காரங்கள் 429
சோடியமும் கன வினைபுரிந்து அவற்றின் ஒற்றை ஆக்சைடுகளைக்(monooxides) கொடுக்கின்றன. கார உலோகங்கள் அவற்றின் மிகை ஆக்சைடுகளைக் (super oxides) கொடுக்கின்றன. ஆக்சிஜ காற்றுடனோ விளைபு னுடனோ னபுரியும் தன்மை. இவை நீர்ம, திண்ம நிலைகளில் இருப்பதைப் பொறுத்தது. வேதிவினையில் லித்தியம் உலோகம் IIA தொகுதித் தனிமங்களையே பெரிதும் ஒத் துள்ளது. இது பிற கார உலோகத் தனிமங்களை விடக் குறைவாகவே நீர், ஆக்சிஜன், ஹாலோஜென் கள் போன்றவற்றுடன் வினைபுரிகிறது; ஆனால் ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன் போன்றவற்று டன் எளிதில் வினைபுரிகிறது. 25°C வெப்பநிலை லையில் கார உலோக ஆக்சைடு கள் உண்டாக்கவேண்டிய கட்டுறா ஆற்றல் (free energy).-133 கி கலோரிகள் /மோல் (லித்தியம் ஆக் சைடு) இலிருந்து 63 கி கலோரிகள்/மோல் (சீசியம் ஆக்சைடு) வரை உள்ளது. சாதாரண நிலையில் லித்தியம் உலோகம் ஆக்சிஜனுடன் வினைப்பட்டு லித்தியம் ஆக்சைடைக் (Li,O) கொடுக்கிறது. வித் தியம் உலோகத்தின் நீர்ம அம்மோனியாக் கரைசலில் ஆக்சிஜனைச் செலுத்தும்போது லித்தியம் பெராக் சைடு (Li, 0.) உண்டாகிறது. சோடியம் பெராக் சைடையும் (Na,O) இதேபோல் தயாரிக்கலாம். ஆனால் தொழில் முறையில் சோடியம் ஒற்றை ஆக் சைடை (Na,0) ஆக்சிஜனேற்றம் செய்து து பெறப் படுகிறது. உயர் ஆக்சிஜன் அழுத்தத்தில் சோடியம் மிகை ஆக்சைடைப் (NaO,) பெறலாம்; ஆனால் ருபீடியம், பொட்டாசியம், சீசியம் போன்றவற்றின் மிகை ஆக்சைடுகளைக் காற்றில் எரித்தாலே பெற லாம். இதற்கு எதிர்மாறாக, காரமண் உலோகங் களின் (alkaline earth metals) மிகை ஆக்சைடுகளை விட நிலைத்தன்மையில் குறைந்த பொட்டாசியம், ருபீடியம்,சீசியம் ஆகியவற்றின் ஓசோனைடுகள் மிகை ஆக்சைடுகள் ஓசோனுடன் வினைபுரிவதால் பெறலாம். நீருடன் விளை. நீருடன் கார-உலோகங்கள் மிகத் தீவிரமாக வினைபுரிகின்றன. இவ்வினையின் வேகம் உலோகத்தின் பரப்பைப் பொறுத்ததாகும். அணு நிறைகளின் அதிகரிப்பிற்கேற்ப நீருடன் வினை புரியும் வேகமும் கூடுகிறது. கூடுகிறது. கன உலோகங்களின் ஹைட்ராக்சைடுகள் நீரில் கரைவன, எனவே அவை தீவிரமாக வினைபுரிகின்றன. சமமோலார் சோடியம் நீர்க் கலவைகள் வினைபுரியும்போது ஒரு மோல் கார உலோகத்தின் னஹட்ராக்சைடும், ஒரு மோல் ஹைட்ரஜன் வளிமமும் உண்டாகின்றன. இவ்வினை வெப்பம் உமிழ் வினை (exothermic reaction) ஆகும். வெளியேற்றப்படும் ஹைட்ரஜன் மீண்டும் ஆக்சிஜ னுடன் சேர்ந்து வெப்பம் வெளியாவதை அதிகரிக் கிறது. அலோகங்களுடன் வினை. கார உலோகங்களில் காரங்கள் 429 லித்தியம் மட்டுமே நைட்ரஜனுடன் வினைபுரிந்து நைட்ரைடைக் (Li,N) கொடுக்கிறது, இதேபோல் லித்தியம் நிலைத்த ஹைட்ரைடுகளைக் கொடுக் கிறது. பிற கார உலோகங்களின் ஹைட்ரைடுகள் அவ்வளவு நிலையானவையல்ல. கால்சியத்தைப் போலவே லித்தியம், வித்தியம் கார்பைடைக் (Li,C,) காடுக்கிறது. பிற கார உலோகங்கள் நிலைத்த கார்பைடுகளைக் கொடுப்பதில்லை. ஆனால் இவை கிராஃன ஃபைட் வடிவத்தில் இருக்கும் கார்பனுடன் சேர்ந்து இடைச்செருகல் சேர்மங்களைக் (interche lation compounds) கொடுக்கின்றன. . கார உலோகங்கள் ஹாலோஜன்களுடன் வினை புரிந்து ஹாலைடுகளைக் கொடுக்கின்றன. இவ் வினைகள் மிகு வெப்பஉமிழ் வினைகளாக உள்ளன கார உலோகங்கள் கந்தகத்துடனும், பாஸ்ஃபரஸூ டனும் வினைப்பட்டு மாறுபட்ட சல்ஃபைடுகளையும் M,P (M= காரஉலோகம்) என்னும் வாய்பாடு கொண்ட பாஸ்ஃனபடுகளையும் கொடுக்கின்றன. உலோகக் கலவைகள். ஒரே அணுப் பருமன்களைக் (atomic volumer) கொண்டுள்ள தனிமங்கள் திண்மக் கரைசல்களை (solid soluticns) உண்டாக்குகின்றன. அணுப் பருமன்களில் மாறுபாடு இருக்குமானால் நல்லுருகு கல்லை (eutectic mixture) வகைச் சேர்மங்கள் உண்டாகின்றன. பொட்டாசியம், ருபீடியம், சீசியம் போன்றவை ஏறக்குறைய ஒரே அணுப் பருமன்களைக் கொடுக்கின்றன. சோடியம், பொட்டசியத்தைவிடச் சிறிய அணுவாகும். இதன் அயனியாக்க ஆற்றல் மிகுதி. எனவே இது நல்லுருகு கலவையை உண்டா டாக்குகிறது. த. தெய்வீகன் நூலோதி, Jerry March and Stanley Windwer, General Chemistry, Macmillan Fublishing Co, Inc, New York, 1979. காரங்கள் நீரில் அயனியாகும்போது ஹைட்ராக்சில் அயனிகளா கவும் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாகவும் மாற்றும் காரப் பண்பு கொண்ட சேர்மங்களைக் காரங்கள் (alkalies) என்று கூறலாம். கார உலோகங்களின் ஹைட்ராக்சைடுகள் பொதுவாகக் காரங்களாக விளங் கினாலும், அம்மோனியம் உப்புகளும் கார வகைகளில் அடங்கும். எரி காரங்கள் (caustics) பெருமளவில் ஹைட்ராக்சில் அயனிகளைக் கொடுக்கின்றன. மேலும் இவை திசுக்களிலுள்ள நீரை உறிஞ்சியோ ஆக்சிஜனை நீக்கியோ அழிக்கின்றன. தோலின் மேல் எரிகாரங் களால் ஏற்படும் புண்களைத் தடுக்க உடனடியாகத் தூய்மையான நீரில் கழுவ வேண்டும்.