கார்போஹைட்ரேட்டுகள் 413
கார்போஹைட்ரேட்டுகள் இயற்கையில் தாவரங் களிலும், விலங்கினங்களிலும் உள்ளன. தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் மூலம் கார்போஹைட்ரேட்டுகள் உண்டாக்கப்படுகின்றன. hy xCO, +4H,O → 2 · Cx(H₂O)y+x0, கார்போஹைட்ரேட்டுகள் தாவரங்கள், விலங்குகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. வகை. கார்போஹைட்ரேட்டுகள் அவற்றின் பண்பு களைப் பொறுத்து சர்க்கரைகள் (எ.கா.குளுக்கோஸ், ஃபிரக்ட்டோஸ்), சர்க்கரையற்ற பொருள்கள் (எ.கா. ஸ்டார்ச் செல்லுலோஸ்) என இரு வகையாகப் பிரிக் கப்பட்டுள்ளன. சர்க்கரைப் பொருள்கள் படிக உருவும், இனிய சுவையும், நீரில் கரையும் தன்மையும் கொண்ட சேர்மங்கள் ஆகும். சர்க்கரையற்ற பொருள்கள் (பாலிசாக்கரைடுகள்) சர்க்கரையைவிடச் சிக்கலான அமைப்பையும், உயர் மூலக்கூறு எடையை யும் கொண்ட சேர்மங்கள். இவற்றில் பெரும்பா லானவை படிக உருவமில்லாமலும் . (amorphous). நீரில் . குறைவாகக் கரைந்தோகரையாமலும், இனிய சுவையில்லாமலும் உள்ளன. எளிய கார்போஹைட் ரேட்டுகளின் பெயர்கள் ஓஸ் என்று முடியும். ஆல்டி ஹைடுகளைக் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள் ஆல்டோக்கள் (aldoses) என்றும் கீட்டோளைக் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள் கீட்டோஸ்கள் (ketoses) என்றும் வழங்கப்படும். சர்க்கரைப் பொருள்கள் மேலும் ஒற்றைச் சாக் கரைடுகள் ஒலிகோ சாக்கரைடுகள் என்று இருவகை யாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒற்றைச் சாக்கரைடுகள் நீராற்பகுக்க முடியாதவை. இவற்றின் பொது வாய்பாடு (CnHanOn) இதில் சில விதிவிலக்கும் ண்டு) 'n' இன் மதிப்பு 2-10 வரையுள்ளது. றில் முக்கியமானவை பென்டோஸ்களும், ஹெக் சோஸ்களும் ஆகும். ஒலிகோ சாக்கரைடுகள் நீராற் பகுக்கும்போது 2-10 வரை ஒற்றைச் சாக்கரைடு மூலக்கூறுகளைக் கொடுக்கின்றன. பாலிசாக்கரைடு கள் நீராற்பகுத்தலால் பெருமளவு ஒற்றைச் சாக் கரைடு மூலக்கூறுகளை அளிக்கின்றன. இவற்றின் பொது வாய்பாடு (C,H10Os)n. (எ.கா. ஸ்டார்ச், செல்லுலோஸ்). இயற்கையில் அவ்வளவு பரவலாக் காணப்படாத பாலிசாக்கரைடு, பென்டோசேன்கள் ஆகும். ஒற்றைச் சாக்கரைடுகள். கார்போஹைட்ரேட் வேதியியலுக்கு ஒற்றை சாக்கரைடுகள் மிகவும் அடிப் படையானவை. இச்சர்க்கரைகளை நீராற்பகுக்க இயலாது. இவற்றின் பொது வாய்பாடு CnHO.: n இன் அளவு 2-10 வரை இருக்கலாம். இவை றைச் சாக்கரோசஸ் (mono