உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னி இனப்பெருக்கம்‌: (விலங்கியல்‌) 75

போன்றவற்றில் ஒற்றைப்படைக் கன்னி இனப் பெருக்கம் காணப்படுவதாகச் செய்திகள் உள்ளன. சக்கரவுயிரிகளில் ஒற்றைப் படைக் கன்னி னப் பெருக்கம் நடைபெறுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்தக் கன்னி இனப்பெருக்க முறையில் கருவுறாச் சினையிலிருந்து ஆண் உயிரிகள் உண்டாகின்றன. இத்தகைய ஆண் உயிரிகளில் குரோமோசோம் எண்ணிக்கை ஒற்றைப்படையாகவுள்ளது. அதனால் தான் இதை ஆண்பிறப்பு இனப்பெருக்கம் எனக் குறிப்பிடுகின்றனர். சவ்விற்க்கைப் பூச்சிகள் (hymenoptera), ஒத்த இறக்கைப் பூச்சிகள் (homoptera), கடின இறக்கைப் பூச்சிகள் (coleoptera), இழையிறக்கைப் பூச்சிகள் (thyconoptera) Gundry பூச்சிகளில் இத்தகைய கன்னிப் பிறப்புக் காணப்படுகிறது. டெட்ராநிக்கஸ் (tetranychus) என்னும் செந்நிறச் சிலந்தியிலும், சில கடின உண்ணிகளிலும், மென் உண்ணிகளிலும் ஆண் பிறப்புக் கன்னி இனப்பெருக்கம் காணப்படுவ தாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரட்டைப் படைக் கன்னி இனப்பெருக்கம். பெண் பிறப்புக் கன்னி இனப்பெருக்கம் அல்லது இரட்டைப் படைக் கன்னி இனப்பெருக்க முறையில் சிளையணு ஆக்கத்தின்போது சினையணுவாகும் செல்லிலிருந்து ஒரு துருவச் செல் மட்டுமே வெளிவருகிறது. அதனால் குன்றல் பகுப்பு (meiosis) நிகழ்வதில்லை. சினையணு வில் இரட்டைப்படையில் (21) குரோமோசோம்கள் உள்ளன. சக்கரவுயிரி (wheel animalcules) லை முடிச்சுப் பூச்சிகளில் (gall flies) இரண்டு வகையான சினையணுக்கள் உண்டாகின்றன. ஒரு வகைச் சினையணுக்கள் ஒற்றைப்படைக் (n) குரோமோ சோம்கள் பெற்றுள்ளன. மற்றொரு வகைச் சினை யணுக்கள் இரட்டைப்படைக் (2n) குரோமோசோம் கள்பெற்றுள்ளன. இரண்டு வகைச் சினையணுக்களும் கன்னி இனப்பெருக்க முறையால் பெண் உயிரிகளாக வளர்கின்றன. லை முடிச்சுப் பூச்சிகளில் (n) குரோமோ சோம்கள் உடைய பெண்ணுயிரிகள் (2n) குரோமோ சோம் உடைய பெண்ணுயிரிகளிலிருந்து வேறுபட்ட தோற்றமுடையனவாக உள்ளன. பெண் பிறப்புக் கன்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகளில் சினையணுவாக்கம் நிகழும் போது சினையணு வகைச் செல்லிலிருந்து ஒரு துருவச்செல் மட்டுமே உண் டாகிறது. அதனால் சினையணுவில் குரோமோசோம் எண்ணிக்கை குறைவதில்லை. (எ.