368 கார்பன்
368 கார்பன் ஹைட்ரஜனுடனும் பிணைந்துள்ளன. நான்காம் ஆர்பிட்டால்கள் படத்தில் காட்டியுள்ளவாறு பை பிணைப்பை ஏற்படுத்த வளையமாகச் சுற்றிக் காணப்படுகின்றன. இவ்வரோமாட்டிக் பைபிணைப்பு களுடன், நீள் சங்கிலித் தொடர் சேர்மம் போல் இல்லாமல், பிற அணுக்களோ அணுத் தொகுதி களோ எளிதில் சேர்வதில்லை. வேதிவினைகள். சாதாரண வெப்பநிலையில் கார் பனின் அனைத்துப் புறவேற்றுமை உருவங்களும் மந்த மானவையாகவே உள்ளன. ஆனால் உயர் வெப்ப நிலையில் ஆக்சிஜனுடன் வினையுற்றுக் கீழ்க்காணும் ஆக்சைடுகளைத் தருகின்றன. 3C + 0, 2C + 0, C.0, (கார்பன் சப்ஆக்சைடு) CO (கார்பன் மோனாக்சைடு) CO,(கார்பன் டை ஆக்சைடு) c + 0, - மேற்குறிப்பிட்டுள்ள ஆக்சைடுகளை இவ்வாறு நேரடி யாகவும் வேறு பல முறைகளிலும் எனிதில் பெறலாம். நன்கு தூளாக்கப்பட்ட கார்பனைச் சுவாலை அல்லது சிறு மின்பொறியால் கிளர்வூட்டினால் மிகை ஆக்சிஜன் உடனிருக்க அவை வெடிக்கின்றன. கார்பன் சப் ஆக்சைடு. மலானிக் அமிலத்தை, பாஸ் ஃபரஸ் பெண்டாக்சைடின் மேல் செலுத்தி நீரிறக்கம் செய்தால் இதைப் பெறலாம். CH,(COOH), P,O, C,O, +2 H,O இச்சேர்மம் வெறுக்கத்தக்க மணம் கொண்டது: எளிதில் நீருடன் வினை புரிந்து மீண்டும் மலானிக் அமிலத்தைத் தருகிறது. கார்பன் மோனாக்சைடு, கார்பனின் எந்தவொரு புறவேற்றுமையும் மிகை ஆக்சிஜனுடன் உயர் வெப்பத்தில் வினைபுரிந்து கார்பன் மோனாக் சைடைத் தருகிறது. 2C + 0, → 2 CO இது ஒரு வெப்பம் உமிழ் வினையாகும்; 26.7 கி. கலோரி/மோல் வெப்பம் இதில் வெளியிடப்படுகிறது. கல்கரி செஞ்சூட்டில் நீருடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடையும், ஹைட்ரஜனையும் உண்டாக்கு C +H,O - → CO + Hg கிறது. இவ்வாறு கிடைக்கும் வளிமக் கலவைக்கு நீர் வாயு (water gas) எ என்று பெயர். இது எரிபொரு ளாகப் பயன்படுகிறது. கார்பன் மோனாக்சைடு பெட்ரோலியம் பொருள்கள் - குறை எரிதலிலும் (incomplete combustion) தானியங்கிகள் வெளிவிடும் புகையிலும் உள்ளது. ஃபார்மிக் அமிலம் வெப்பத்தாற் பிளவுறும்போது கார்பன் மோனாக்சைடை HCOOH. CO + HO உண் ㄓ டாக்குகிறது. COஇல் கார்பனின் ஆக்சிஜனேற்ற நிலை 2 + ஆகும். ஆனால் 4+ஆக்சிஜனேற்ற நிலை யைக் கொண்ட கரிமச்சேர்மமே நிலையாகக் காணப் படுகிறது. எனவே இது அந்த ஆக்சிஜனேற்ற நிலையை அடைய உடன் CO, ஆக ஆக்சிஜனேற்றம் 2CO + O -- 2 CO₂ அடைகிறது. இவ்வினையும் ஒரு வெப்பம் உமிழ் வினையாகும். 67.63 கி. கலோரி/மோல் வெப்பம் இவ்வினையில் வெளியிடப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன், மற்ற எரியும் வளிமங் கள் கலந்த கலவை தொழிலகங்களில் எரிபொருளா கப் பயன்படுகிறது. கார்பன் மோனாக்சைடு குளோரினுடன் வினை புரிவதால் மிகு நச்சுத்தன்மையுடைய பாஸ்ஜீன் (COCI,) வளிமம் உண்டாகிறது. இதேபோல் மற்ற ஹாலோஜன்களுடன் இது வினைபுரிகிறது. கந்தகத் துடன் வினைபுரிந்து கார்போனில் சல்ஃபைடைக் கொடுக்கிறது. உலோகங்களுடன் வினைபுரிந்து உலோகக் கார்போனைல்களைக் கொடுக்கிறது. (M(CO) M= உலோகம்). இரத்தத்தில் ஹீமோ குளோபினில் உள்ள இரும்புடன் கார்பன் மோனாக் சைடு வினைபுரிந்து உண்டாகும் இத்தகைய கார் போனைல் சேர்மமே மனிதன் இறக்கக் காரணமாக அமைகிறது. கார்பன்டை ஆக்சைடு. கார்பனை மிகை ஆக்சி ஜனில் வெப்பப்படுத்தினால் கார்பன் டைஆக்சைடு உண்டாகிறது. இவ்வினை ஒரு வெப்ப உமிழ் வினை யாகும். வெப்பம் இதில் 94.4 கி. கலோரி/மோல் வெளியாகிறது. கார்பனேட்டுகளை அமிலங்களுடன் வினைப்படுத்தினால் CO, கிடைக்கிறது. Co,*- + 2H,O+ + 3H,O + Co, இவ்வினை ஆய்வகத்தில் CO, தயாரிக்க உதவுகிறது. பல ஹைட்ரஜன் கார்பனேட்டுகளை (பைகார்ப னேட்டுகள்) லெப்பப்படுத்தும்போது கார்பன் டைஆக் சைடு வெளியாகிறது. 2MHCO, → CO, + H,O + M,CO, மிகுதியும் வெப்பப்படுத்தப்பட்ட நீராவியும் CO உம் வினைபுரிந்து ஹைட்ரஜனும் CO, உம் கிடைக்கின்றன. CO + H,O - CO, + H, + கார்பன், ஹைட்ரஜன் சேர்மங்கள் அல்லது கார்பன், ஆக்சிஜன் ஹைட்ரஜன் சேர்மங்களை எரிக்கும்போது CO, வெளியாகிறது. . CH, + 20, CO, + 2H,O 2CH,OH + 30, 2CO, + 4H,O