406 கார்போனேட் கனிமங்கள்
406 கார்போனேட் கனிதங்கள் படம் 2. இரட்டுறல் கால்சைட் படிகங்கள் (CaMg(CO, ) ஆகும். படம் 1, 2, 3 கால்சைட்டுக் கட்டமைப்பையுடைய கனிமங்களில் மாக்னசைட் (Mg(O,), சிட்ரைட் (FeCO ), இரோடோகுரோசைட் (MnCO,), ஸ்மித்சோனைட் (ZnCO,), கோபால்டோ கால்சைட் (COCO, ), ஒடாவைட் (CdCO,) காஸ்பைடு (NiCO) ஆகிய கார்பனேட் கனிமங்கள் அடங்கும். ஆக்கரைட் [[Ca(Fe,Mg) {CO),) குட்னாகோரைட் (CaMn (CO3),) ஆகியவை டோலமைட்டுக் கட்டமைப்பு மாதிரியைக் கொண்டவை. மேலும், வேறுவகை அணு அமைப்பு மாதிரியை உடைய கனிமங்களில் குறிப்பிடத்தக்கது அராகோனைட் ஆகும். அராகோனைட், கால்சியம் கார்பனேட் உயர்ந்த அழுத்த நிலையில் நிலைபெறும் ஒரு படிகமாகும். அதனால் இது கால்சியம் கார்பனேட்டின் பல்லுருவ மாறியில் ஒன்றாகக்கருதப்படுகிறது. ஸ்ரான்சியனைட் (SrCO,), விதரைட் (BaCO,) மற்றும் செரூசைட் (PbCO) ஆகிய சுனிமங்கள் அராகோனைட் அணு அமைப்பு மாதிரியைக் கொண்டன. மேற்குறித்த மூன்று வகையான அணு அமைப்பு மாதிரிகளையும் சாராத முதல் வகைக் கார்பனேட்டைச் சார்ந்த கனிமங்களில் வாடெரைட், குன்டைட் (Mg, Ca (CO)4) பல நேரயனிகளை ஒருங்கே கொண்ட பல கார்பனேட்டுக் கனிமங்களும் அடங்கும். வாடெரைட் கால்சியம் கார்பனேட்டின் மற்றுமொரு பல்லுருவ மாறிக் கனிமமாகும். ரண்டு மூன்றாம் வகைகளைச் சார்ந்த கார்போ ளேட் கனிமங்கள் முதல்வகைக் கார்போனேட்டுக் கனிமங்களை ஒப்பிடுகையில் தாழ் வெப்பநிலையில் சிதையக் கூடியனவாகும். ஆகையால் இக்கனிமங்கள் படிவுப் பாறைகளிடையே குறிப்பாக ஆவியாதலா படம் 3. (அ) சேணம் வடிவ டோலமைட் படிகங்கள்: அரகோளைட் படிகம்