உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்பானிஃபெரஸ்‌ காலம்‌ 391

சுடல் படிவுகளும் தோன்றின. இந்த நில அடுக்குகள் நமூரியன், வெஸ்ட் பேலியன், ஸ்டெபீனியன் என்று பிரிக்கப்படுகின்றன. இந்த அடுக்குகள் ஐரோப்பா வட ஆசியா, வட அமெரிக்காவின் முக்கிய கரிப்படிவு களைக் கொண்டுள்ளன. தொல்லுயிரித் தாவரமும், விலங்கும் (fauna and flora). கார்பானிஃபெரஸ் தொல்லுயிர்த் தாவரங் களைப்பற்றி, குறிப்பாக ஐரோப்பாவில் தெளிவாகக் கற்பிக்கப்படுகிறது. லெபிடோடென்ரான், சிஜில் வட லேரியா, காலமைட்ஸ், வால்ச்சியா, பெகாப்டரிஸ், நியூராப்டரிஸ், அலித்தாப்டரிஸ், ஒடன்டாப்டரிஸ் போன்றவை ஐரோப்பாவில் காணப்படும் தொல்லு யிரித் தாவரங்களாகும். மேலும் மேற்காக அமெரிக்கா, கிழக்காக யூரல் மலைக்கு அப்பாலும் வை காணப்படுகின்றன. இத்தாவரங்கள் தொல்லு யிர்த் தாவர இயலாருக்கு (palaeobotanist), வெஸ்ட் பேலியன். ஸ்டெப்பேனியன் காலநிலைகளைப் பல மண்டலங்களாகப் பிரிக்க உதவுகின்றன. கல்லிப்டரிஸ் தாவரத்தின் தோற்றம் பெர்மியன் தொகுதிக் காலத்தின் தொடக்கமாகக் கொள்ளப் படுகிறது. நிலத்தொல்லுயிர் விலங்கு வகையில் கிரஸ் டேசியன், பூச்சிகள். நன்னீர்க்கலப்பைக்காலிகள், நிலநீர்வாழ்விகள், சில ஊர்வன ஆகியவை பெர் மியனின் தொடக்கத்தை உணர்த்துகின்றன. வகை பெரும்பாலான முதுகெலும்பற்ற விலங்குக் குடும் பங்கள் கடல்வாழ் தொல்லுயிரிகளாகக் காணப்படு கின்றன. பியூசிலினிட்ஸ் (Fusilinids forms ) மேல்கார்பானிபெரஸ் தொகு ஃபெராமினிபெர்ஸ், திப் படுகைகளிலும், கீழ்பெர்மியன் படுகைகளிலும் குறிப்பாகக் காணப்படுகிறது. பியூசிநெல்லா தொல்லு யிர் டைநான்சியனில் காணப்படுகிறது. ஸ்வாஜிரினா தொல்லுயிர் யுரானியனில் காணப்படுகிறது. நியோ கார்பானிஃபொஸ் காலம் 391 சில ஸ்வாஜிரினா சுமாட்ரினா ஆ கியவை கீழ்பெர்மிய னில் காணப்படுகின்றன. போலி - ஸ்வாஜிரினாவின் (pseudo-schwagerina ) முதல் தோற்றம் பெர்மியன் யுக (permian era) தொடக்கப்படுகையின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. பவள வகையைச் சேர்ந்த சாட் டேட்ஸ், லித்தோஸ்ட் ரோசன், சாப்ரண்டிஸ் முதலி யவை பவளச் சுண்ணப்பாறைகளை உருவாக்கு கின்றன. இங்கிலாந்தில் டைநான்சியன் படுகையை மண்டலங்களாகப் (zone) பிரிக்க பவளத் தொல்லுயிரிகள் பயன்படுகின்றன. முள்தோலி களான கிரினாய்ட்ஸ், பிளாஸ்டாய்ட்ஸ்களும் பெரும் பான்மையாகக் காணப்படுகின்றன. பிரையோ சோவா வகையைச் சேர்ந்த பெனஸ்டெல்லா, புரோட்ரிமேடா ஆகியவை சமயங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. டிரைலோ பைட்ஸ் வகையில் பிலிப்சியா என்னும் இனம் காணப்படுகிறது. மேலும் அவிக்கிலோ-பெக்டன், பெக்டன், சிஸ்சோடஸ் போன்ற கலப்பைக்காலி களும். பெல்லரோபோன், மார்ச்சிசோனியா, யோம் பலஸ் போன்ற வயிற்றுக்காலிகளும் குறிப்பிடத் தக்கவை. பிராக்கியோபோடா வகையின் இனத்தில் புராடக்டஸ். கோனிட்ஸ், ஸ்பைரிபெர், அதிரிஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தலைக்காலிகள் வகையில் கோனியடைட் இனத்தைச் சேர்ந்த தொல்லுயிர்ப்படிவுகள் காணப்படுகின்றன. பெரும் பாலான கார்பானிஃபெரஸ் தொல்லுயிரிகள் அந்த யுகம் முடிவதற்கு முன்னரே மறைந்துவிடுகின்றன. பின்னர் பெர்மியன் தொல்லுயிரிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ரஷ்யாவில் கார்பானிஃபெரஸ் படிவுகள் மாஸ்கோ பள்ளத்தாக்கில் நன்கு உருவாகியுள்ளன. மேலும் யூரல் சூழ்நிலைச் சரிவுப்பகுதியிலும் டோனட்ஸ் பள்ளத்தாக்கிலும் காணப்படுகின்றன. மாஸ்கோ படம் 6. கார்பானிஃபெரஸ் காலத்தில் இருந்த இரண்டு தாவரப் புதைபடிவங்கள் (அ) நியூராப்டெரிஸ் பெரணி (ஆ) ரேகாப்டெரிஸ் பெரணி