetane number) கொடுக்கப்படுகிறது. எந்தச் சீட்டேனும், K-மெத்தில் நாப்தலினும் கலந்த கலவை, ஆய்வின் கீழ் உள்ள டீசலுக்குச் சமமான உதைப்புக் கொடுக்கிறதோ, அதில் சீட்டேனின் சதவிகிதம்தான், அந்த எரி பொருளின் சீட்டேன் எண் ஆகும். எஸ். ராஜேந்திரன் நூலோதி.S.P Sharma & Chander Mohan, Fuels and combustion, Tata Mc-Graw- Hill Publi- shing Company Limited, New Delhi, 1987. Baumeister, A. Baumeister III Avallone, Standard Mark's Hand Book for Mechanical Engineers, Eighth Edition, McGraw - Hill Book Company, New York, 1978. கனற்சி நிறமாலையியல் கனற்சி நிகழ்வில் குறுக்கிடாமலேயே வெப்பச் சுடர் பற்றிய விவரங்களைப் (data) பெறும் ஓர் ஆய்வு. கனற்சி நிறமாலையியல் (combustion spectroscopy) ஆகும். வெப்பச் சுடரில் உமிழப்பட்ட அல்லது உட்கவரப்பட்ட ஒளியின் நிரலானது. வெப்பச் சுடரில் உள்ள பொருள்களின் இயற்பியல் பண்புகள் எனப்படுகின்றன. கனற்சி இயலை விவரிக்கவும் சுடரின் வெப்பத் தைத் தீர்மானிக்கவும் சுடர் நிரல்கள் பயன்படு கின்றன. எவ்வகை அளவை தேவைப்படு கின்றதோ அதற்குத் தகுந்தவாறு நிறமாலையியல் உத்திகள் (spectroscopic techniques) பயன்படுத்தப் படுகின்றன. கோடு மாற்ற முறை என்பது வெப் பத்தை அளக்கும் உத்தியாகும். இதில் வெப்பத்தால் கிளர்ச்சியூட்டப்பட்ட உலோக அணுக்களின் கதிர் வீச்சுத் திண்மை (intensity) கட்டுப்படுத்தக்கூடிய ஒளிர்மை (brightness) கொண்ட கறுப்பு விளக்கின் கம்பி இழைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. கதிர் வீச்சைப் பிரிக்க வடிகட்டும் தன்மை கொண்ட ஒரு கருவியால் இதைக் கையாளலாம். வளிம் அல்லது நீர்ம எரிபொருள்களில் சிறிய அளவுகளில் சோடியம் உப்பைச் சேர்க்கும் உத்தியைச் எ.கா: சோடியம் கோடு மாற்றம்(sodium line reversal) என்பர், கனற்சி மாற்ற இடைநிலைகளின் (intermediates) பட்டை நிறமாலை, பல கீற்றுப் பளிங்கு அல்லது பட்டகத்தின் நிறமாலையியல் மூலம் அறியப்படுகிறது; சில சமயங்களில் மிக நுட்பமாகப் பிரித்தறிய அலைக்குறுக்கீட்டு அளவி (interferometer) பயன்படு கிறது. ஒளிமின் பெருக்கிக்குழல்கள் (photomultiplier tubes) அல்லது புகைப்படக் கருவிகள் மூலமாகச் சிதறிய கதிர் வீச்சுகள் புலப்படுத்தப்படுகின்றன. ஒரே சமயத்தில் பலவகை அலைநீளங்களின் நிரல்களைப் பதிவு செய்வதில் புகைப்படக்கருவி சிறப்பானது. ஒரு குறிப்பிட்ட கோடு பற்றி அறியவேண்டு மானால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒளி மின் பெருக்கிக் குழல்களைப் பயன்படுத்திக் குறிப் பிட்ட கோட்டின் ஒளிர்மையைப் பதிவு செய்யலாம். ஒரு புகைப்படக் குழலையும் பிளவையும் (slit) நிரல் கதிர்வீச்சின் குவியத்தோடு (focus) நகர்த்தி, ஒரு தொடர் நிரல் வரியோட்டத்தை (scan) ஏற்படுத்த லாம். அதை ஓர் அலைகாட்டியிலும் (oscilloscope) படமாகக் காட்டலாம். சுழன்று அதிர்வதன் மூலம் ஏற்படும் மூலக்கூறு களின் அளவிட்ட (quantised) ஆற்றல் மாற்றங்க ளோடு, வெப்பச் சுடரின் பட்டை நிறமாலையும் ஒன்றியுள்ளது. ஒரு பட்டை நிறமாலையில் ஒவ்வொரு நிரல் கோடும், தொடர்ச்சியற்ற (discrete) ஆற்றல் அளவைக் குறிக்கிறது. வெப்பச் சமநிலை யிலும் வெவ்வேறு ஆற்றல் அளவுகளிலும் மாக்ஸ் வெல்-போல்ட்ஸ்மேன் பகிர்வு என்னும் முறையில் மூலக்கூறுகளின் பகிர்வு காணப்படுகிறது. வளிமங் களின் இயக்கக் கொள்கையின்படிக் (kinetic theory) கூறினால். ஆற்றல் நிலைகளைக் கொண்ட மூலக் கூறுகளின் இயக்கச் சமநிலை எனலாம். ஆற்றல்நிலை மாறுதல் அடையும்போது, ஒளியின் கதிர் வீச்சைக் கொண்டு மூலக்கூறுகளின் எண்ணிக்கையை அளக்க லாம். இந்தப் பட்டை நிறமாலையின் களிலிருந்து சுடரின் வெப்பத்தையும் மாறும் நிலைகளையும் முடிவு செய்யலாம். அளவு டை டி.இந்திரன் நூலோதி.S.P . Sharma & Chander Mohan Fuels and combustion, Tata McGraw- Hill Publi- shing Company Limited, New Delhi, 1987. கன ஹைட்ரஜன் ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளான டியூட்டெரிய முழ் (deuterium) ட்ரைட்டியமும் (tritium) கன