உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794 குக்குலிஃபார்மிஸ்‌

794 குக்குலிஃபார்மிஸ் மிசோஃபெஜிட் நீண்ட அழகிய பறவையாகும். டுராகஸ் குட்டையான வட்டமான இறக்கை களையும், மிக நீண்ட வாலையும் உடையது. வால் நுனி விரிந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக இது நீண்ட கால்களையும், உறுதியான குட்டை யான, கீழ்நோக்கி வளைந்த அலகமைப்பையும் உடையது. பொதுவாக, காடுகளிலுள்ள குயில்கள் ஒளிர் பச்சை, ஊதா நிறத்தைக் கொண்டுள்ளன. மிசோஃபெஜிகா, டுராகோ இவற்றின் இறகுகளில் அரிய இரு நிறமிகள் காணப்படுகின்றன. அதாவது இதில் டுராசின் (Turacin) காப்பர் ஆகியவை உள்ளன. பச்சை வண்ண டியூராகோவெர்டினில் நிறமி உள்ளது. ஏறக்குறைய அனைத்து டுராகஸ் இனக் குயில்கள் தலையின் மேற்பகுதியில் இறகுகளா லான பெரிய கொண்டையை உடையன. M பெரும்பாலான குயில்கள் காட்டுப்பறவை களாகும். ஆனால் சில வகைகள் வேறுபட்ட சூழலில் வசித்து வருகின்றன. குயிலினத்தைச் சேர்ந்த குகுலஸ் (cuculus) என்னும் பேரினம் மரங்களடர்ந்த நிலப் பகுதியில் வாழும். கியுராஸ் (guiras) எனும் வகை தன் அமெரிக்காவிலுள்ள மரங்களில்லாத புல் வெளிப்பகுதிகளில் வசிக்கிறது. கிளமேடர் (clamator), கிரைசோகாக்ஸிக்ஸ் (chryosococcyx) ஆகிய இனங் கள் மரங்களுள்ள பகுதியில் காணப்படுகின்றன. வெப்ப மண்டலக்குயில்கள் டம் பெயர்ந்து செல் லும். சில இனங்கள் ஒவ்வொரு திசையிலும் 3200 கி.மீ வரை பயணம் மேற்கொள்ளும். ஏறக்குறைய, குயில்கள் முற்றிலும் ஊனுண்ணி களாகும். ஒருசில இனங்கள் மட்டும் மயிரடர்ந்த கம்பளிப் பூச்சிகளை உண்ணுகின்றன. மடகாஸ் கரிலுள்ள கோவஸ் (couas) குயில்கள் மட்டுமே பழங் களைத் தின்கின்றன. ஏறக்குறைய டுராகஸ் இனம் முழுமையும் பழங்களையும், பொரி என்னும் பழ வகைகளையும் உண்ணும். இருப்பினும் வை சில பூச்சிகளையும் உண்ணுகின்றன. எனிஸ், கியுரா தவிர ஏனைய குயிலினங்கள் கூச்ச உணர்வும், தனிமையை விரும்பும் பண்பும் கொண்டவையாகும். பெரும்பாலான டுராகஸ் இனக் குயில்கள் பேரொலி எழுப்பி ஒரே கூட்டமாகச் செல்லும் இயல்புடையன. இவை தம் எதிரிகளைக் கூர்ந்து நோக்கும்போது கொடூரமான இனிமையற்ற ஒலியை உண்டாக்கும். டுராகோ இனக் குயில்கள் நல்ல குரல் வளம் கொண்டுள்ளன. இவற்றின் ஒலி பார்ப்பவர்களை அழைப்பதுபோல் இருக்கும். பல் வகையான அழைப்புகளில் எச்சரிக்கைக் குறிப்பு களும் இனிய பாட ல்களும் அடங்கும். இவ்வினிய ஒலிகளை ஆண் குயில்கள் மட்டுமே எழுப்புகின்றன. ஏறக்குறைய 50 இனங்கள் பரிமாற்ற முறையில் (பிற பறவைகளின் கூட்டில் தம் முட்டைகளை இடுதல்) முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவையாக உள்ளமையால் இக்குயில்களின் இனப்பெருக்க முறை கவனத்தை கவரும் விதத்தில் உள்ளது. அவை வேற் றினப் பறவைகளின் கூடுகளில் தங்கள் முட்டைகளை இடுகின்றன. அப்பறவைகள் அடைகாத்து இளம் குயில் குஞ்சுகளை உண்டாக்குகின்றன. குகுலினே என்னும் துணைக்குடும்பத்தைச் சேர்ந்த இனத்திலும், நியோமார்பினே என்னும் இனத்திலும் பரிமாற்ற முறையில் இனப்பெருக்கம் காணப்படுகிறது.