124 குளுவான்கள்
. 24 குளுவான்கள் யிலும் ஓர் இனம் மட்டுமே இருக்கும். அதாவது அவற்றுக்கு நிறம் கிடையாது. மின்காந்த டை வினைகளில் மின்னை ஒத்த வலுமிக்க இடை வினைகளில் நிறம் இருப்பதாகச் சொல்லலாம். மின்னைப் போலவே நிறமும் இடைவினைகளின் போது ஆக்கவோ, அழிக்கவோ படுவதில்லை. அதாவது நிறத்துக்கு மாறாமைத்தன்மை உண்டு. விளை அளவு அமை திட்ட அளவின் சமச்சீர்மை (gauge symmetry). இயற்பியல் விதிகள் உருவத்தில் மாற்றம் அடையாத வகையில் நிகழ்கிற சமச்சீர்மை மாற்றங்களின் தொடர்ச்சியான குழுவில் ஒரு பொதுவான வாகவே மாறாத்தன்மையுள்ள ஒரு கிறது. காட்டாக இயற்பியல் விதிகள், நிகழ்வு களுக்கு இடையிலான நேர இடைவெளியை மட்டுமே சார்ந்திருப்பது, ஏதோ ஒரு மேற்கோள் கடிகாரம் காட்டும் தனிப்பட்ட நேரத்தைச் சார்ந்திருப்பது ஆகிய உண்மைகளின் பின்விளைவாகவே ஆற்றல் மாறாமை என்ற நிகழ்வு அமைகிறது. நேரத்தில் செய்யப்படும் மாற்றம், இயற்பியல் சமன்பாடுகளின் ஒரு சமச்சீர்மை ஆகும். மின்னைப் போன்ற துகள் களின் உள்ளிடப் பண்புகளுடன் தொடர்புள்ள சமச் சீர்மைகள் அளவுத்திட்டச் சமச்சீர்மைகள் எனப்படு கின்றன. நிறமேற்ற மாறாமையைப் பொறுத்த வரை ஒருமைக்குழுச் SU(3) சமச்சீர்மையே மானது. அந்தச் சமச்சீர்மை சுவைக்குப் பதிலாக இப்போது நிறத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பொருத்த யாங் மில்ஸ் கொள்கை. ஒரு நிகழ்வைப் பற்றிய முழுமையான கொள்கை உருவாக்கப்படுவதற்கு முன்னரே அந்த நிகழ்வு பின்பற்றுகிற சமச்சீர்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு விடுவது அடிக்கடி நிகழ்வதாகும். எனவே சமச்சீர்மையைப் பற்றிய அறிவைப் பயன் படுத்தி அணுக்கரு விசைகளைப் பற்றிய ஒரு முழுமை யான கொள்கையை வருவிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இடைவெளி மற்றும் நேரத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியிலும் வெவ்வேறாக இருக்கக்கூடிய, தல அளவிலான சமச்சீர்மை மாற்றங்களின்போது இயற்பியல் சமன்பாடுகள் வடிவத்தில் மாறாமல் இருக்க வேண்டுமானால், சமச்சீர்மையுடன் தொடர் புள்ள இடைவினைகள் முற்றிலுமாக உறுதி செய்யப் பட்டவையாக இருக்க வேண்டும். எந்த ஒரு தொடர்ச்சியான சமச்சீர்மைக்கும் இதைச் சாதிக்கக்கூடிய வழிமுறையை 1954 ஆம் ஆண்டில் பாங், மில்ஸ் ஆகியோர் சுட்டிக்காட்டி யுள்ளனர். அணுக்கரு விசைகளுக்குப் புரோட்டான் களும் நியூட்ரான்களும் ஒன்றே. புரோட்டான்களுக் கும், நியூட்ரான்களுக்கும் உள்ள இந்தச் சமச்சீர்மை சம தற்சுழற்சி மாறாமை எனப்படும். தவ அளவிலான சம தற்கழற்சி மாறாமையைச்சுமத்திப் புரோட்டான் களிலும் நியூட்ரான்களிலும் உள்ள அணுக்கரு