உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கனி வெடித்தல்‌

152 கனி வெடித்தல் அறைவழி வெடி கனி தடுப்பு வெடிகனி தோன்றும் கனிகளுக்குப் பலபுற வெடிகனி என்னும் மற்றொரு பெயருமுண்டு. கனித்தோல் பிரிவடையும் வகையைப் பொறுத்து வெடிகனிகள் பலவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அறைவழி வெடிகனி (loculicidal capsule). கனித் தோல் ஒவ்வோர் அறையின் வெளி விளிம்பின் நடுப் பகுதியில் நீள்வாக்கில் வெடிக்கிறது. இதில் சூலக இலைகளின் எண்ணிக்கைப்படி நீள்வெடிப்புகள் உண்டாகின்றன. ஒவ்வோர் அறையிலும் விதை களின் இணைப்புக் காணப்படுகின்றது. கா. வெண்டை, பருத்தி. தடுப்பு வெடிகனி. (septicidal capsule). இதில் கனித்தோல் சூலகக் குறுக்குச் சுவரின் வழியாக நீள் வாக்கில் வெடிக்கிறது. இதனால் சூலக இலைகள் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. எ.கா அரிஸ்ட்டலோகியா. தடுப்புப் பிரி வெடிகனி (septicidal capsule). இக்கனியில் கனித்தோல் தடுப்புகளிலிருந்து முதலில் பிரிவடைந்து, தடுப்புகளை விதையுடன் மையத்தில் நிலைக்கச் செய்கிறது. இதற்குப் பிறகு, சுனித்தோல் அறைவழி வெடிகனி போன்று வெடித்தால் அதை அறை வழித் தடுப்புப்பிரி வெடிகனி (loculicidally (septifragal capsule) என்பர். எ.கா. வாகர்ஸ்ட் ரோமியா. சில தடுப்பு வெடிகனிகளில் கனிச்சுவர் வெடித்து, கீழிருந்து மேற்புறமாகப் பிரிகிறது. தடுப்பு, தடுப்புப் பிரி வெடிகனி விதைகளுடன் மையத்தில் நின்று விடுகிறது. இக் கனிக்குத் தடுப்பு வெடி, தடுப்புப்பிரி வெடிகனி (septi- cidally septifragal capsule) என்று பெயர். எ.தா. ஊமத்தை. வெடிகனி குறுக்கு வெட்டுத் தோற்றம் ஷைஸோகார்ப் லொமண்டம் கிரிமோகார்ப்