உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 காண்டால்‌

228 காண்டால் இவை தடித்தும். 'C' போன்ற வெண்மையான உடல் வடிவம் கொண்டும் காணப்படுகின்றன. எருக்குழி களின் ஆழத்தில் வாழும் இவ் இளவுயிரிகள். 100-180 நாளுக்குப் பிறகு கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன. மண்ணால் அமைக்கப்பட்ட அறைகளில் 10-15 நாள் இருந்து பின்னர் முதிரியாக மாறி வெளியேறுகின் றன். வாழ்க்கைச் சுழற்சி நிறைவுபெற ஏறக்குறைய 34 - 8 மாதங்கள் தேவைப்படும். வளர்ச்சியடைந்த வண்டு ஏறக்குறைய 10 மாதங்கள் வரை உயிர் வாழ் (sco.ia கிறது. ஸ்கோலியா ஃப்ளேவிஃபிரான்ஸ் flavifrons) என்னும் இனத்தைச் சார்ந்த குளவியின் இளவுயிரிகள், காண்டாமிருக வண்டுகளின் இளவுயிரி கள் மீது புற ஒட்டுண்ணிகளாக (ectoparasites) வாழ் கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். கட்டுப்படுத்தும் முறைகள். தென்னை போன்ற பயன்மிகு மரங்களை மிகுதியும் தாக்குவதால் இவ் வண்டுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பல வழிகள் கையாளப்படுகின்றன. அவற்றில், பயனற்ற மரத் துண்டுகள் வண்டுகளின் வளர்ச்சிக்கு ஏற்ற பொருள் களாக இருப்பின் அவற்றை அப்புறப்படுத்துதல், எருக்குழிகளில் வாழும் புழுக்கள் சூரிய வெப்பம் தாங்காமல் அழிந்துவிட ஏற்ற எருக்குழிகளை அவ் வப்போது புரட்டிப் போடுதல், 0.1% BHC அல்லது கார்பரில் தூளைக் குழிகளில் தூவுதல் மூலம் புழுக் களை அழித்தல், BHC தூளுடன் மணலைச் அளவில் கலந்து தென்னை மரக்கூட்டு இலைக்காம் பின் பகுதியில் பயன்படுத்தி வண்டுகள் தங்கா வண்ணம் செய்தல் என்பவை குறிப்பிடத்தக்கவை யாம். சம எம்.சுப்பிரமணியம் நூலோதி. A.D. Imms, 4 General Text Book of Emtomology, Asia Publishing House, Bombay, 1963. காண்டால் டீ-காண்டால் (de condolle) குடும்பம் என்பது பிரான்ஸ் நாட்டிலிருந்து அகதிகளாக ஸ்விட்சர் லாண்டிலிருந்து ஜெனிவாவில் குடியேறிய ப்ராடெஸ் டண்ட் கிறிஸ்துவர்களைக் குறிக்கும். இக்குடும்பத் தின் நான்கு தலைமுறையினர் தாவரவியலில் ஈடு பட்டனர். அகஸ்ட்டின் பிராமஸ் டீ காண்டால் (Pyramus De Condolle) என்பாரில் (D.C) தொடங்கி அவருடைய மகன் அல்ஃபான்ஸ் லூயிஸ் பியரி, பிராமஸ் டீ காண்டால் (AD(), அவருடைய பெயரன் ஆன்னி காஷ்மீர் பிராமஸ்டீ காண்டால் (CDC) கொள்ளுப்பெயரன் ரிச்சர்ட் எமிலி அகஸ்ட்டின் டீ. காண்டாலோடு முடிவடைகிறது. இவர்கள் சையாண்ட ஹெர்பேரியத் தாள்களும் நூல்களும் இன்றும் ஜெனிவாவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல டீ காண்டால் என்பது பொதுவாக அகஸ்ட்டின் பிராமஸ் காண்டாலையே குறிக்கும். அவர் ஜெனிவாவில் 1778 இல் பிறந்து, 1778 இல் பிறந்து, பாரிஸ் நகரில் டெஸ்ஃபாண்டனீஸ் என்பாரிடம் பயிற்சி பெற்றார். பிறகு 1798-1808 வரை பாரிஸ் பொருட்காட்சிச் சாலயிைல் பணியாற்றிக் கொண்டு, தாவரச் சேகரிப்புப் பயணங்களை மேற்கொண்டார். அப் போது சதைப்பற்றுத் தாவரங்கள் என்னும் வண்ணப் படங்களோடு கூடிய நூலை வெளியிட்டார். மேலும் லாமார்க் வெளியிட்ட பிரான்ஸ் நாட்டுத் தாவர வளம் என்னும் நூலைத் திருத்தி அதன் மூன்றாம் பதிப்பை வெளியிட்டார். பின்னர் 1808-1846 வரை மாண்ட்பிலியர் நகரில் தாவரவியல் பேராசிரியராக இருந்தார். பாரிஸில் இவர் முன்பு சேகரித்த தாவரங்களைக் கொண்டு தியோரி எலிமென்டேர்-டீ-லா-பாட்டனிக் என்னும் நூல் வடிவில் 1813 இல் இவர் செய்த வகைப்பாடு வெளியிடப்பட்டது. குடும்பங்கள் விளக்கப்பட்டுள்ளன. இதில் 161 1815 1841 வரை ஜெனிவா நகரில் உயிரியல் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பல தாவரவியல் தொடர் கட்டுரைகளை வெளி யிட்டார். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது பிராடிரோமஸ் சிஸ்டமேடிஸ் நேச்சரேலிஸ் ரெக்னி வெஜிடாபிலிஸ் என்பதாகும். அந்நாளில் தெரிந்த அனைத்துத் தாவரச் சிற்றினங்களையும் விளக்கத் தொடங்கி முதல் ஏழு தொகுதிகளை வெளி யிட்டார். மரணத்திற்குப் பிறகு இவர் மகனான அல்பான்சோ டீ காண்டாலைப் பதிப்பாசிரியராகக் காண்ட 33 அறிஞர்கள் குழு எஞ்சிய பத்துத் தொகுதிகளை எழுதி முடித்தது. இவர்கள்தம் ஆய்வில் இருவித்திலை, விதைமூடாத்தாவரங்களின் 5134 இனங்களும், 58,975 சிற்றினங்களு குறிப்பிடப்பட்டன. அவை 214 குடும்பங்களில் வகைப்படுத்தப்பட்டன. ம் பிரோடி . டீ காண்டாலின் ரோமஸ் வெளிவந்தவுடன் அது படிப்படியாக லின்னயஸ் வகைப்பாட்டை விஞ்சியதுமன்றி, இயற்கை வகைப்பாட்டிற்கு வழியும் வகுத்தது எனக் கூறலாம். லின்னயஸ் தம் வகைப்பாட்டில் 7,700 சிற்றினங்களுண்டு என்றும், உலகில் மொத்தம் 10,000 சிற்றினங்களே இருக்கலாம் என்றும் கருத்து வெளியிட்டார். ஆனால் பிரோடிரோமஸ்ஸில் ஏறத்தாழ 59,000 சிற்றினங்கள் விளக்கப்பட்டன. இல் வெளியிட்ட முதல் அகஸ்ட்டின் 1813 ஒப்பீட்டுப் புறவியலைச் (comparative சீர் morphology) சார்ந்த முதல் கொள்கையான (symmetry) என்பது பற்றிய கருத்தை வெளி யிட்டுள்ளார். ஓர் உயிரினத்திலுள்ள உறுப்புகளின் நூலில்