குளோர்புரோமசீன் 139
'N -C1 CH2-CH2-CH,-N(CH3)2 குளோர்புரோமசீன் 139 இம்மருந்திற்கு வாந்தியைத் தடுக்கும் இயல்பு உண்டு. வேதி ஏற்பி முடுக்கிவிடு பகுதியைப் (chemo receptor trigger zone) பாதிப்பதன் மூலம் அப்போ மார்ஃபீன் மார்ஃ பீன் எர்காட் அல்கலாய்டுகளினால் ஆனால் பாதிப்பினால் உண்டாகும் வாந்தியைத் தடுக்கிறது. உட்செவி இடைகழிப் (vestibule) உண்டாகும் வாந்தியையும், உணவுப் பாதை நோய் களால் உண்டாகும் வாந்தியையும் இம்மருந்து தடுப்ப தில்லை. பக்க இம்மருந்து மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதி உணர்விழப்புப் பண்பை (local anaesthetic action) உடையது. ஆயினும் இதன் விளைவு கள் உடன் ஏற்படுவதால் இந்த விளைவைப் பயன் படுத்திக் கொள்ள முடியவில்லை. வெளிப்புற நரம்பு மண்டலத்தில் இம்மருந்து அசெட்டைல்கோவின் எதிர்ப்பண்பும் ஆல்ஃபா ஏற்பியை எதிர்க்கும் தன்மையும் கொண்டது. வலிப்பு நோய் உள்ளவர் களுக்கு இம்மருந்து அளிக்கப்பட்டால் அந்நோய் அதிகரிக்கிறது. இம்மருந்தைச் சிரை வழியாகச் செலுத்தினால் நிலைமாற்ற இரத்தக் குறையழுத்தம் (postural hypotension) ஏற்படுகிறது. மருந்தடை மாற்றம் (pharmacokinetics). வாய் மூலம் கொடுக்கப்படும்போது இம்மருந்து உணவுப் பாதையில் சிறுகுடலில் நன்கு உள்ளுறிஞ்சப்பட்டு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவுகிறது. பிளாஸ்மா அளவை விட மூளைக்குச் செல்லும் அளவு 4-5 மடங்கு வரை உள்ளது. இம்மருந்து கல்லீரலில் வளர்சிதை மாற்றம் அடைந்து சிறுநீரில் குளுக் குரோனைடு (glucuronide) ஆகவோ சல்ஃபாக்சைடு ஆகவோ வெளியேற்றப்படுகிறது. இதன் பிளாஸ்மா அரை வாழ்வு சுமார் பத்து மணி நேரம். ஆகையால் இதை ஒரு நாளுக்கு இருமுறை உட்கொண்டாலே போதும். . பக்க விளைவுகளும், நச்சுத் தன்மையும். குளோர்பு ரோமைசீன் நச்சுத் தன்மை குறைவாக உள்ள மருந் தாகும். இதன் பக்க விளைவுகளில் முக்கியமானது அசைவு, நிலை இவற்றைப் பாதிக்கும் துணை உயர் நரம்பு மண்டல நோய்க் குறிகள் (extra pyramidal symptoms) ஆகும். அசைவுக் குறைவு. போது 65751 கால் நடுக்கம் உடல் ஓய்வாக இருக்கும் போன்றவற்றைக் குறைக்கப் பார்க்கின்சோனியன் படுத்தப்படும் அசெட்டைல்கோலின் களைப் பயன்படுத்தலாம். நோயில் பயன் எதிர் மருந்து கட்டுப்படா நடை (akathesia). நடக்கத் தொடங்கினால் அதை நிறுத்த துன்புறுவார். வாய், உதடு, நாக்கு. முதலியன இடைவெளி விட்டு விட்டு போன்ற இவ்விளைவு உறக்கத்தின்போது விடுகிறது. நோயாளி இயலாமல் கை. கால் அசைதல் மறைந்து மேற்கூறிய விளைவுகள் அனைத்துமே பார்க்கின் சோனியன் நோய்க் குறிகளை ஒத்திருந்தாலும், அந்நோயில் பயன்படும் டோப்பா என்ற மருந்து இவ்விளைவுகளைச் சற்றும் குணப்படுத்தாது. ஏனெனில் குளோர்புரோமசீன், டோப்பமைன் ஏற்பி களை எதிர்த்து அவை செயல்படா வண்ணம் செய்து விடுகிறது. டோப்பா, டோப்பமைன் ஏற்பி களுடன் இணைந்து செயல்பட வேண்டியது. குளோர்புரோ மசீன் பித்தநீர்த் தேக்க மஞ்சட் காமாலையை உண்டாக்கக்கூடும். நமைச்சலுடன் கூடிய தோல் தடிப்பையும் உண்டாக்கக்கூடும். பிற மருந்துகளுடன் இடைவினைகள் (drug inter- actions). குளோர்புரோமசீன் மைய நரம்பு மண்ட வத்தை ஒடுக்கும் மற்ற மருந்துகளின் இயக்கத்தை அதிசுரிக்கிறது. இம்மருந்துகளில் குறிப்பிடத்தக்கவை மார்பீன் உணர்விழக்கச் செய்யும் ஈதர் போன்றவை. பயன்கள். கடும். மன நோய்கள் (psychosis), மூளைக் கோளாறு (schizophrenia). மிகு சுறுசுறுப்பு, கட்டுப்படா எண்ணங்கள், பேச்சு மனவெழுச்சி நோய் (mania), வாந்தியைக் கட்டுப்படுத்த இரத்தத்