உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கற்பூரவல்லிச் செடி

48 கற்பூரவல்லிச்செடி உண்டாகா. சுற்பூரம் 2 பங்கு, அபினி 1 பங்கு சேர்த்துத் தேன் விட்டரைத்து 97.5 மி.கி.க்கு மேற் படாமல் மாத்திரையாக்கிப் படுக்குமுன் அருந்திவர சொப்பன ஸ்கலிதம், நமைச்சல், நாட்பட்ட கீல்வாயு நீங்கும். கற்பூரம், காயம் சமஎடை சேர்த்து 195 மி.கி மாத்திரையாக்கி உட்கொள்ள இரைப்பு, உப்புசம் முதலியன நீங்கும். இலிங்கம் 1 பங்கு, கற்பூரம் 1 பங்கு, ஓமம் 1 பங்கு இவற்றைப் பொடித்துத் தேன் விட்டரைத்து 130 மி.கி. அளவுள்ள மாத்திரை செய்து. நாள் ஒன்றுக்கு இரண்டு மாத்திரை வீதம் கொடுத்து வரப் பேதி அதிசாரம், குன்மம், சூலை முதலியன நீங்கும். கடுக்காய். நெல்லிக்காய், தான்றிக்காய் இவை ஊறிய நீரில் சூடனைக் கரைத்துக் கண்ணைக் கழுவுதல் உண்டு. மஞ்ஜை, தந்தவேதனை, தலைவலி, சயரோகம் இவற்றிற்குக் கற்பூரம் 30 கிராம், காடி. 510 மி.லி.கூட்டித் துணியில் நனைத்து நோயுள்ள இடத்தில் போட்டு, அத்துணியை மேற்படி நீரில் நனைத்துக் கொண்டே இருக்கக் குணமுண்டாகும். நீர்த்தாரையில் காணும் தாபிதரோகங்களுக்குக் கற்பூரத்தை 390 மி.கி. - 520 மி.கி. வரை கொடுத்து. கற்பூரப் பூசு தைலத்தை மேலுக்குப் பயன்படுத்த லாம். மகப்பேற்றில் காணும் அபதாகை வாதம், வலிப்பு அல்லது இசிவு இவற்றிற்குக் கற்பூரம் 325 மி.கி.. பூரபற்பம் 325 மி.கி. சேர்த்துச் சிறிது தேன் கூட்டி இரண்டு மாத்திரை செய்து ஒரு மணி நேரத் திற்கு ஒரு மாத்திரை வீதம் கொடுத்து, ஆமணக் கெண்ணெய் அல்லது வேறு விரோசனாதிகளைக் கொடுப்பின் குணமுண்டாகும். படுக்கை இரணங்களுக்குச் சூடனைப் பட்டைச் சாராயம் அல்லது பிராந்தியுடன் சேர்த்து அலம்பி வரலாம். கற்பூரம் 17.5 கிராம், இரசகற்பூரம் 33 மி.கி, புளியங்கொட்டைத்தோல் மாவு 35 கிராம் இம்மூன்றையும் ஒரு கல்வத்தில் போட்டு, நன்றாகக் கலக்கும்படி அரைத்து, ஒரு தேங்காயின் பூவைக் கல்வத்தில் இருக்கும் மருந்துடன் பிசைந்து அக் கல்வத்திலேயே மருந்து ஒரு பக்கமாகச் சேரும் வண்ணம் சாய்த்து வெயிலில் வைக்கும்போது மஞ்சள் நிறமான தைலமிறங்கும். அந்தத் தைலத்தை வழித்துச் சீசாவில் வைத்துக் கொண்டு காலை, மாலை, பகல் மூன்று வேளையும் மூக்கில் இரண்டொரு துளி விட்டுக்கொண்டு வந்தால் மூக்குப் புண், மூக்கில் நீர்வடிதல் முதலியவை தீரும். கற்பூர மும் வெள்ளெருக்கம் பூவின் இதழ்கள் இரண்டும் கசக்கி வெற்றிலையில் வைத்து மடித்துக் கொடுக்க நீருடையும், காண்க, கர்ப்பூரம் சே.