உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கன்று ஈன முடியாமை

62 கன்று ஈன முடியாமை பட்ட விலங்குகளிலும், கட்டிப்போட்டு வளர்க்கப் பட்ட பசுக்கள், எருமைகள் மற்றும் அசாதாரண மான சினைப் பசுக்கள் ஆகியவற்றிலும் ஏற்படும். அடிப்படைக் காரணங்கள் மரபியல் காரணங்கள். சில குறிப்பிட்ட இனப் பசுக்கள், நாய்கள் கன்று ஈனமுடியாமையால் துன்பமுறுகின்றன. எ.கா. முல்லேரியன் குழாய்க் கோளாறுகள், இரட்டை வெளித்துளைகள் (double external open- ings), இரட்டைப் பிறவிகள், கருப்பையில் வளரும் கன்றில் அசாதாரண உடல் கூறு அமைப்பு, பெருத்த அளவு போன்றன. உணவு மற்றும் பராமரிப்பு முறை மால் ஏற்படும் குறைபாடுகள். எ.கா. சத்துள்ள உணவு அளிக்காமையால் கருப்பையைச் சுற்றியுள்ள இடுப்பு எலும்புகள் வளர்ச்சி குன்றி, சுருங்கி இருப்பதால் கன்று ஈனும் போது கடினம் ஏற்படும். கருப்பையைத் தாக்கும் கொடிய நோய்கள், கருப்பைக்கு ஏற்படும் விபத் துகள் (எ.கா. கருப்பைச் சுழற்சி (torsion) கருப்பை யைத் தாங்கும் நாண் (tendon) அறுந்துபோதல், கருப்பை இறங்குதல்)ஆகியன. ல D தற்செயல் அல்லது உடனடிக் காரணங்கள். கன்றின் மூலம் ஏற்படும் கன்று ஈனமுடியாமை (foetal cause): இந்நிலை ஏற்படும்போது தாய்ப் பசுவின் இடுப்பு எலும்புச் சுற்றளவு சரியாக இருப்பினும் கருப்பையில் வளரும் கன்றின் மிகை வளர்ச்சியால் வெளியே தள்ளுவதற்கு இயலாத நிலை ஏற்பட்டுக் கன்று ஈனமுடியாமை நிகழ்கிறது. இது ஒரு மரபியல் குறை ஆகும். இக்கன்றுகள் பெரும்பாலும் இறந்தே உள்ளி ருக்கும். சான்றாக. கன்றின் நிலைப்பு (presentation). அமைப்பு (position), இருக்கை (posture) ஆகிய வற்றால் கன்று ஈன முடியாமை ஏற்படுவதுண்டு. நிலைப்பு. குறுக்கு நிலை (transverse) மேல்புறமாக அல்லது கீழ்ப்புறமாக நிலைத்த தன்மையில் உள்ள dorsal or ventral) நிலையில் சுன்று கருப்பையில் நீள்வாக்கில் இருப்பதை விடுத்துக் குறுக்குவாக்கில் மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ நிலைத்து விடுவ தால் கன்று ஈன முடியாமை ஏற்படுகிறது. இரட்டைப் பிறவிகள் அமையும்போது கருப்பை யின் வாய்ப்பகுதியில் போதிய இட வசதியின்மை யாலும் விரியும் தன்மை குறைவதாலும் வெளிக் கொணரமுடியாமை ஏற்படுகிறது. அமைப்பு. கன்றின் முதுகெலும்பு தாயின் முது லும்பை dorsosacral) நோக்கி மேல்புறமாக வது சாதாரண அமைப்பு: அதை விடுத்துக் மாகவோ பக்கவாட்டிலோ (dorsopubic & dorsoiliac) இருக்கும்போது தடை ஏற்பட்டுக் கன்று ஈனமுடியாமை ஏற்படுகிறது. இருக்கை. மாறுபட்ட இருக்கையால் ஏற்படும் கன்று ஈனமுடியாமை: எ.கா: தலையும், கழுத்தும் பக்கவாட்டில் திரும்பி இருக்கும்போது கருப்பையில் இருந்து வெளிவர முடியாமை ஏற்படுகிறது. கழுத் தும், தலையும் கீழ் நோக்கித் திரும்பி இருக்கும் போதும் கழுத்து, தலை முதல் மார்பின் பகுதி வரை கீழ்நோக்கி இருக்கும்போதும் கன்று வெளிவர முடியாமை ஏற்படுகிறது. முன், பின் கால்களில் ஏற்படும் அசாதாரண அமைப்புகளில் இந்நிலை சில சமயம் ஏற்படுகிற கிறது. எ.கா: முன்கால் தோள்பட்டை, மூட்டு மடங்கி இருத்தல், முன்கால்கள் இரண்டும் தலைக்கு மேலான பெருக்கல் வடிவத்தில் மாறி இருத்தல், பின் கால்கள் இரண்டும் கன்றின் வயிற்றிற்கு இணையாக நீட்டப் பட்டு (நாய் உட்கார்ந்து இருப்பதுபோல்) இருத்தல். தாயின் இடுப்பு எலும்பு சிறிதாக இருக்கும்போது கன்றின் தொடை எலும்பின் தலைப்பகுதி பூட்டிக் கொள்ளுதல், தாய் மூலம் ஏற்படும் கன்று முடியாமை (maternal cause) என்னும் நிலை தாயின் குறுகிய இனப்பெருக்கக் குழாய்களாலும் அல்லது கன்றை இனப்பெருக்க உறுப்பு வழியாக வெளியே தள்ளுவதற்கான ஆற்றல் இல்லாமையாலும் ஏற்படு கிறது. மேலும் குறுகிய இடுப்பு எலும்புகளில் ஏற்படு கின்ற எலும்பு முறிவும் அடங்கும். க க சன தாய்மூலம் ஏற்படும் கன்று ஈனமுடியாமை. தாயின் குறுகிய இடுப்பு எலும்பு வட்டம் மற்றும் இனப் பெருக்கக் குழாயின் கழுத்து (cervix) விரிந்து கொடுக் கும் தன்மையில் குறைவு போன்ற கோளாறுகள் ஏற்படும்போதும், தாயின் சிறுநீர்ப்பை கன்று வெளி வரும் பாதையை அடைத்துகொள்ளும்போதும் கருப் பைச் சுழற்சி ஏற்படும்போதும் சுருப்பை இடம்மாறி அமையும்போதும் கருப்பை இறங்கி விடும் போதும் ஏற்படும். மேலும் தாயின் கருப்பையில் உள்ள தசைநார்கள் அளவுக்கு மீறிச் சுருங்குவதால் கருப்பையில் உள்ள கன்று வெளியேற்றப்படுகிறது. இதற்குப் போதிய ஆற்றல் இல்லாவிடில் தேக்கம் ஏற்பட்டுக் கன்று ஈன முடியாமை ஏற்படும். அப்போது கருப்பைத் தசைகள் மட்டுமன்றி இடுப்பையும் வயிற்றையும் ஒட்டியுள்ள தசைகளும், சுருங்குதல் (contraction) வேண்டும். கருப்பைச் சுழற்சியாலும் நீண்ட நேரம் முக்கிக் களைப்படைந்த ஆற்றல் குறைவாலும் சில நேரங் களில் கன்று ஈனமுடியாமை ஏற்படுகிறது. மெலிந்த, இரத்தச் சோகையுடன் நீண்டகால நோயால் தாக்கமுற்ற தாய்ப் பசுவும் கன்று ஈனமுடி யாமையால் துன்பமடைகிறது.