668 கிரானறுலைட்
668 கிரானுலைட் கொள்கையின் மூலம் முடுக்கப்பட்ட மின்கள் மின் காந்த அலைகளை வெளியிடுவதைப்போல, முடுக்கப் பட்ட நிறைகள் அல்லது பிற வகை ஆற்றல் பரவீடுகள் நிறையீர்ப்பு அலைகளை வெளியிட வேண்டும். குவாண்ட்டம் புலக் கொள்கைப்படி இத்தகைய கதிர்வீச்சு, குவாண்ட்டங்களாக அமைந் திருக்க வேண்டும். இந்தக் குவாண்ட்டங்கள் கிரா விட்டான்கள் எனப்படுகின்றன. ஒளி ஆற்றல் ஃபோட்டான்கள் எனப்படுகிற தனித்தனியான பொட்டலங்களாகப் பரவுவதைப் போலவே நிறை யீர்ப்பு ஆற்றலும் கிராவிட்டான்கள் என்னும் தனித் தனியான பொட்டலங்களாகப் பரவுகின்றது. பழங்கொள்கையான நிறையீர்ப்புப் புலத்தின் பண்புகளிலிருந்து கிராவிட்டானின் பண்புகள் உருவா கின்றன. ஃபோட்டானுக்கு இருப்பதைப்போலவே கிராவிட்டானின் ஓய்வுநிறையும் மின்னும் சுழியாகும். h அது என்னும் அலகுகளில் 2 என்னும் தற்சுழற்சி 27 பெற்றுள்ளது. இதில் h என்பது பிளாங்க் மாறிலி. எனவே கிராவிட்டான் ஒரு போசான் இனத்தைச் சேர்ந்த துகள் ஆகும். அது போஸ் ஐன்ஸ்டீன் புள்ளியியலைப் பின்பற்றுகிறது. அதன் ஓய்வு நிறை சுழியாக இருப்பதால் அதன் சுழற்சி, அதன் இயக்கத்திற்கு இணையான சையில் மட்டுமே அமையக் கூடியதாக இருக்கிறது. எனவே கிரா விட்டானுக்கு இரண்டு தன்னிச்சையான தற்சுழற்சி நிலைகள் மட்டுமே இருக்க முடியும். ஃபோட்டா னுக்கும் இதே பண்புண்டு. கிராவிட்டான்களைப் பதிவு செய்வது கடின மான செயல். பொருளுக்கும் நிறையீர்ப்புப் புலத் திற்கும் இடையிலுள்ள பிணைப்பு மிகவும் வலிமை குறைந்தது.ஓர் எலெக்ட்ரானுக்கும் ஒரு புரோட்டா னுக்கும் இடையிலுள்ள மின் விசையைப்போல 10-** மடங்கே உள்ளது. எனவே நிறையீர்ப்புக் கதிர் உமிழப்படுவதோ உட்கவரப்படுவதோ மிகவும் குறைந்த அளவிலேயே இருக்க முடியும். கிரானுலைட் கே.என்.ராமச்சந்திரன் இது ஒரு மாற்றுருப் பாறை ஆகும். இது பெரியதும் சம அளவினதுமான துகள் பாறையாகும். கிரானு லைட்டில் (granulite) குவார்ட்ஸ், ஃபெல்ஸ் பார், பைராக்சீன், கார்னட் ஆகிய கனிமங்கள் முக்கியமாகக் காணப்படுகின்றன. சில்லிமனைட், சுயனைட், ஸ்பீனல் முதலிய கனிமங்களும் சில சமயங்களில் காணப்படும். இதில் அபிரசும், ஹார்ன்பிளெண்டு ஆகிய கனிமங்கள் காணப்படுவ தில்லை. ஆகையால் கிரானுலைட், சிஸ்ட் பாறை களைப் போன்று எளிதில் பிளவுபடுவதோ உடை வதோ இல்லை. கிரானுலைட் பொதுவாக வெளிறிய நிறத்துடன் இருப்பதைக் காணலாம். கிரானுலைட்டிலுள்ள கனிமங்கள் சம அளவு துகள்களாக உள்ளன. குவார்ட்ஸ் என்னும் கனிமம் குவி - வில்லை போன்ற துகள்களாக உள்ளது. இவை எப்போதும் நீள்வாட்டத்தில் ஒரே திசையில் ணையாக அமைந்திருக்கும். இத்தகைய தோற்றம் அல்லது அமைப்பு பாறைமாற்ற -நுங்கு அமைப்பு எனப்படும். பாறை மாற்ற நுங்கு என இணையாக அமைந்துள்ள குவார்ட்ஸ் கனிமங்களைக் கொண் டுள்ள அமைப்பு கிரானுலைட் என்னும் பாறைக்கே உரியதாகும். விளைவாக கிரானுலைட் வட்டார -பாறை மாற்றத்தின் மிகுந்த வெப்பநிலையில் தோன்றிய பாறை ஆகும். இப்பாறையில் உயர் வெப்ப நிலையில் உண்டாகும் சுயனைட், சில்லிமனைட், கார்னெட் முதலான கனிமங்கள் காணப்படுகின்றன. கிரானுலைட்டுகளில் உள்ள ஒருவகைக் குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பாத்திக் கிரானுலைட் எனப் படும். இவ்வகைக் கிரானுலைட்டில் குவார்ட்ஸ், ஆர்த்தோகிளேஸ் (பொட்டாசியம் ஃபெல்ஸ்பார்), பிளஜியோகிளேஸ் (சோடியம் - கால்சியம் ஃபெல்ஸ் பார்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் இருக்கும் ஆர்த்தோகிளேஸ் - ஃபெல்ஸ்பார் பெரும் பாலும் பெர்த்தைட்டாகக் காணப்படுகிறது. இப் பாறையிலுள்ள கார்னெட் இளஞ்சிவப்பு நிறத்தை யுடைய ஆல்மன்டைன் - கார்னெட் ஆகும், ரூட்டைல், மேக்னடைட் ஆகிய இரண்டும் துணைக் கனிமங் களாக இப்பாறையில் (தவறாமல்) காணப்படு கின்றன. சிலவற்றில் டூர்மலின் காணப்படும். கிரானுலைட்டின் இன்னுமொரு வகை, பைராக் சின் - கிரானுலைட் ஆகும். இதுவும் உயர் வெப்பத் தில் தோன்றிய ஒரு மாற்றுருப் பாறையாகும். இப் பாறையில் பிளஜியோகிளேஸ் ஃபெல்ஸ்பார், ஹைப் பர்ஸ்தீன், டயாப்ஸைடு ஆகிய கனிமங்கள் காணப் படுகின்றன. இதில் காணப்படும் பிளஜியோகிளேஸ் ஃபெல்ஸ்பார், ஆண்டிசீன் அல்லது லெப்ரோடோ ரைட் கனிமமாகவே உள்ளது. இப்பாறைகளில் சமயங்களில் ஆல்மன்டைன் - கார்னட் உள்ளது. வேதி இயைபை அடிப்படையாகக் கொண்டால் பாறை, பைராக்சீன் கிரானுலைட்-கேப்ரோ முத லான பசால்ட் *குடும்பத்தைச் சேர்ந்த ஒத்துள்ளது. சில பாறைகளை கிரானுலைட்டுகளில் பைராக்சீன் வகுப்புக் கனி மங்களாகிய டயாப்சைடு, ஹைப்பர்ஸ்தீன் ஆகிய வற்றுடன் அரிதாக, மிகச் சிறிய அளவில் பயோ டைட் என்னும் கறுப்பு - அபிரகமும், ஹார்ன்