sacchroses) என்றும் குறிப் பிடப்படுகின்றன. முக்கியமான ஒற்றைச் சர்க்கனரடு ஒற் கார்போஹைட்ரேட்டுகள் 413 கள் பென்டோஸ்களும், ஹெக்சோஸ்களும் ஆகும். அனைத்துக் கார்போஹைட்ரேட்டுகளும் நீராற் பகுக்கும்போது ஒற்றைச் சாக்கரைடுகளைக் கொடுக் கின்றன. ஒற்றைச் சாக்கரைடுகளின் கார்பன் அணுக் களின் எண்ணிக்கைக்கேற்பவும், அவற்றில் அமைந் துள்ள ஆல்டிஹைடு, கீட்டோன் தொகுதிகளைப் பொறுத்தும் இவை பெயரிடப்படுகின்றன. எ.கா. ஆல்டோஹெக்சோஸ்கள், ஆல்டோபென்டோஸ்கள், கீட்டோஹெக்சோஸ்கள் OHC(CHOH),CH,OH ல்டோஸ்கள் HOH,C.CO(CHOH),CH,OH கீட்டோஸ்கள் குளுக்கோஸும், ஃபிரக்டோஸும் ஆல்டோசுக்கும். கீடோசுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும். OHC(CHOH),CH,CH HOH,C(CHOH)CH,OH குளுக்கோஸ் பிற ஃபிரக்ட்டோஸ் இது வரை ஏறக்குறைய 70 ஒற்றைச் சாக்கரைடு கள் அறியப்பட்டுள்ளன. கரிமச் சேர்மங்கள் போல் அல்லாமல் இவை மிகுதியாக நீரில் கரைகின் றன. இதற்குக் காரணம் ஒற்றைச் சாக்கரைடுகளில் மிகுந்து காணப்படும் ஹைட்ராக்சில் தொகுதிகளா கும். இவை நீருடன் ஹைட்ரஜன் பிணைப்பைத் தோற்றுவிக்கின்றன. இயற்கையில் கிடைக்கும் ஒற் றைச் சர்க்கரைகள் இனிப்புச் சுவை கொண்டவை; ஒளிச்சுழற்றும் தன்மை கொண்டவை. இவற்றின் பல லினைகளில் வை பாலிஹைட்ரிக் ஆல்டிஹைடுகள், கீட்டோன்களாகச் செயல்படுகின்றன. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பன் அணுக்களைக் கொண்ட ஒற்றைச் சர்க்கரைகள் இயங்கு சமநிலை மாற்றிகளாக அமைகின்றன. அவற்றில் ஒன்று வளைய அமைப்பைக் கொண்டுள்ளது. ஒற்றைச் சாக்கரைடுகளில் எளியது கிளைக்கால்டிஹைடு. இதில் சமச்சீரற்ற கார்பன் அணு இல்லை. எனவே இதற்கு ஒளிச் சுழற்றும் பண்பும் இல்லை. இயற்கையில் கிடைக்கும் அனைத்துச் சர்க்கரைகளும் ஒளிச் சுழற் றும் தன்மை கொண்டுள்ளமையால் இவற்றைச் சாச் கரையென்று கருத வேண்டியதில்லை. ஒற்றைச் சாக்கரைடுகனின் முப்பரிமாண வேதியியல். ஒற்றைச் சாக்கரைடுகளிலேயே மிகவும் எளிய சேர் மம் கிளைக்கால்டிஹைடு (OH (H,CHO). மற்ற அனைத்து ஒற்றைச் சாக்கரைடுகளும் ஒளி சுழற்றும் தன்மை கொண்டவை. ஆனால் கிளைக்கால்டிஹை டிற்கு இப்பண்பு இல்லை. எனவே சர்க்கரைப் பிரிவி லிருந்து அது நீக்கப்பட்டு ஒளிச் சுழற்றும் தன்மை கொண்ட பாலிஹைட்ராக்சி ஆல்டிஹ்ைடுகள் அல்லது கிட்டோன்கள் சர்க்கரை என வரையறுக்கப்படும். மேற்சொன்ன வரையறைக்குட்படும் எளிய சேர்மம் கிளிசரால்டிஹைடு ஆகும்.