270 காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி
270 காந்தப் பாய்து இயக்க மின்னாக்கி இயக்க மின்னாக்கி வெப்ப ஆற்றலை மின்னாற்ற லாக மாற்றும் ஒரு வெப்பப்பொறியாக இயங்கு கிறது. பிளாஸ்மாவின் திசைவேகமாகிய V மீட்டர்/ நொடி,X அச்சு வழியாகவும், காந்தப் பெருக்கு அடர்த்தியாகிய (magnetic flux density) B வெபர் மீட்டர்,Z அச்சு வழியாகவும் இருப்பதாகக் கொண்டால் தூண்டல் மின்இயக்கு விசை E வோல்ட் (E=-VXB), yஅச்சு வழியாக உண்டாகும்.இவ் வாறு தோற்றுவிக்கப்பட்ட மின் இயக்கு விசை வெளிப்புற மின்சுமையுடன் கூடிய ஒரு மூடிய சுற்று வழியுடன் (closed circuit) இணைக்கப்பட்டால், அந்த வெளிச்சுற்றில் மின்னோட்டம் ஏற்படும். இவ்வா கிடைக்கும் மின்னோட்டம் நேர் மின்னோட்டம் (direct current) ஆகும். காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கியில் கிடைக்கும் மின்திறன் W ஐக் கீழ்க் காணும் சமன்பாட்டின் மூலம் பெறலாம். WV B* K (1-K) இதில் σ பிளாஸ்மாவின் மின்கடத்துமை (electrical conductivity) (இதன் மதிப்பு 10-20 மோ/மீ). V = பிளாஸ்மாவின் திசைவேகம் (velocity) (இதன் அளவு 600-1000மீ/நொடி) B= B = காந்தப்பெருக்கு அடர்த்தி (magnetic flux density ) இதன் அளவு 5-6 டெஸ்லா (Tesla) K = மின்சுமைக் காரணி = ஈற்று மின்னழுத்தம் L மின்னியக்கு விசை (இதன் அளவு 0.7-0.8) W = வெளியீட்டுத் திறன் (output power) தன் அளவு 25-150 மெகாவாட்/மீ) சில பிளாஸ்மா. பொதுவாக வளிமங்களில் உள்ள எலெக்ட்ரான் ஊட்டங்கள் (charges) அவற்றின் உட் கரு (nucleus) ஊட்டங்களால் சமநிலைப்படுத்தப்படுவ தால், மின்னியலின்படி அவை நடுநிலைமை வாய்ந் தவை. வளிமத்தைச் சூடாக்கினால், வெளிப்புற எலெக்ட்ரான்கள் தாக்கப்பட்டு வெளிப்படுத்தப் படுகின்றன. இதனால் வளிம அணுக்களுக்கிடையே பன் மடங்கு மோதல்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு அனைத்து எலெக்ட்ரான்களும் நீக்கப்பட்ட உட்கரு இருக்குமாயின் வளிமம் மிக உயர் வெப்பநிலைப் பிளாஸ்மாவை அடைகிறது. இத்தகைய பிளாஸ்மா சூரியனின் உட்புறப்பகுதியில் தான் அடங்கியிருக்கும். ஏறத்தாழ 3000°C வெப்பநிலையில் வளி மங்கள் குறை வெப்பப் பிளாஸ்மா நிலையை அடை கின்றன. வரைபடம் 3 (அ) பிளாஸ்மாவின் மின் கடத்துமைக்கும், வெப்பநிலைக்குமுள்ள தொடர் பையும், வரைபடம் 3 (ஆ) அயனியாக்கப்படும் மடங்குக்கும் (degree of ionisation) பிளாஸ்மா கடத் துமைக்கும் உள்ள தொடர்பையும் காட்டுகின்றன. அயனியாக்கப்படும் மடங்கை 0. 1-1.0 வரை உயர்த்தி னால், பிளாஸ்மாவின் கடத்துமை 50%-80% வரை உயரும். எனவே பட்டறிவு மூலம் பார்க்கும் போது உயர்மடங்கு அயனியாக்கம் அவ்வளவுதேவை யானதன்று எனத்தெரிகிறது. மேலும் பொட்டாசியம் சோடியம் போன்ற கார உலோகங்கள்எளிதில் அயனியாக்கத் தக்கவை. இத்தகைய விரைவில் அயனியாக்கத்தக்க உலோகங்களைச் சிறிதளவு விதைகள் தூவுவது போல் தூவிச் சேர்ப்பதன் மூலம் வளிமத்தில் மின்கடத்துந்திறனைக் குறைந்த வெப்ப நிலையிலேயே அதிகரிக்கச் செய்யலாம். எனவே, -VXB y- 1, 1 மின்முனைகள் 2, 2, மின்காப்புச் சுவர்கள் படம் 2. காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கிக் குழாயின் அடிப்படை வடிவமைப்பு