உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகுப்‌ பூண்டு 79

கனகுப் பூண்டு 79 லக வட்டத்தில் உள்ள சூலக .இலைகள் ரண்டும் ணைந்தவை. மேல் மட்டச் சூலகப்பை இரண்டு அறைகள் கொண்டது. ஒவ்வோர் அறையிலும் இரண்டு அல்லது மூன்று சூல்கள் அச்சுச் சூலொட்டு முறையில் சூலகப்பையில் இணைந்திருக்கும். ஒல் வொரு சூலகப்பையிலும் பொதுவாக நான்கு விதை கள் காணப்படுகின்றன. சூலகப்பை நீண்டது. தேன் சுரக்கும் திறனுடைய தட்டுப் போன்று அமைந் திருக்கும். சூலகத்தண்டு நீண்டு இரண்டாகப் பிளவுற்ற சூலக முடிகளுடன் காணப்படுகிறது. கனி ஓர் உலர் வெடிகனியாகும். இதில் பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. வணிக முறையில் மலர்களுக்காகத் தோட்டங் களில் பயிரிடப்படும் முக்கிய சிற்றினங்களில் குரோ செண்டரா அண்டுலேஃபோலியா (Crossandra undulaefolia) சிறப்பானது. இத்தாவரத்தின் மலர்கள் சிவந்த ஆரஞ்சு நிறமுடையவை. அல்லிவட்டம் இணைந்தது. மலரின் மேற்பகுதி விரிந்து இரண்டு உதடுகளாகப் பிரிந்துள்ளது. கழுத்துப் பகுதி குறுக லானது. மேல் உதடு இரு சிறு அல்லிகளின் ணைப் போடும், கீழ் உதடு சற்றுப் பெரிய மூன்று அல்லி களின் இணைப்போடும் காணப்படும். கனகாம்பரம் வெப்பம் மற்றும் வெப்பச் சார்பு (subtropics) மண்டலங்களில் உள்ள களிச் சேற்று வண்டல்மண் பகுதிகளில் பயிரிட ஏற்றது. குரோசெண்ட்ரா ஃபுளோரா (Crossandra flora) என்னும் சிற்றினம் மஞ்சள் நிற மலர்களைக் கொண்டது. குரோசெண்ட்ரா கைனென் சிஸ் (C. guinensis) இளம் சிவப்பு மலர்களைக் கொண்டது. இச்சிற்றினத்தின் இவைகள் கவர்ச்சியானவை. எனவே இது அழகிய தாவரமாகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. குரோசேண்டரா அண்டுலே போலியோ உணர்ச்சியைத் தூண்டும் பயன்படுகிறது. கனகுப் பூண்டு மருந்தாகப் டோரதி கிருஷ்ணமூர்த்தி இதன் தாவரவியல் பெயர் எக்ஸாகம் பிடங்கு லேட்டம் (Exacum pedumculatum) என்பதாகும். இது ஜென்சியனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. கனகுப் பூண்டு ஈரமான இடங்களில் வளரும் ஒருபருவச் சிறுசெடி. இதன் உயரம் 10-25 செ.மீ,, வேர்கள் ஏறத்தாழ 6 செ.மீ.நீளம் உடையவை. தண்டு வெளிர் பச்சையாக நாற்கோணமாகக் கவட்டை முறையில் கிளைத்தது; மழமழப்பானது. தண்டின் பக்கங்கள் 24 மி.மீ. அகலமுடையவை. செடி இலைகள். தனி இலைகள் இலையடிச் செதில்க ளற்றவை, குறுக்குப்போக்கு அடுக்கம் உள்ளவை. ஏறத்தாழ இலைக்காம்பற்றவை. இலையடி குறுக லானது, விளிம்பு முழுமையானது, நுனி கூர்மை யானது; இலை ஈட்டி வடிவம், நீள்சதுரம் அல்லது முட்டை வடிவமுடையது. 1.5-3×0.6-2,3 செ.மீ. வலைப்பின்னல் குவிமைய நரம்பமைவுடையவை. 3 நரம்புகள் மேற்புறம் மங்கலானவை; அடிப்புறம் தெளிவானவை. இலையின் மேற்புறம் வெளிர் பசுமை நிறமும்,அடிப்புறம் சாம்பற் பசுமையும் கொண்டு மழமழப்பானது, மென்மையானது. குறிப்பிடும் படியான மணம் எதுவும் இதற்கு இல்லை. மஞ்சரி. செடியின் அடிப்பகுதிகளில் இரண்டு கிளைகளுக்கு நடுவில் உள்ள தனிமலர்கள் 2.5 செ.மீ நீளக்காம்புடையவை. நுனிப்பகுதிகளில், கிளைத்த சைம் (cyme) வகை மஞ்சரியுண்டு. . .. .