விசையை வருவிக்க முடியும் என்ற தத்துவத்தின் பின் விளைவுகளை யாங்கும் மில்சும் ஆராய்ந்தனர். வெளி மற்றும் நேரத்தின் அனைத்துப் புள்ளிகளிலும் புரோட்டானா, நியூட்ரானா என்பதை விருப்பம் போல் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. பொதுவாக, தல அளவிலான அளவுத்திட்ட மாறாமை இருக்க வேண்டிய தேவையிருப்பது. இடைவினை நிறையற்ற, ஒற்றைத் தற்சுழற்சியுள்ள போசான்களின் பரிமாற்றத்தின் மூலமாகவே நடை பெற வேண்டுமென்று காட்டுகிறது. மாறாமைத் தன்மையுள்ள அளவு ஒவ்வொன்றுக்கும் ஒத்த ஒரு விசைத் துகள் இனம் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக யாங்-மில்ஸ் கொள்கையை அணுக்கரு விசைகளின் ஒரு விவரிப்பாக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அணுக்கரு விசைகள் மூன்று நிறையற்ற அளவுத்திட்டப்போசான்களால் நடத்தி வைக்கப்படுவ தாக யாங் மில்ஸ் கொள்கை முன்னறிவிப்புச் செய் கிறது. ஆனால் அணுக்கரு விசைகள் 10- 13 செ.மீ அளவிலான குறுகிய தொலைவுகளில் மட்டுமே செயல்படுவனவாக இருப்பதால் விசைத் துகள்கள் நிறமிக்கவையாக இருக்க வேண்டிய தேவை ஏற்படு கிறது என யுகாவா காட்டுகிறார். குவாண்டம் நிற இயக்கவியல், குவார்க்குகளிடை டைவினையை யிலான வலுமிக்க ஒரு தல அள விலான நிறத் திட்ட அளவுச் சமச்சீர்மை குறிப்பிட வேண்டும் என்கிற கருத்தை மேற்சொன்ன முறையி லேயே ஆராயும்போது வலுமிக்க இடைவினைகளின் திட்ட அளவுக் கொள்கை கிடைக்கிறது. அதற்குக் குவாண்டம் நிற இயக்கவியல் என்று பெயர். இந்த டைவினையை எட்டு நிறையற்ற திசையன் போசான்கள் நடத்தி வைக்கின்றன. அவற்றிற்குக் குளுவான்கள் எனப் பெயரிட்டுள்ளனர். ஏனெனில் அவை குவார்க்குகளைச் சேர்த்து ஒட்டி வைக்கிற பசை போலச் செயல்படுகின்றன. குளுவான்களால் நடத்தி வைக்கப்படுகிற விசைகளின் எல்லையற்ற நெடுக்கத்திலிருந்து, தன்னிச்சையான குவார்க்கு களைப் பிரித்துத் தனிப்படுத்த முடியாத காரணம் கிடைக்கலாம். குளுவான்களுக்கும் நிறங்கள் விதிக்கப் பட்டுள்ளன. எனவே குளுவான்களுக்கு இடையிலும், குளுவான்களின் பரிமாற்றத்தின் மூலமும் வலுமிக்க இடைவினைகள் நடைபெற முடியும். இதன் காரணமாகக் குவார்க்குகளைப் போலவே குளுவான் களும் பிற துகள்களுடன் நிலையாகப் பிணைக்கப் பட்டவையாக இருக்கக்கூடும். எனவே, நிறமில்லாத துகள்கள் மட்டுமே தனிப்பட்டு இருக்க முடியும். சான்றுகள். இன்றுவரை குளுவான்கள் தனியாக இருப்பதற்கான சான்றுகள் எதுவும் கிட்டவில்லை. இப்போது தன்னிச்சையான குளுவான்கள் இருக்க முடியா என்றே குவாண்டம் நிற இயக்கவியல் கொள்கை தெரிவிக்கிறது. எனவே அதற்கென்று விதிக்கப்பட்டுள்ள பண்புகளையெல்லாம் கொண்ட