உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/918

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898 குரோமோசோம்‌ பிரியாநிலை

898 குரோமோசோம் பிரியாநிலை ஜீன்களே வலிமையான பிணைவுக்குட்பட்டு அடுத்த தலைமுறைக்கு ஒன்றாகச் செலுத்தப்படும் எனவும், ஜீன்களுக்கிடையே உள்ள தொலைவு மிகும்போது பிணைவின் வலிமை குறையும் எனவும், ஜீன்கள் குரோமோசோம்களில் ஒன்றையடுத்து ஒன்று வரிசை யில் அமைந்திருக்கும் எனவும் மார்கன், கேசில் (Castle) என்னும் மரபியலறிஞர்கள் கண்டறிந்தனர். ஒரே குரோமோசோமில் உள்ள பிணைவுக்குட் பட்ட அனைத்து ஜீள்களும் ஒருசேர ஜீன் பிணைவுத் தொகுதி (linkage groups) எனப்படும். இணை குரோமோசோம்கள் இரண்டிலும் ஒரே மாதிரியான ஜீன்கள் (identical allelomorphs) இருப்பதால், ஓர் ணை குரோமோசோமில் உள்ள ஜீன் பிணைவுத் தொகுதி அனைத்தும் ஒரே தொகுதியாகக் கணக் கிடப்படும். இவ்வாறு எத்தனை ஒற்றைத்தொகுதிக் குரோமோசோம்கள் (haploid chromosomes) ஒரு விலங்கினத்தின் செல்லில் உள்ளனவோ அத்தனை ஜீன் பிணைவுத் தொகுதிகளும் அவ்விலங்கில் இருக்கும் என்னும் கருத்தைச் சட்டன் முதன்முதலில் வெளி யிட்டார். அதை மார்கனும் அவரின் ஆய்வாளர் களும் ஆய்வு வழி மெய்ப்பித்தனர். எடுத்துக்காட்டாக ஈயிலும், சோளத்திலும். பட்டாணியிலும் அவற்றின் செல்களில் முறையே 4,10,7 ஒற்றைத் தொகுதிக் குரோமோசோம்கள் காணப்படுகின்றன. அதே எண்ணிக்கையில் அமைந்த ஜீன் பிணைவுத் தொகுதிகளும் அவற்றில் காணப்படுவதாகக் கண்ட றியப்பட்டுள்ளது. பழ ஜீன் பிணைவு காரணமாகப் பெற்றோரின் பண்புத் தொகுதிகள் அதே அளவில் சேய்களிடம் தோன்றுகின்றன. இதனால் பண்பு அல்லது இயல்பு மாற்றங்கள் (variability) ஓர் இனத்தில் குறையும். குறுக்கேற்றம் ஏற்பட்டால்தான், ஜீள் பிணைவு களால் அவ்வினத்திற்குள் இயல்பு மாற்றங்கள் ஏற்படும். எனவே இது படிமலர்ச்சியின் வளர்ச்சிக்கு அடிப்படையானது. எம். இராமலிங்கம் மைட்டோமக் குரோமோசோம்கள் குரோமோசோம் பிரியாநிலை மறைமுகச் செல்பிரிவின் போது ஒரு குரோமோ சோமின் இரண்டு குரோமேட்டிட்களும் தனித்தனி யாகப் பிரிந்து சேய்க் குரோமோசோம்கள் ஆகிச் செல்லின் துருவங்களையும் நோக்கி நகர் கின்றன. இதுதான் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி. ஆனால், ஏதேனுமொரு காரணத்தால் இரு குரோ மேட்டிட்களும் பிரியாமல் ஒருங்கிணைந்து ஒரே துருவத்தை அடைய நேரிடலாம்; இதைக் குரோமா சோம் பிரியாநிலை என்பர். மறைமுகச் செல்பிரிவில் குரோமோசோம் பிரியாநிலை ஏற்படுவதைவிட மிக அதிகமாகக் குன்றல் பிரிவின் போதுதான் பிரியாநிலை ஏற்படுகிறது. இப் வை குன்றல் பகுப்பின் முதல் பிரிதலின்போது (first meiotic division) இணைந்துள்ள இரு குரோமோ சோம்கள் பிரிந்து செல்லின் இரண்டு துருவங்களையும் சென்றடையும். ஆனால், சில செல்களில் பிரியாமல் ஒன்றாக ஒரே துருவத்தை அடைகின்றன. மையோடிக் பிரியாநிலை என்பர். இவ்வி ருவகையான பிரியாநிலைகளையும் படங்களினின்றும் தெளிவாக அறியலாம். தை குரோமோசோம் பிரியாநிலையின் விளைவுகள். ஒவ் வோர் இனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யுள்ள குரோமோசோம்கள் உள்ளன. மறைமுகச் செல்பிரிவில் பிரியா நிலை உண்டாகும்போது அப்பிரி தலினின்றும் பெறப்பட்ட இரண்டு செல்களிலும் வெவ்வேறான எண்ணிக்கையுள்ள குரோமோ சோம்கள் இருக்கும்; ஒன்றில் ஒரு குரோமோசோம் குறைவாகவும், மற்றதில் ஒரு குரோமோசோம் கூடு தலாகவும் இருக்கும். குன்றல் பகுப்பு நிகழும்போது குரோமோசோம் பிரியாநிலை ஏற்படின் அத்தகைய செல்களினின்றும் உண்டாகும் விந்துச் செல் அல்லது முட்டையில் ஒரு மையோட்டிக் பிரியா நிலை 1. மைட்டோவிஸ் இடைநிலை 2.குரோமேட்டிட்கள் பிரிதல் 3. குரோமேட்டிட்கள் பிரியா நிலை 1. மையோஸிஸ் முதல் பிரிதலின் இடைநிலை 2.குரோமோசோம்கள் பிரிதல் 3. குரோமோசோம்கள் பிரியா நிலை