644 கிட்டப்பார்வை
644 கிட்டப்பார்வை 4 இதில் உள் விளைவுகள் மிகுதியாக ஏற்பட்டுப் பார்வை மிகவும் தர்க்கமடைகிறது. கண்ணின் பின் பாதி பின்பக்கம் நீள்கிறது. முன்பாதியில் ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. பொதுவாகக் கண் பெரியதாக இருக்கும். முன் அறை ஆழமாயிருக்கும். கருவிழி மந்தமாக வேலை செய்யும். விழி அகநோக்கி (ophthalmoscope) மூலம் பார்த்தால் விழித்திரைப் படலத்தில் சில மாறுதல்கள் தெரியும். விழித்திரையில் சில வெண்திட்டுகள் தெரியும். இவற்றைச் சுற்றிலும் நிறத்துகள்கள் இருக்கும். பார்வை விழிப்புள்ளியில் இதே விளைவுகள் ஏற்பட்டு நடுப்பார்வை முழுதுமாக மறைந்து விடு கிறது. பின்புறம் வீங்குவதால் ஒளித்திரைப்படலம் பிரிந்து பழுது அடைந்து அது வழியாக விழிவெளித் திரை தெரிகிறது. இதற்கு அண்மைப் பார்வை விளைவு எனப் பெயர். மிக அதிகமாக உள்ளவர்களிடம் பின்பக்கம் நன்றாகக் குழிவடைந்து விடுகிறது. இதை விழி அகநோக்கி மூலம் பார்த்தால் விழித்தட்டில் குழி தெரியும். ஊனம் பின் விளைவுகள். இத்தகைய குறையுள்ளோரின் விழித்திரையில் கிழிவு உண்டாகி இரத்த ஒழுக்கு ஏற்படுகிறது. விழித்திரை தனியாகப் பிரிந்தும் விடுகிறது. கண் சார்ந்த நிலைமை. ணைக்கதிர்கள் (parallel rays) விழித் திரையில் குவியாமல் அதன் முன்னால் குவியும். ஆகையால் விழித்திரை உருவத்தின் நிழல் பரவலாக வட்டமாக விழுகிறது. ஆகையால் தொலை விலுள்ள பொருள்கள் தெளிவாகத் தெரிவதில்லை. ஆனால் விழிக்கதிர்மட்டும் விழித்திரையில் விழுகிறது. பொருள்களிலிருந்து வரும் ஒளிக்கதிர் நன்றாக விரி வடைவதற்குத் தகுந்தவாறு அப்பொருள்களைக் கண்களுக்கு மிக அருகில் கொண்டு வர வேண்டி யுள்ளது. இந்த மையம், அதாவது எத்தனைத் தொலை விலிருந்து ஒரு பொருளை நன்றாகப் பார்க்க முடி கிறதோ அதன் பெயர் தொலை மையப்புள்ளி ( far point) ஆகும். சாதாரண நல்ல பார்வையுள்ளவர் களுக்கு முடிவற்ற நிலையில் (infinity) உள்ளது. ஆனால் அண்மைப் பார்வை ஊனம் உள்ளவர்களுக்கு இது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ளது. மிகு ஊனம் உள்ளவர்களின் கண்ணுக்கு இது மிக அண்மையில் உள்ளது. இந்தத் தொலைவின் அளவே அண்மைப் பார்வையின் அளவு ஆகும். இந்தத் தொலைவு 1 மீட்டர் ஆனால் அண்மைப் பார்வையின் அளவு 1 D. இது 2 மீட்டர் ஆனால் அளவு 0.5 D ஆகும். ஆகையால் இந்த அளவுகளின் கணக்குப்படி அதே அளவுள்ள ஒரு குழிவில்லையைக் கண்ணின் முன் வைத்தால் அது கதிர்களை விரிவடையச் செய்து விழித்திரையின் மேல் மையம் கொள்ளுமாறு செய்யும். அதனால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். குறிகள். பார்வைக் குறைவே (visual defect) அண்மைப்பார்வைக் குறை உள்ளவர்களுக்கு முதல் விளைவாகும். தொலைவிலுள்ள பொருள்கள் நன் றாகத் தெரிவதில்லை. அருகிலுள்ள பொருள்கள் மட்டும் நன்றாகத் தெரியும். தொலைவிலுள்ள பொருள்கள் நன்றாகத் தெரிவதில்லையாதலால் நாளடைவில் அவற்றைப் புறக்கணிக்கின்றனர். நடுப் பருவ வயதில் விழியின் ஏற்பமைவு (accommodation) குறையக் குறைய அவர்களுக்குப் படிப்பதற்குக் கண்ணாடி தேவையில்லாததாகிவிடுகிறது. 80 வயதில் சாதாரண கண் குயவில்லை விழித்திரை கிட்டப்பார்வை தவில்லையால் சரிசெய்யப்படுகிறது