தவிர, பிற குயில் இனங்களும், அனைத்து டுராகஸ் இனத் தைச் சேர்ந்த குயில்களும் வழக்கமான முறையில் குஞ்சுகளைப் பேணிக் காக்கின்றன. டுராகஸ் இனம் மரங்களின் உயரத்தில் கூட்டை அமைத்துக் கொள்ளும். இவற்றின். அடைகாக்கும் காலம் 16-18 நாள்களாகும். பிறகு இளம் குஞ்சு களைப் பொரிக்கும். தாய்க்குயில் பழங்களை அக் இறக்கை முளைக்க ஆறு குஞ்சுகளுக்கு ஊட்டும். வாரங்களாகும். பரிமாற்ற (குடியேறும்) வகையைச் சார்ந்த பெண்குயில் தன்னுடைய பொருத்தமான பகுதிக்குள்ளேயே பிற பறவை இனக் கூடுகளைக் கண்டுபிடித்து வழக்கமாக அக்கூடுகள் ஒவ்வொன்றி லும் ஒரு முட்டைவீதம் இட்டுச் செல்லும். இப்பெண் குயில் பிறபறவை முட்டையிடும் வரை காத்திருக்கும். முட்டையிடும் சில குயில்கள் பிற பறவைகளின் முட்டைகளைப் போலவே இடும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஒம்புயிரி இனங் களைத் தேர்ந்தெடுக்கும் திறனுள்ள குயில் அந்த ஓம்புயிரியின் முட்டைகளை ஒத்திருக்குமேயானால் மிகுந்த நன்மைகளைப் பெறுகிறது. சிறப்பியல்பு மிக்க ஓட்டின் அமைப்பு, பெண்குயிலின் குறிப் பிடத்தக்க தன்மையாக அமையும். இது ஆண் குயி லால் பாதிக்கப்படுவதில்லை. முட்டையிலிருந்து குஞ்சு வெளி வந்தவுடன், கண்கள் மூடியே இருக்கும். பரி மாற்ற வகையைச் சேர்ந்த இளம் குயில்கள் பிற முட்டைகளையும் வேற்றுப் பொருள்களையும் சிறிது சிறிதாக வெளியில் தள்ளிவிட்டுக் கூட்டை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டு ஊட்டி வளர்க்கும். கூட்டுப் பறவை எடுத்துவரும் உணவை உண்டு வளரும். இத்தகவமைவு ஏனைய பரிமாற்ற வழக்கமுடைய குயில்களிடத்தில் காணப்படுவதில்லை. எடுத்துக் காட்டாக, தலையில் கொண்டையுள்ள குயிலினத் தில் இவ்வழக்கம் குறைந்து காணப்படுகிறது. கோகிலம் (indian koel). இக்குயில்கள் இந்தியா. இலங்கை முழுதும் பரவி உள்ளன. இவை அடர்ந்த காடு, மாந்தோப்பு, சோலை ஆகிய டங்களில் வசிக்கும். ஆண் பறவையின் உடல் முழுதும் பளபளக் கும் கரிய நிறமிருக்கும். பெண் பறவையின் உடலின் மேற்பரப்பு கொண்டும் ஆழ்ந்த பழுப்பு நிறம் வெண்புள்ளிகள் நிறைந்தும் காணப்படும். சிறு புழு பூச்சிகள், நத்தை. சிறு பறவைகளின் கூடுகளில் திருடிய முட்டைகள் ஆகியவை இவற்றின் உணவா கும். ஆண் பறவைகள் இனிய குரல் எழுப்பும் வழக்க