உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 குளோரின்‌

148 குளோரின் பற்றக் கூடிய நீர்மத்தைப் பெறலாம். எத்திலீனை ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் அலுமினியம் குளோரைடு வினையூக்கியைப் பயன்படுத்தி வினைப் படுத்துவதால். 90% வரை எத்தில் குளோரைடு விளைகிறது. இம்முறையே எத்தில் குளோரைடைத் தயாரிக்கம் பயன்படும் முக்கிய முறையானாலும் எத்தில் ஆல்கஹாலைப் பயன்படுத்தியும் பெறலாம். இதனால் 95-98% வினைப்பொருள் உண்டாகிறது. AICI3. C₂H + HCI C2H3CI தனைப் CH3CH2O + HC1 → C2H3CI + H20 பெரும் பகுதியான எத்தில் குளோரைடு டெடரா எத்தில் லெட் தயாரிப்பில் பயன்படுகிறது. மேலும் இது எத்தில் செல்லுலோஸ், குளிர்வூட்டிகள், மயக்க மருந்துப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. குளோரால் ( CCI,CHC) நிறமற்ற, எண்ணெய் போன்ற நீர்மம். இது இரண்டாம் உலகப்போருக்குப் பின் பூச்சி மருந்து தயாரிப்பில் பெரிதும் பயன் பட்டு வருகிறது. ஏறக்குறைய, குளோரால் உ உற்பத்தி யில் 50% அளவு எத்தில் ஆல்கஹாலை ஆக்சிஜ னேற்றம் செய்வதால் பெறப்படுகிறது. C2HgOH + CI2 → C,H5OCI + HCI C₂H₂OCI + C2H5OH → CH3CH(OH)OC₂H5 - HCI ->>> CH CH(OH}OC2H, + 3CI2 → CCI?CH(OH)OC,H5 + 3HCI H304 CCI CH(OH)OC₂Hs- CCL CHO + C2H5OH இதனால் 83% விளை பொருள் உண்டாகிறது. அசெட்டால்டிஹைடைக் குளோரினேற்றம் செய்தும் குளோராலைத் தயாரிக்கலாம். 2CH3CHO + 3C12 → கலவை (CH₂CICHO + Cl₂CHCHO) + 3HCI மோனோ மற்றும் டைகுளோரோ அசெட்டால்டி ஹைடு கலவையோடு ஆன்டிமோனில் குளோரை டையும் மிகையளவு குளோரினையும் 80°C வெப்ப நிலையில் வினைபுரியுமாறு செய்தால் 70% குளோ ரால் உண்டாகிறது. CH?CICHO + CCHCHO + 3C, SIC3 இவ்வினைக்குப் பல வழிமுறைகள் முன்மொழியப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று எத்தில் ஹைப்போ குளோரைட் உண்டாவதும், அது பின்னர் அசெட் டால்டிஹைடாகச் சிதைவடைந்து பல்லுறுப்பாக்கம் அடைந்து பாரால்டிஹைடு உண்டாகி, அது குளோரி னேற்றம் பெறுவதும் ஆகும். இவற்றைத் தவிர பயன்மிக்க பிற நிறைவுற்ற கரிமச் சேர்மங்கள் உள்ளன. எத்திலீன் ளோரைடு (LC) நிறமற்ற நீர்மம் (இது டைகுளோரைடின் ஒரு மாற்றியம்). எத்திலீன் பென்ட்டா குளோரோ எத்தேன் ( CHCl, ), ஒரு நிறமற்ற நீர்மம்; வேதி இடைநிலைப்பொருள். ஹெக்சாகுளோரோ எத்தேன் (CCl ) வெண்ணிறப்படிகம். இடைநிலைப் பொருளாகவும், பூச்சி கொல்லியாகவும் பயன் படுகிறது. புரோப்பிலீன் குளோரைடு ( CoHC) நிற மற்ற நீர்மம்; லேதி இடைநிலைப்பொருள்; கரைப் பான் மற்றும் பூச்சிக்கொல்லி. 1, 2, 3-டிரைகுளோரோ புரோப்பேன் ( C,H,C ) நிறமற்ற நீர்மக் கரைப்பான். -பியூட்டைல் குளோரைடு ( CHC) நிறமற்ற நீர்மக் கரைப்பான் மற்றும் அல்க்கைலேற்றக் காரணி. 1, 4 டைகுளோரோபியூட்டேன் ( C.H;Cl2 ) நிறமற்ற நீர்மம்; நைலான் தயாரிப்பில் பயன்படுகிறது. அமைல் குளோரைடுகள் ( C,HC] ) என்பவை வேதி இடை நிலைப் பொருள்கள். டைகுளோரோபென்ட்டேன்கள் { C3H1|C12 } நிறமற்ற நீர்மங்கள்; தூய்மையான நிலை யில் ரப்பர், ரெசின், வண்ணப்பூச்சுகள் ஆகியவற்றைக் கரைக்க உதவும் கரைப்பான்கள்; குளோரினேற்றப் பட்ட பாரஃபீன்கள், திண்மங்கள் அல்லது நீர்மங்கள் நெகிழி ஆக்கிகள் (plasticizers), உயவு எண்ணெய், தீப்பிடிக்காத பொருள் செய்வதில் பயன்படு கின்றன. நிறைவுறா அலிஃபாட்டிக் சேர்மங்கள். பெர் குளோரோ எத்திலீன் { ChC=CCL) தீப்பற்றாத. நிலைத்த, தீங்குப் பெரிதுமில்லாத நீர்மம்; டெட்ரா ளோரோ ஈத்தேனைப் பெண்ட்டா குளோரோ எத் தேனாகக் குளோரினேற்றம் செய்யும்போது கிடைக் கிறது. டிரைகுளோரோ எத்தேன் சுண்ணாம்பைக் கொண்டு பின்வரும் முறையில் தயாரிக்கப்படுகிறது. 2CH012CHCI2 + Ca(OH)2 → 2CIHC=CC!, + CaCI2 + 2H,O டிரைகுளோரோ எத்திலீன் நிறமற்ற, எளிதில் தீப் பற்றாத நிலைத்த நீர்மம்: டிரைகுளோரோ எத்தி லீனிலிருந்து பெர்குளோரோ எத்திலீனைப் பின்வரும் முறையால் தயாரிக்கலாம். CIRC=CCI₂ C3CCHCI2 2C3CCHC₁₂ 1 Ca(OH)2 → 2CI3CCHO + 3HCL Cl,C=CCI2 + CaCl2 + 2H,0