150 குளோரேட்
150 குளோரேட் குறைந்துவிட்டது. மேலும் டி.டி.ட்டி தயாரிப்பிலும் இதனைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ஆனால் டைஃபீனைல் ஆக்சைடு மற்றும் அதன் பெறுதிகள் தயாரிப்பில் சிறிதளவு பயன்படுகிறது. டைகுளோரோபென்சீன் ( C.H.Cl, ) இரு மாற்றி யங்களாக அமைந்துள்ளது. இதில் ஆர்த்தோ வடிவம் நிறமற்ற, எளிதில் ஆவியாகிற நீர்மம்: பாரா மாற் றியம் வெண்ணிற, ஆவியாகிற படிகம், மோனோ குளோரோபென்சீனைக் குளோரினேற்றம் தால் இது பெறப்படுகிறது. CeHsC! + Cl2 → C8HaCl2 + HCT செய்வ மோனோ மற்றும் டைகுளோரோபென்சீன் கலவை யுடன் சிறிதளவு காரத்தைச் சேர்த்துத் தெளிய வைத்துப் பின்னர்க்காய்ச்சி வடிக்கப்படுகிறது. இதில் ஆர்த்தோ மாற்றியத்தைவிடப் பாரா மாற்றியம் மூன்று மடங்கு மிகுதியாக உள்ளது. 1966 ஆம் ஆண்டில் பாரா டைகுளோரோ பென்சீன் தயாரிப் பில் பெரும்பகுதி பூச்சித் தடுப்பிகள் (repellants தயாரிக்கவும், மணம்போக்கியாகவும் (dcodourants) பயன்பட்டது. ஏனைய பயன்மிக்க அரோமாட்டிக் குளோரின் சேர்மங்கள்: பென்சைல் குளோரைடு { C.H,CH,CI } பென்சால் குளோரைடு ( CH;CHCI2} ) பென்சோ டிரைகுளோரைடு ( C.H<CC) ஆகியன. இம்மூன்று நிறமற்ற நீர்மங்களும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் மூலப்பொருள்களாகவும். (பென்சட்ரின், டெமரால்), மணப் பொருள்களாகவும், கொல்லிகள் மற்றும் பூச்சித் தடுப்பிகளாகவும் பயன் படுகின்றன. மேலும் இவை சாயம், உயவுப் பொருள் lubricant) ஆகியவற்றின் தயாரிப்பில் இடைநிலைப் பொருள்களாகவும் பயன்படுகின்றன. பூச்சி குளோரினேற்றப்பட்ட பைஃபீனைல் சேர்மங்கள் மின்காப்பு, உயவுப்பொருள், வண்ணப்பூச்சு நெகிழி, மெருகுப்பூச்சுத் தயாரிப்பிலும் பயன்படு கின்றன. மோனோகுளோரோ பென்சீனைக் காரம் உடனிருக்க நீராற்பகுக்கும்போது ஃபீனால் விளை கிறது. இதனைக் குளோரினேற்றத்திற்குட்படுத் தினால் பென்ட்டா குளோரோஃபீனால் ( C.ClÇOH() உண்டாகிறது. C6H5OH + 5CI2 → CCI,OH + 5HCI இது மரங்களைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. டைகுளோரோஃபீனால் ( C1,C,H,OF } 2, 4-டை குளோரோ ஃபீனாக்சி அசெட்டிக் அமிலம் (2,4-D) தயாரிப்பில் பயன்படுகிறது. இது ஒரு களைக்கொல்லி யாகும். பிற சேர்மங்கள். ஃபாஸ்ஜீன் மிகு நச்சுத்தன்மை வாய்ந்த வளிமம். தூய ஃபாஸ்ஜீன் நிறமற்ற நீர்மம். இதன் கொதிநிலை 7.48° C; உலர் கார்பன் மோ னோக்சைடையும், குளோரினையும் கிளர்வூட்டப் பட்ட கார்பன் மேல் செலுத்தினால் ஃபாஸ்ஜீன் உண்டாகிறது. CO + CIØ → COCI2 முக்கியமாக டொலுவீன் டைஐசோ சயனேட் தயாரிக்கப் பயன்படுகிறது. மெத்தைகள், தனித்தன்மையான ரப்பர் ஆகியன தயாரிப்பதற்கு டைஐசோ சயனேட் யூரேத்தேன் பயன்படுகிறது. மோனோகுளோரோ அசெட்டிக் அமிலம் ( CH2 CICOOH ) வெண்ணிறப் படிகமாகும். இது அசெட்டிக் அமிலத்தைக் குளோரினேற்றம் செய்வதால் உண்டா கிறது. இது சாயம், குளோரின், மருந்துப்பொருள். அழகு பொருள், களை மற்றும் பூச்சி கொல்லிகள் தயாரிப்பில் பயன்படுகிறது. அசெட்டிக் அமிலத்தை மேலும் குளோரினேற்றம் செய்வதால் டைகுளோரோ அசெட்டிக் அமிலம் கிடைக்கிறது. இதனை மேலும் குளோரினேற்றம் செய்தால் டிரைகுளோரோ அசெட்டிக் அமிலம் ( CC COOH ) உண்டாகிறது; தன் சோடியம் உப்பு களைக்கொல்லியாகப் பயன் படுகிறது. குளோரமின்கள் போன்ற ஏனைய குளோரின் சேர்மங்கள் பாக்ட்டீரியா கொல்லி களாகவும் நுண்ணுயிர்க் கொல்லிகளாகவும் நச்சு எ திர்ப்பிகளாகவும் பயன்படுகின்றன. குளோரின் ஏற்றிய நூல்கள் காண்க: நூல்கள் குளோரேட் த.தெய்வீகன் இது C10,- என்ற வாய்பாடு கொண்ட ஒரு எதிர்மின் அயனி குளோரேட் (chlorate) என்பது குளோரிக் அமிலத்தின் (HCIO,) பெறுதியாகும். குளோரிக் அமிலம் நீரியக் கரைசலில் மட்டுமே நிலைத்தன்மை பெற்றது. குளோரேட்டுகள் ஹைப்போகுளோரைட்டு களையும் குளோரைட்டுகளையும்விட நிலைத்தன்மை மிக்கனவாகவும், புரோமேட்டுகள், அயோடேட்டுகள். பெர் குளோரேட்டுகள் ஆகியவற்றைவிட நிலைத் தன்மை குறைந்தனவாகவும் ஆக்சிஜனேற்றப் பண்பு கூடுதலாகவும் அமையப்பெற்றவை. குளோரேட்டுகள் வெப்பத்தால் சிதைவுறும் வினை ஆக்சிஜனை ஆய்வ கத்தில் தயாரிக்கும் வழிமுறையில் பயன்படுத்தப் வருகின்றன.