பிரேமா நூலோதி. சிறுமணவூர் முனிசாமி முதலியார், மூலிகைமர்மம், பிரோக்ரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1930; முருகேச முதலியார் க.ச. குணபாடம், தமிழ் நாடு அரசு அச்சகம், இரண்டாம் பதிப்பு, 1951. கற்பூரவல்லிச் செடி இதன் தாவரவியல் பெயர் அனிசோகைலஸ் கார்னோ சஸ் Anisochilus carnosus). இது லேபியேட்டே குடும்பத்தைச் சேர்ந்த மணமுள்ள செடி. இதன் வேறு பெயர்களாவன: கற்பூரவள்ளி, கர்ப்பூரவல்லி, ஓம வல்லி. சுல்வல்லி, சேற்றுப்புண்தழை, அங்கயற் கண்ணி, இந்துபரணி, இருடிநங்கை, கருந்தும்பிராச் செடி கனகவல்லி, சாணமூலி, சாவிரசம்பாரம், சூதத்தைக் கட்டுவாலாமூலி, பாலுகவள்ளி. இச் செடியை இலங்கை, இந்தியா, பர்மா, இமாலயப் பகுதிகளில் காணலாம். மலைப்பகுதிகளில் 400-1500 மீட்டர் உயரத்தில் சரிவுகளில் சாதாரணமாகக் காணலாம். பாறைகளின் மீது சிறிதளவு மண்திட்டு இருக்கும் இடங்களில் இது வளர்ந்திருக்கும். கூட்ட மாகக் காணப்படும் இச்செடி இந்தியாவில் மேற்கு இமாலயப்பகுதி, வங்காளம், மத்திய இந்தியப்பகுதி, தென்னிந்தியப் பகுதி ஆகிய இடங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. செடி. கற்பூரவல்லி 30-60 செ. மீ. உயரம் நேராக வளரும் ஒருபருவச் செடியாகும். செடியின் தண்டு தடிப்பாகவும் நாற்பட்டையாகவும் வழவழப் பாகவோ மெல்லிய மயிருடனோ சற்றுச் சிவப்பு நிறமாகவும் காணப்படும். இலைகள் முட்டை வடிவி லும் முனை மழுங்கியும் சதைப்பற்றுடனும் 5.5 6.3×1-4 செ.மீ. அளவிலுமிருக்கும். இலை ஓரம் இரம்பப்பல் போன்றது. இலையின் மேற்புறம் வழ வழப்பாகவோ ஓரளவு மென்மயிருடனோ இருக்கும். காம்பருகு பகுதி இதய வடிவமாகவோ வட்ட மாகவோ இருக்கும். இலைக்காம்பின் நீளம் 13.- 3.2 செ.மீ., மஞ்சரி உருளை வடிவத் தூவி ஆகும். மஞ்சரியின் நீளம் 1.3 - 3.8 செ.மீ., மஞ்சரிக்காம்பும் நீளமானது. ஐயா பூக்கள் அக்டோபர்-பிப்ரவரி மாதங்களில் தோன்றும், காம்பற்ற மலர்கள் சிறியவை. அடர்த்தி அமைந்துள்ளன. பூவடிச்செதில் 3 மி.மீ. நீளமாக முட்டை வடிவிலும் கூரிய முனையுடனும் மெல்லிய மயிருடனும் சுரப்பிகளுடனும் இருக்கும். தொடக்கத்தில் உதிருந் தன்மை கொண்டது. புல்லி இதழ்கள் மெல்லிய மயிருடனும் வீங்கியுமிருக்கும் 5 மி.மீ. நீளமானது. சிலசமயம் 8 மி.மீ. நீளத்தில் கனியுடன் ஒட்டிக்கொண்டிருக்கும். புல்லிக்குழலின் நீளம் 1.5 மி.மீ. மேலுதடு 2 மி.மீ. நீளமானது. கூர் முனையுடையது. து காயில் முட்டை-ஈட்டி