716 கிளர்வு நிலை
716 கிளர்வு நிலை படும்போது, அது ஒளிப் பொலிவு மாற்றங்களைக் கேள்விக் குறிப்பலையாக மாற்றி வெளிப்படுத்து கிறது. ஒரு தன்னொளிர் குழல் விளக்கு (fluorescent lamp), குழலுக்குள் உள்ள வளிமத்தின் ஊடாகப் பாயும் ஒரு கிளர்வு மின்னோட்டத்தைப் பயன் படுத்திப் புற ஊதாக் கதிர்களை வெளிப்படுத்துகிறது. உட்சுவர்களில் பூசப்பட்டுள்ள குழலின் ஒளிர் பொருள் (phosphor) புற ஊதாக் கதிர் ஆற்றலை உட்கவர்ந்து, கண்ணுக்குத் தெரியும் ஒளியை வெளி விடுகிறது. இதயத் துடிப்புச் சீராக்கியின் (pace maker) குறைந்துவரும் குறுக்குச் சவ்வு மின்னழுத்தத்தைக் (transmembrane electrical potential) கிளர்வூட்டப் பயன்படுத்தி ஒரு மின் துடிப்பை உண்டாக்கும். இதயத்தைச் சூழ்ந்துள்ள இழைப் படலத் தசைத் திசுவுக்கு (striated muscle tissue) இந்த மின் துடிப்பு வந்து சேர்ந்தவுடன் அது மின் தூண்டலைத் தன்னை அடுத்துள்ள திசுவுக்குக் கடத்தி விட்டு வளர்சிதை மாற்ற ஆற்றலைப் பயன்படுத்திச் சுருங்குகிறது. இந்த மறுவிளைவின் காரணமாக இதயத் துடிப்பு ஏற்படுகிறது. கே.என்.இராமச்சந்திரன் நூலோதி. W. Landee, C.Davis, P.Albrecht, Electronics Designers Hand Book, Second Edition, Mc Graw-Hill Book Company, New york, 1977. கிளர்வு நிலை அணு அதன் சிறும ஆற்றல் நிலையில் அல்லது தாழ் ஆற்றல் நிலையில் (ground state) இருக்கும்போது அதன் எலெக்ட்ரான்கள் அனைத்தும் தமக்குவிதிக்கப் பட்டிருக்கிற ஓடுபாதைகளில் சுற்றிக்கொண்டிருக்கும். போர் கொள்கைப்படி, ஓர் அணு, கதிர் வீச வேண்டு மானால் அதிலுள்ள எலெக்ட்ரான் தன் சொந்த ஓ பாதையை விட்டு வெளியேறி, அதைவிட அதிகமான ஆற்றலுள்ள ஓடுபாதையில் தற்காலிகமாகக் குடியேற வேண்டும். இதை அணுக்கிளர்வு நிலை என்பர். ஓர் எலெக்ட்ரானை அதன் வழக்கமான ஓடு பாதையிலிருந்து உயர் ஆற்றல் ஓடுபாதைக்குச் செலுத்த வேண்டுமானால் அணுவுக்கு வெளியிலிருந்து ஆற்றலைத் தர வேண்டும். இது போல் ஓர் அணுவின் உள்ளார்ந்த ஆற்றலை அதிகரிக்கும் செயல் கிளர் வூட்டல் (excitaion) எனப்படும். கிளர்வூட்டல் மிகத் தீவிரமாக இருந்தால் எலெக்ட்ரான் n ஐ என்பது குவாண்டம் எண்ணுள்ள ஓடுபாதைக்குச் சென்று விடும். நடைமுறையில் அது அணுவை வெளியேறிவிட்டதாகவே கொள்ளலாம். அயனியாக்கம் (ionisation) என்பர். விட்டு தை கிளர்வூட்டலிலும், அயனியாக்கத்திலும் ஆற்றல் உட்கவரப்படுகிறது. கிளர்வுற்ற நிலை மிகக் குறுகிய காலமே நீடிக்கும். ஒரு நொடியில் பத்துக்கோடியில் ஒரு பங்கு நேரத்திற்குள் அணு தன் பழைய ஆற்றல் நிலைக்குத் திரும்பி வந்துவிடும். அப்போது கிளர்வு நிலை ஆற்றலுக்கும் தொடக்க ஆற்றலுக்கும் இடை யிலுள்ள வேறுபாடு. சுதிர்வீச்சாக வெளிப்படுகிறது. கே.என். ராமச்சந்திரன் கிளர்வு மின்னழுத்தம் B ஒரு கிளர்வுற்ற அணு நிலை அல்லது மூலக்கூறு நிலைக்கும் தாழ் ஆற்றல் நிலைக்கும் இடையிலான மின்னழுத்த வேறுபாடு கிளர்வு மின்னழுத்தம் (excitation potential) எனப்படுகிறது. இந்தச் சொல் பொதுவாக எலெக்ட்ரான்களின் கிளர்வூட்டல் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அதை மூலக்கூறுகளின் கிளர்வுற்ற அதிர்வு நிலை சுளுக்கும் சுழற்சி நிலைகளுக்கும் பயன்படுத்தலாம். கிளர்வு ஆற்றல் (excitation energy) என்பது கிளர்வு மின்னழுத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு சொல் ஆகும். மின்னழுத்தத்தை வோல்ட்டிலும், ஆற்றலை எலெக்ட்ரான் வோல்ட்டி லும் அளவிடும்போது கிளர்வு ஆற்றலும் கிளர்வு மின்னழுத்தமும் ஒரே எண் மதிப்பு உடையவை யாகி விடுகின்றன. போரின் கொள்கைப்படி சிறும ஆற்றல் நிலைக்கும் கிளர்வுற்ற நிலைக்கும் இடையி லான ஆற்றல்களுக்கும், நிலை மாற்றத்தின் காரண மாக வெளியிடப்படுகிற அல்லது உட்கவரப்படுகிற ஃபோட்டானின் அதிர்வெண்ணுக்கும் இடையில் ஒரு Ei-Er என்ற தொடர்புள்ளது.இவ்வாறு hc சமன்பாடு ஆற்றல் உட்கவரப்படுவது அல்லது உமிழப் படுவதற்கான அடிப்படைச் சமன்பாடாக விளங்கு கிறது. இதில் h என்பது பிளாங்கின் மாறிலி: C என்பது ஒளியின் திசைவேசும்; A என்பது ஃபோட் டானின் அலை நீளம்; E என்பது தொடக்க நிலை யின் ஆற்றல்; Er என்பது இறுதி நிலையின் ஆற்றல். தொடக்க நிலையோ, இறுதி நிலையோ தாழ் ஆற்றல் நிலையாக இல்லாதிருந்தால் Ei-Er என்பது இரண்டு நிலைகளின் கிளர்வு ஆற்றல்களுக்கு இடை யிலான வேறுபாட்டுக்குச் சமமான எண் மதிப்புக் கொண்டதாக இருக்கும். இறுதி நிலைச் சிறும ஆற்றல் நிலையாக இருக்குமானால் Ei-Er என்பது தொடக்க நிலையின் கிளர்வு ஆற்றலுக்குச் சமம் ஆகும். இதிலிருந்து நிறமாலைகளின் உதவியால் பல ஆற்றல் நிலைகளின் கிளர்வு ஆற்றலைக் கண்டு பிடிக்க முடியும். உண்மையில் நிலைமாற்றங்களுடன்