குறு இழைகள் 163
குறுகியும் உள்ளவை குறு இழைகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இயக்கம். குறு இழைகள் ஓர் ஒழுங்கு முறையில் இவை இயங்குகின்றன. அனைத்தும் இயங்கும் பொழுது பார்ப்பதற்கு அலைகள் போன்ற தோற் றத்தை ஏற்படுத்துகின்றன. து ஒரு வயலில் உள்ள கதிர்கள் காற்றினால் அசைவதைப் போன்ற தோற்றத்திற்கு ஒப்பாகும். இம்முறை ஒத்தியங்கு (metachronal) இயக்கம் எனப்படுகிறது. ஒரு வரிசையில் உள்ள குறு இழைகள் ஒத்தியங்கு முறையில் இயங்கும்பொழுது அவை விலங்கு நகரு கின்ற திசைக்கு இணையாக இயங்குகின்றன. ஒரு குறு இழை இயங்குவதற்கு முன்போ பின்போ இன் னொரு குறு இழை இயங்குகிறது. இவ்வாறு அலை அலையாகக்குறு இழைச் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. குறு இழை இயங்கும்பொழுது இரண்டு நிலைகள் உள்ளன. இவை உந்தும்நிலை (active phase) என்றும், மீளும் நிலை (recovery phase) என்றும் கூறப்படும், உந்தும் நிலையில் அனைத்துக் குறு இழைகளும் இயங்குகின்றன. மீளும் நிலையில் அவை இயங்கா மையால் அந்த நேரத்தில் விலங்கு நகர்வதில்லை. ஒத்தியங்கு இயக்கத்தின்பொழுது ஒவ்வொரு குறு ழையும் தூண்டப்படுகிறது. இதில் இரண்டு நிலைகள் உள்ளன. முதலில் தூண்டல் உணர்ச்சி ஒரு இழையின் உட்பகுதியில் தொடங்குகிறது. இவ்வுணர்ச்சி பின்னர் மற்ற குறு இழைகளுக்குக் கடத்தப்படுகிறது. இச்செயல் நரம்பு மண்டலத் தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதன்று. ஏனெனில் குறு குறு இழைகள் 163 எபிதீலியத்தகடு உடலை விட்டுத் தனியாகப் பிரித் தெடுக்கப்பட்டாலும் இயக்கம் தொடர்ந்து நடை பெறுகிறது. ஆனால் குறு இழைகளுக்கிடையே சைட்டோபிளாசத் தொடர்பு இருப்பது மிகவும் இன்றியமையாதது ஏனெனில் ஓ இழை வரிசை யின் இயக்கம் ஒருமித்ததாக இல்லாமல் யின்றி நடைபெறுகிறது. முறை குறு இழை ஒருசெல் உயிரிகளில் (ciliophora ) சில இழை அமைப்புகள் காணப்படுகின்றன. இவை குறு கைனட்டோடெஸ்மேட்டா எனப்படும். இவை புறப்பிளாச ளாசத்தில் அமைந்துள்ளன இவை குறு இழை சுளின் அடித்துகள்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இவ்வுயிரிகளின் குறு இழைகள் வரிசை வரிசையாக அமைந்துள்ளன. இத்தொகுதி யில் குறு இழைகள். அவற்றின் அடித்துகள்கள், கைனட்டோடெஸ்மேட்டா ஆகியவை அடங்கும். பலசெல் உயிரிகளில் இயக்கி என்ற அமைப்பு உள்ளது. இது உணர்ச்சியைக் கட த்தி குறு இழை களின் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் அமைப்பாகச் செயல்படுகின்றது. நரம்பு இயக்க மையமான (neuro- motor centre) இது பலசெல் உயிரிகளின் நரம்பு பண்டலத்துக்கு இணையான அமைப்பாகக் கருதப்படு கிறது. இதற்கான சான்று யூப்ளோடிஸ் என்ற விலங் சில் டெய்லர் செய்த ஆய்வு மூலம் கிடைத்துள்ளது. யூப்ளோடிஸ் ஒரு குறு இழை உயிரியாகும். இதன் கீழ்ப்பகுதியில் குறுஇழைக்கொத்துகள் cirri)உள்ளன. வை பல குறு இழைகள் ஒன்றாக இணைவதால் தோன்றுகின்றன. வற்றின் இயக்கங்கள் அனைத்தும் 1 மீளும் நிலை 6 உந்து நிலை 10 11 12 A. படம் 1. மெட்டாகுரோனல் இயக்கத்தைக் காட்டும் படம் குறு இழைகள் 1-ம் 12-ம் உந்துநிலை முடிந்தவுடன் 2-7 மீளும் நிலையின் பல்வேறு சமயங்களில் 8- 11 உந்தும்நிலையின் பல்வேறு சமயங்களில் B. மெட்டாகுரோனல் இயக்கத்தின் போது குறு இழைகளின் மொத்தத் தோற்றம். அ.ச.9-I1 அ