106 குளிகைகள்
106 குளிகைகள் ப்பாறைகள் சன்மற்றும் நர்மதை ஆகிய ஆறுகளுக்கு இடையேயுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இமயமலையிலுள்ள ஹூமாயூன் மலைப்பகுதியில் கிரேட்டேசியக் காலப் பாறைகள் உள்ளன. இக்காலத்திய குமால் (giumal) மணற்பாறைகளில் குளாகோனைட் கிடைக்கிறது. இல.வைத்திலிங்கம் நூலோதி. W.L. Roberts, G.R. Rapp & J. Weber, Encyclopaedia of Minerals, Van Nostrand Reinhold Company, New York, 1974. குளிகைகள் லத்தீன் மொழியில் கேப்சியூல் என்றால் சிறிய பெட்டி என்று பொருள். சிறிய பொருள் எதையும் உள்ளே வைத்துக் கொள்ளும் அளவில் உள்ள ஒரு பெட்டி போன்றே நேரடியாக இரைப்பைக்குச்செல்ல வேண்டிய மருந்துகளை, ஜெலடின் குப்பிகளில் அடைக்கப் பயன்படும் கருவியைக் குளிகை கேப்சியூல் என்பர். என்ற சொல்லுக்கு மேலும் பல கருத்துக்கள் உள்ளன. உடற்கூறு இயல்படி, ஓர் உறுப்பைப் போர்த்து மூடுவதையும் கேப்சியூல் என்பர். ஒரு பை போன்று இருக்கும் எந்த அமைப்பையும் கேப்சியூல் எனலாம். குளிகையைப் பொதி மருந்து என்றோ, மருந்துப் பொதி என்றோ கூறலாம். சில குறிப்பிட்ட நுண்ணுயிரிகளின் பாலி சாக்கரைடு அல்லது புரதம் கொண்ட பாதுகாப்பு உறையையும் கேப்சியூல் எனலாம். அடைகாப்பானின் உள்ளேயுள்ள வெப்பக் கட்டுப்பாட்டுக் கருவியின் விரிவடையும் நீர்மத்தைக் உலோக உறையையும் கேப்சியூல் எனலாம். இத்தகைய உறை, சிறுநீரகம், மூட்டுகளை இணைக்கும் பந்தகங்கள், கண்வில்லை. சிறுநீரக வடிவ முடிச்சு, மூளையிலுள்ள லென்டிபார்ம் உட்கரு, காதுக் குருத்தெலும்பு, புராஸ்டேட், மண் ணீரல், அண்ணீரகம் போன்ற பல உறுப்புகளை கொண்ட மூடியிருப்பதாகும். உள்ளே குடல் கேப்சியூல் இரைப்பையிலுள்ள அமிலங் களை எதிர்க்கும் தன்மையுடைய பது. மிகவும் முக்கியமான இது, மூளையின் பொதிந்து இருக்கும் உட்பொதி ஆகும். இது V வடிவத்தில் லென்டிபார்ம் உட்கருவின் குவிந்த உட்பரப்பை மூடியிருக்கும். இதன் வழியாகத்தான் கோபுரப்பாதை (பெருமூளைத் தண்டுவடப் பாதை) செல்கிறது. இவ்வாறே மூளையிலுள்ள லென்டிபார்ம் உட்கருவின் வெளிப்பரப்பை மூடியுள்ளதை வெளிப்பொதி என்பர். பாலுறலின்றி இனப்பெருக்கமடையும் ஹைடாடிட் புழுவின் உட்புறப்பையில் உள்ளதை புரூட் கேப்சியூல் என்பர். பெரும்பாலும் உடலின் பல பகுதிகளில் பாதுகாப்பு உறையாகக் கேப்சியூல்கள் உள்ளன. மு.ப.கிருஷ்ணன் குளிர் இரத்த விலங்குகள் சில உயிரிகளின் உடல் வெப்பம், சூழ்நிலையின் வெப்பத்திற்கேற்ப மாறுபடுகிறது. இவ்வகை. விலங்கு கள் குளிர் இரத்த உயிரிகள் (poikilotherms) என்று கூறப்படுகின்றன. மீன், தவளை போன்ற நீர் நில வாழ்வன மற்றும் ஊர்வன ஆகியவை குளிர் இரத்த விலங்குகளாகும். குளிர் இரத்த விலங்குகளான தவளைகளும், ஊர்வனவும் மிதவெப்பத்தையும், ஈரப்பதத்தையும் விரும்புகின்றன. இவை வெப்பம், ஈரப்பதம் இவற் றின் ஏற்ற இறக்கத்தின்போது தாக்கமடைகின்றன. தவளை இனங்கள் ஈரப்பத மாற்றத்தையும்,ஊர்வன இனங்கள் உணரக்கூடியவை. வெப்ப மாற்றத்தையும் அதிசுமாக பெரும்பான்மையான குளிர் இரத்த விலங்குகள் குளிர்காலத்தில் செயலற்ற நிலையில் பாறைகளுக்கு அடியிலும் சேற்றுப் பகுதிகளிலும் மறைந்து வாழ் கின்றன. இத்தகைய உறக்கநிலையைக் குளிர்கால ஒடுக்கம் (hibernation) என்று கூறலாம். த்நிலை யில் இவற்றின் ஆக்கச் சிதை மாற்றச் செயல்கள் யாவும் மிகவும் குறைந்த நிலையில் காணப்படு கின் றன. குறைந்த ஆக்கச் சிதை மாற்றத்திற்கு ஏற்ப மிகக் குறைந்த அளவு ஆற்றல் உடலின் கொழுப்புப் பகுதிகள், கிளைக்கோஜன் ஆகியவற்றி லிருந்து எடுக்கப்படும். இவ்வாறு குளிர் இரத்த விலங்குகள், குளிர்கால ஒடுசுத்தின்போது குறைந்த ஆக்கச் சிதை மாற்றம், குறைந்த உடல் வெப்பம், குறைந்த இதயத் துடிப்பு ஆகியவற்றுடன் காணப் படுகின்றன. தேரை, தவளை போன்றவை தரையில் காணப் படும் தனித்த குழிகளில் குளிர்கால ஒடுக்கம் மேற் கொள்கின்றன. ஊர்வன இனங்கள் பெரும் எண்ணிக்கையில் பாறைக்கடியிலும், குழிகளிலும் குளிர் கால ஒடுக்க நிலையில் காணப்படுகின்றன. நீரில் வாழும் ஆமை னங்கள் குளத்தின் அடியில் உள்ள சேற்றுப் பகுதியில் புதைந்து குளிர்காலத்தைக் கழிக்கின்றன. படிப்படியாகக் குறையும் வெப்பநிலை, உணவுப் பற்றாக்குறை, பனியால் மூடப்பட்ட நிலப்பகுதியில் சலனம் செய்ய இயலாமை, உலர்ந்த உணவு, சுரப்பி கள் இடையூறு அடைதல், கொழுப்புப்படிதல், வெப்பத்தைச் சீர்செய்யும் முறை இல்லாமை ஆகிய