568 காற்றுக் குளிர்பதனம்
568 காற்றுக் குளிர்பதனம் என்று குளிர் வெப்பத்தை ஒரு டன் குளிர்பதன ஆற்றல் குறிப்பிட்டனர். வெப்ப அளவில், ஒரு டன் பதன ஆற்றல் பெற்ற கருவி ஒரு நிமிடத்தில் 200 Btu வெப்பத்தைக் கடத்தும் (200 Btus/min). ஏறக் குறைய 10X10X12 அடி அளவு கொண்ட ஓர் அறையைக் குளிர்பதனப்படுத்த 1 டன் குளிர்பதன ஆற்றல் தேவைப்படுகிறது. இத்தகைய 1 அல்லது 11 டன் ஆற்றல் வாய்ந்த குளிர்பதனக் கருவிகள் பெரிய நகரங்களில், அலுவலகங்களின் அறைகளில் சன்னல்களில் பொருத்தப்பட்டிருப்பதைக் கூடும். காண்க: குளிர்வூட்டல் டன். காணக் ஆனால் குளிர்பதனப்படுத்தப்படவேண்டிய சூழ் நிலையின் அளவு அதிகரிக்கும்போது கருவிகளின் ஆற்றலும் அதிகரிக்க வேண்டும். எ.கா: பல அடுக்கு மாடிக் கட்டடங்களில் அமைக்கப் பெற்றிருக்கும் கருவிகள் அதிக ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கும். சென்னையில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை யிலுள்ள கணிப்பொறி நிலையத்தில் 4 குளிர்பதனக் கருவிகள் உள்ளன. ஒவ்வொன்றும் 40 டன் ஆற்றல் கொண்டது. ஒரே சமயத்தில் 2 கருவிகள் இயங்கும். கருவிகள் இயங்கும் முறை, ஆவி அழுத்த முறை. வெப்பத்தைக் கடத்தப் பல முறைகள் இருந்தாலும், குளிர்பதன வளிமங்கள் (refrigerants) என்று கூறப் படும் ஓர் ஆவி அழுத்த முறையே (vapour compres- sion system) மிகுதியாக வழக்கில் உள்ளது. பொருள் கள் திண்ம, நீர்ம, வளிம நிலைகள் என்று மூன்று நிலைகளில் இருக்கின்றன. எ.கா: நீர் பனிக் கட்டி காற்று அல்லது நீர் விரிவாக்கக் கட்டுப்பாட்டிதழ் யாகவும், நீராகவும், நீராவியாகவும் உள்ளது. எது எந்நிலையில் இருக்கும் என்பது அதன் வெப்ப நிலையையும் அதன் மீதுள்ள சூழ்நிலையின் அழுத் தத்தையும் பொறுத்தது. மேலும் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் போது, அப்பொருளுக் கும் அதைச் சூழ்ந்துள்ள சூழ்நிலைக்கும் இடையே வெப்பப் பரிமாற்றம் ஏற்படுகிறது. எ . கா : ஒரு குவளைத் தண்ணீரில் ஒரு பனிக்கட்டியைப் போட்டால் அக்கட்டி உருகித் திண்ம நிலையிலிருந்து நீர்ம நிலைக்கு மாறுவதால், நீரிலுள்ள வெப்பத்தை எடுத்துக்கொள்கிறது. ஆகவே நீரின் வெப்ப நிலை குறைந்து குளிர் நீராகிறது. மேற்கூறிய விதிகளின் அடிப்படையிலேயே குளிர்பதனக் கருவிகள் அமைக் கப்பட்டுள்ளன. . இதற்காகத் தனிப்பட்ட தன்மைகளைக் கொண்ட குறிப்பிட்ட பொருள்கள் பயன்படுகின்றன. எ.கா: ஃப்ரியான் (Freon) எனப்படும் ஆவி, 43°C வெப்பநிலை, 9.5 kg/cms அழுத்த நிலையில் நீர்ம வடிவத்திலும், 4 °C வெப்பநிலை, 2.6 kg/cm' அழுத்த நிலையில் வளிம வடிவிலும் இருக்கும் தன்மை பெற்றது. இத்தன்மைகளால், இது குளிர்பதனக் கருவிகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேலும் அம்மோனியா போன்ற பிற பொருள்களும் குளிர்பதனக் கருவிகளில் பயன்படுகின்றன. இவை குளிர்பதன வளிமங்கள் (refrigerants) எனப்படும். இப்பொருள்களைப் பயன்படுத்தி ஒரு குளிர்பதனக் குறைந்த அழுத்தக்குளிர்பதன ஆவி ஆவியாக்கக் கலன் அல்லது உறைவிப்பி அழுத்தி நீர் உள்ளே அதிக அழுத்தக் குளிர்பதன நீர்மம் D நீர்வெளியே