உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/920

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900 குரோமோசோம்‌ பிறழ்ச்சி

900 குரோமோசோம் பிறழ்ச்சி நேரிடும். இத்தகைய குரோமோசோம் மாற்றங் களைக் குரோமோசோம் பிறழ்ச்சி அல்லது குரோ மோசோம் திடீர் மாற்றம் (chromosome mutation) என்பர். உயிரிகள் புற அமைப்பை இத்தகைய மாற்றங்கள் வெவ்வேறு அளவுகளில் குறையாகவோ, மிகுதியாகவோ பாதிக்கின்றன. குரோமோசோம் பிறழ்ச்சி என்பது ஒத்த அமைப் புடைய குரோமோசோம்கள் இரண்டிலுமோ அவற்றில் ஒன்றில் மட்டுமோ நிகழலாம். இந்த அடிப்படையில் குரோமோசோம் பிறழ்ச்சியை குரோமோசோமின் உள்ளே ஏற்படும் பிறழ்ச்சி, இரு குரோமோசோம்களுக்கிடையே ஏற்படும் பிறழ்ச்சி என இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம். ஒரு குரோமோசோமுக்கு உள்ளே மட்டும் ஏற் படும் பிறழ்ச்சி. ஒத்தமைப்புடைய குரோமோசோம் இரண்டில் ஒன்றில் மட்டும் மாற்றத்தை உண்டாக்கு கிறது. இவ்வகைப் பிறழ்ச்சிகளைக் கீழ்க்காணும் முறையில் பிரிக்கலாம். நீக்கம் அல்லது குறைபாடு. ஒரு குரோமோசோமின் டைப்பட்ட பகுதிகள் எங்கேனும் அல்லது அதன் இரண்டு முனைப் பகுதிகளில் ஒரு சிறு துண்டு இல்லாமல் போய்விடுதலை நீக்கம் அல்லது குறை பாடு என்பர். குரோமோசோமின் நுனிப்பகுதியில் நீக்கம் ஏற்பட ஏதேனும் ஓரிடத்தில் குரோமோசோம் உடைந்து அந்தத் துண்டு இழக்கப்படுகிறது. இடைப் பட்ட பகுதியில் நீக்கம் ஏற்பட இரண்டு இடங்களில் குரோமோசோம் உடைய வேண்டும். இவ்விதம் உடைந்த குரோமோசோம் துண்டில் இடைமணி (centromere) இல்லையெனில் அது செல்பிரிதலின் முன் கடைநிலையின் (anaphase) போது ஏனைய குரோமோசோம்களுடன் சேராது பின்தங்கி இறுதி யில் புதிதாக உண்டாகும் நியூக்ளியசில் சேராது தொலைந்துபோகும். ABCDEFGHI மாற்றம் அடையும். ABFGHI என்று ஜீன்கள் CDE என்னும் ஜீன்களை உடைய துண்டு இல்லா மல் நீக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ள இரட்டித்தல். ஒரு குரோமோசோம் ஜீன்களில் இரு முறை காணப்படுமாயின் அதை இரட்டித்தல் எனலாம். இல்விதம் இரட்டித்த ஜீன் கள் உள்ள பகுதிகள் அடுத்தடுத்து இருக்கலாம்; அவை இருவகையாக AB CDE CDE FGH AB CDE EDC FGH ருக்கும்.

ஒரே வரிசையில் உள்ள

இரட்டித்த ஜீன்கள் நேர்மாறான வரிசையில் ஜீன்கள் இரட்டித்த பகுதி கள் உள்ளன. அல்லது இரட்டித்த துண்டுகளுக்கு இடையே வேறு ஜீன்கள் இருக்கலாம். சில சமயங்களில், இரட்டித்த பகுதி ஒரு தனி குரோ மோசோம் துண்டாகக்கூட இருக்கலாம். AB CDEFGHI CDE (ஒரு குரோமோசோம்) (இரட்டித்த துண்டுக் குரோ மோசோம்) தலைகீழ் மாற்றம். ஒரு குரோமோசோம் இரண்டு இடங்களில் உடைந்து அவற்றிற்கு இடையில் உள்ள துண்டு 180 சுழன்று மீண்டும் அதே குரோமோசோ மில் இணைந்து கொண்டால் உண்டாகும் குரோ மோசோம் கீழ்க்காணுமாறு இருக்கும். ABCD JIHGFE KLMNOP தலைகீழ்மாற்றம் இருவகைப்படும். தலைகீழ்மாற்றம் அடைந்த துண்டில் இடைமணி இருப்பின் அதை டைமணியைச் சூழ்ந்த தலைகீழ் மாற்றம் என்பர். எ.கா. ABCD JIHGFE KLMNOP (அம்புக்குறி இடை மணியைக் குறிக்கிறது) மாறாக, டைமணி இத்துண்டுக்கு வெளியே இருப் பின், இடைமணிக்கு ஒரு புறம் அமைந்த தலைகீழ் மாற்றம் என்பர். (எ.கா) ABCD JIHGFEK LMNOP (அம்புக்குறி டைமணியைக் குறிக்கிறது) ஐசோகுரோமோசோம்கள். இரு குரோமேட்டிட்கள் ள்ள ஒரு குரோமோசோமின் இடைமணி குறுக்கே உடைந்து இரு துண்டுகளாக ஆனால், பயனாக இரு குரோமோசோம்கள் உண்டாகும். அதன் இரண்டு ஐசோகுரோமோசோம்கள் உண்டாகி யுள்ளன. இக்குரோமோசோம்களின் இரு புயங்களும் 'ABCDEFGH IJKLMNO ABCDEFGH IJKLMNO