கா: சேட்டுடலிகள்) ஆர்ட்டிமியா (artemia) போன்ற ஒட்டுடலியில் இரண்டு துருவச் செல்கள் உண்டாகின்றன. சினை யணு நியுக்ளிய சில் ஒற்றைப்படைக் குரோமோ சோம்களே உண்டாகின்றன. ஆனால் ரண்டாம் துருவச் செல்லின் நியுக்ளியஸ் சினையணு நியுக்ளிய கன்னி இனப்பெருக்கம் (விலங்கியல்) 75 சுடன் கலந்து விடுவதால் இரட்டைப்படைக் குரோ மோசோம் நிலை இச்சினையணுக்களில் தோற்று விக்கப்படுகிறது. செயற்கைக் கன்னி இனப்பெருக்கம். புறச் சூழல் காரணிகளால் தூண்டப்பட்டு நடைபெறும் கன்னி இனப்பெருக்கத்திற்குச் செயற்கைக் கன்னி இனப் பெருக்கம் என்று பெயர். உணவு, வெப்பம், கூட்டமாக அமையும் தன்மை போன்ற பல புறக்காரணிகள் செயற்கைக் கன்னி இனப்பெருக்கத்திற்குக் காரண மாகவுள்ளன. வளைதசைப்புழு, மெல்லுடலி, முள் தோலி, இருவாழ்வி, பறவை, சில பாலூட்டி போன்ற வற்றிலும் செயற்கைக் கன்னி இனப்பெருக்கம் காணப்படுகிறது. செயற்கைக் கன்னி இனப்பெருக்க உயிரிகளில் பொதுவாக நிறைவளர்ச்சியும், முதிர்ச்சியும் மிக அரிதாகவே ஏற்படுகின்றன. இவற்றின் கரு வளர்ச்சி கருக்கோள அல்லது ஈரடுக்குக் கருக்கோள நிலை வரை நீடிக்கிறது. செயற்கை முறைத் தூண்டல் காரணமாகச் சினையணு தொடர்ச்சியான உருத்தோற்ற வளர்ச்சி நிலைக்குத் தூண்டிவிடப்படுகிறது. கருவுறாச் சினையணுவைச் சிறிய மெல்லிய நிணநீரில் தோய்க்கப்பட்ட கண்ணாடி ஊசியால் குத்தி விடுதல், கருவுறாச் சினையணுவை மிகுசெறிவான கடல் நீர் இரத்தச்சீரம். பியூட்ரிக் அமிலம், காரம் போன்ற வற்றுடன் வினை புரியச் செய்தல் கருவுறாச் சினைச் செல்லினுள் பிற விலங்கினத்தின் விந்தைச் செலுத்தி அதன் வளர்ச்சியைத் தூண்டுதல் நட்சத்திர மீனின் சினையணுவை வளை தசைப் புழுவின் விந்தணுவைக் கொண்டு தூண்டிவிடுதல் என்னும் மூன்று வழிகளில் சினையணுக்களின் வளர்ச்சி தூண்டி விடப்படலாம். ஓ. ஹெர்ட்விக், ஆர். ஹெர்ட்விக் என்போர் செயற்கைக் கன்னி இனப்பெருக்கமுறையைக் குளோரோபாம் அல்லது ஸ்ட்ரைக்னைன் கொண்டு கடல் பிரட்டையின் (sea urchin) முதிர்ச்சியடைந்த சினையணுவில் செயல்படுத்தினர். சோடியம். பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகியவற் றின் குளோரைடுகள், பியூட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், கிளைக்காலிக் அமிலம், கொழுப்பு அமிலம், டொலின் ஈதர், ஆல்கஹால், பென்சீன், அசெட் டோன், யூரியா, சுக்ரோஸ் போன்றவை செயற்கைக் சுன்னி இனப்பெருக்கம் உண்டாக்கக்கூடிய வேதித் தூண்டு பொருள்களாகும். வெப்ப அதிர்வு, குளிர் அதிர்வு, சினையணுக் குலுக்கல் போன்ற காரணி களும் செயற்கைக் கன்னி இனப்பெருக்கத்தைத் தூண்டிவிடுகின்றன எனக் கருதப்படுகிறது. . பருவ முதிர்ச்சியடைந்த P ஒரு சினையணு இரத்தத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட ஒரு நுண்ணிய ஊசியால் குத்தப்படும்போது அந்தச் சினையணுவில்