உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 கார்போரேன்‌

402 கார்போரேன் பக்கங்களைக் தோன்றுகின்றன. இவ்வடிவங்கள் வேடின் விதி களைப் பின்பற்றி அமைகின்றன. முக்கோண வடிவப் கொண்ட பல்முகிகள் முக்கோணமுகிகள் (deltahedra) எனப்படுகின்றன. இவற்றுள் நான்கு உச்சி, ஆறு உச்சி, பன்னிரு உச்சி கொண்டவை சமச்சீரானவை; அனைத்து உச்சிகளும் சமமானவை. இவை முறையே நான்முகி, எண்முகி, இருபதுமுகி எனப்படுகின்றன. 5,7,8,9,10 உச்சி களைக் கொண்ட வடிவங்கள் சமச்சீரற்றவை. இவை யாவும் இருவகை உச்சிகளையுடையவை. 11 உச்சி களைக் கொண்ட வடிவம் ஐந்து வேறுபட்ட உச்சி களையுடையது. பல்முகிகளின் உச்சிகளில் ஒரு B-H அல்லது C-H தொகுதியைப் பொருத்திப் போரேன்களின் வடி வமைப்புகளையும், கார்போரேன்களின் வடிவமைப்பு களையும் பெறலாம். கார்போரேன் எனப் பெயரிடப் படுவதற்குக் குறிப்பிட்டஅமைப்பில் சிறும நிலையாக ஒரு கார்பன் அணு இடம் பெற்றிருத்தல் தேவை. போரேனில் ஹைட்ரஜன் அணுவை அல்க்கைல் தொகுதிகளால் பதிலீடு செய்தும் கார்பன், போரான் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட மூலக் கூறுகளைப் பெறலாம். ஆனால் இவை கார்போரேன் கள் அல்ல, எடுத்துக்காட்டாக, Bi,Hz எனும் அயனியில் ஹைட்ரஜனை எத்தில் தொகுதியால் பதிலீடு செய்து C,H,B,,H,,?- எனும் அமைப்பைப் பெறலாம். ஆனால் இது கார்போரேன் ஆகாது. 2 72 டை கார்போரேன்களின் பொது வாய்பாடு C,B.-,H. எ.கா.C,B10H1,,C,B,H..C,B.H, ஆகியன. 5 முதல் n = 12 வரை அமைப்புகள் அறியப் பட்டுள்ளன. C,B,H, சாய்ந்து உச்சிகளைக் கொண்ட முக்கோண தள இரு கோபுரம் (trigonal bipyramid) கொண்டது. இவ்வாய்பாட்டுக்கு மூன்று மாற்றிய வடிவங்கள் இருக்கலாம். அவை இரு கார்பன் அணுக்களும் எதிர் எதிரான கோபுர உச்சிகளில் அமைதல்; ஒரு கார்பன் அணு கோபுர உச்சியி லும் மற்றொன்று தள மூலைகளில் ஒன்றிலும் GT அமைதல்: இரு கார்பன் அணுக்களும் முக்கோண தள மூலைகளுள் இரண்டில் அமைதல் என்பன. மோனோ கார்போரேன்களுள், CB-1 Ha n 6,10,11,12 என்னும் மதிப்புகளைக் கொண் டவை தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு போரேன் அல்லது கார்போரேனில் பல்முகியின் உச்சிகள் யாவும் போரான் அல்லது கார்பன் அணுக்களால் நிரப்பப் பட்டிருந்தால், அதைக் குளோசோ அமைப்பு என்பர். மாறாக, பல்முகிகளின் பகுதிகளில் நிறுவப்பட்ட அமைப்பு நீடோ எனப்படுகிறது. ஐங்கோண இரு கோபுர வடிவு ஒரு குளோசோ அமைப்பு என்றால். அதிலிருந்து ஓர் உச்சியை அகற்றி சதுர தளக் கோபுர மாக்கினால் நீடோ அமைப்புக் கிட்டும். உள்ளக 13 எலெக்ட்ரான்கள். கார்போரேனின் பல்முகி அமைப்புகளின் அச்சாணிகள் அவற்றின் உள்ளக எலெட்ரான்கள் (core electrons) ஆகும் (பல் முகி அமைப்பை நிலைநிறுத்தும் எலெக்ட்ரான்கள்). உள்ளக எலெக்ட்ரான்களைக் கணக்கிடும் முறை: (,BHg என்னும் மூலக்கூறை எடுத்துக்கொண்டால் அதில் மொத்தம் 50 பிணையுறு (bonded) எலெக்ட் ரான்கள் உள்ளன. இவற்றுள் 24 எலெக்ட்ரான்கள் B-H பிணைப்புகளிலும். கார்பன் - ஹைட்ரஜன் பிணைப்புகளிலும் உள்ளன. எஞ்சியுள்ள 26 எலெக்ட் ரான்கள் B-H தொகுதிகளையும், C-H தொகுதி களையும், இருபது பக்க முப்பரிமாண வடிவமைப்பில் பொருத்துகின்றன. மற்றைய பல்முகிகளில் உள்ளக எலெக்ட்ரான்கள் பின்வருமாறு: எண்முகி: 14, ஐங் கோண இருகோபுர வடிவம்: 16. பன்னிருமுகி:18., ஒன்பது முனையுடைய வடிவம்: 20.. பதினெண் முகி: 24. உள்ளக எலெக்ட்ரான்களின் தேவையே அமைப்பின் மின்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டாக, B,H,, எனும் வாய்பாடுக்கு 24 ள்ளக எலெக்ட்ரான்களே இருப்பதால் இருபது பக்க வடிவமைப்புக்குத் தேவைப்படும் 26 உள்ளக எலெக்ட் ரான்களைப் பெறுவதற்கு வாய்பாடு BigH1, என்றிருத்தல் தேவை. அதேபோன்று CB₁₁H₁, உ 11 9- H H- H: H H. H .H ஆ படம் 2