கனிமக் கட்டமைப்பு 123
அட்டவணை 1 கனிமக் கட்டமைப்பு 123 கூட்டுப்பொருள் எடை% ஆலிவின் கனிமத்தைக் கணக்கிடும் முறை அலகறை (unitcell) அலகறை வரிசை அணுத்திரள் எடை (atomic weight) அணுத்திரள்கள் (unit cell atoms) (order) Si 0, 32.7 3 240.45 5,44 4.00 4.00 FeO 53.22 390.99. 2.57 8.01 8.00 MgO 14.12 103.73 100.07 735.17 மாறியும் அமைந்திருக்கலாம். இடவெளிக்குழுவின் அச்சுருவநிலையைப் பொறுத்து இவ்வமைப்பு மீண்டும் காணப்படும். எடுத்துக்காட்டாக ஒரு கனி மத்தின் வரிசை வாய்பாட்டைக் கீழ்க்காணுமாறு கொள்ளலாம். (Ac) (Bb)... (PP) இவ்வாய்பாட்டில் உள்ள ஒவ்வோர் அடைப்புக் குறிக்குள்ளும் தனித்தன்மை வாய்ந்த அணுநிலைகள் உள்ளன. இந்நிலைகளில் பெரிய எழுத்து அந்தத் தனிமம் இருப்பதைக் காட்டும். சிறிய எழுத்து அந்தத் தனிமம் எத்தனைமுறை மீண்டும் மீண்டும் அணு வமைப்பில் காணப்படுகிறது என்பதைக் காட்டும். சிறிய எழுத்துக்கள் தம்மிடையே ஒரு பொதுவான மடங்கில் அமைந்திருந்தால் அவை காரணியப்படுத்தப் பட்டு அவற்றின் வாய்பாடு எழுதப்படும். பொதுவாக ஒரு வரிசை வாய்பாடு 50% அணுத்திரளுக்கு மேலாக அமைந்த தனிம அணுக்களின் வழியாகத் திருத்தி அமைக்கப்பட்டு அடைப்புக்குறிக்குள் எழுதப்பட்டி ருக்கும். இவ்வாறு எழுதப்பட்ட படிகக் கட்டமைப்பு மாதிரியை ஒரு வரிசை வாய்ப்பாட்டின் அலகுகளுடன் ஒப்பிட்டுக் கனிமத்தின் இயைபு அறியப்படுகிறது. வரை கனிம வகையின் இந்தக் கட்டுப்பாடான முறை மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் குறிப் பிட்ட ஒரு கனிமம் தொடரான வேதியலடக்கத்தில் அடங்கலாம். தொடரான வேதியலடக்க வேறு பாட்டால் ஒரு கனிமத்தொடர் உருவாகிறது. இத் தொடரின் முதலிறுதிக்கனிமங்களின் வேதியலடக்கத் தைக் கொண்டு கட்டளைக் கனிமங்களின் வேதிய லடக்கம் உறுதிசெய்யப்பட்டுப் பெயரிடப்படுகிறது. இவ்வுண்மையை ஆலிவின் கனிமத் தொடரின் வேதியலமைப்பைக் கொண்டு விளக்கலாம். ஆவிவின் கட்டமைப்பு மாதிரி வாய்பாடு M M{9) TO. Fe இதில் M{4 மற்றும் M ஆகியவை இரு ஒத்த படிகஉருவுடைய எண்முகமைய இடங்களாகும்.T என்பது தனித்த நான்முனைப்பிணைவுமையம், ஆக்சி ஜன் எதிரயனி அறுகோணத்தில் நெருக்கப் பொதி வின் கட்டமைப்பிலிருக்கும். ஆக்சிஜன் அயனிகளைப் பொதிந்தபின் விடப்பட்டுள்ள காலியிடங்களில் அறுமுனைப் பிணைவுள்ள அயனிகளும் நான்முனைப் பிணைவுள்ள அயனிகளும் அமைகின்றன. ஆலிவின் முதலிறுதிக் கனிமங்களாகப் பேயலைட்டும் { Si0,), போர்சுட்ரைட்டும் (Mg, SiO,) உள்ளன. ஆலிவின் தொடரில் இரும்பு மிகுதியாக இருந்தால் அதன் வாய்பாட்டை (FeMg ) SiO, என்றுஎழுதலாம். மக்னீசியம் இரும்பைவிட மிகுதியாக இருந்தால் (Mg Fe), SiO, என்று எழுதலாம். ஆலிவின் கனிமத்தில் இரும்பு மக்னீசியம் அனைத்துவகைத் தொடர்பிலும் கலந்திருந்தால் ( Fe Mg), SiO, அல்லது (Mg Fe), SiO, என்று எழுதலாம். இந்நிலையில் எண்முக அல்லது அறுகோணப்பிணைவிலுள்ள நேரயனிகள் ஒழுங்கற்ற தன்மையில் அமையலாம். இரும்பின் இடநிலை தெரி យ யாதபோது எக்ஸ் கதிர் சிதறல் கோலத்தின் மூலம் அல்லது வேதிப் பகுப்பின் மூலம் அதன் இடநிலை யைக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட கட்டமைப்பு மாதிரியில் பலவகை யான தனிம அணுக்கள் இடம் பெறலாம். அதனால் ஒரு சில கனிமங்கள் ஆலிவினில் இரும்பு மக்னீசியம் பங்கேற்பது போல ஒத்தபடிக உருவைக் கொண்ட திண்மக்கரைசல் தொடரை உண்டாக்கலாம். வேறு சில கனிமங்கள் ஒத்த கட்டமைப்பு மாதிரியாக அமைந்தாலும் அவற்றிடையே முழுமையான திண்மக் கரைசல் தொடர் ஏற்படாது. இவ்வாறாகப் போர் சுட்ரைட்டுக்கும் தெப்ரைட்டுக்கும் (Mn, Sio,) இடையேயும், மோன்டிசிலைட்டுக்கும் (CaMgSiO) பேயலைட்டுக்கும் இடையேயும் குறிப்பிடத்தக்கவாறு திண்மக்கரைசல் தொடர்கள் தோன்றுவதில்லை. தெப்பரைட்டில் சிறிதளவு மக்னீசியமே உட்புகுகிறது. மான்டிசிலைட்டில் கால்சிய அயனியும், மக்னீசிய