உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 குறுக்க வினைகள்‌

களைச் சோடியத்தின் பரப்பின்மீது ஊன்ற வைத்து இணைக்க வேண்டும். வளைய அணு எண்ணிக்கை 9 10 12 13 14 15 16 17 18 20 விளைச்சல்(%) 9 45 76 67 79 77 84 85 96 96 ஒன்றோடொன்று பிணைந்த இரு வளையங் களைக் கொண்ட மூலக்கூறான கட்டேனேனை அசைவாயின் குறுக்கத்தின் மூலம் பெறலாம். ஆல்டால் குறுக்க வினை. அசெட்டால்டிஹைடை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடுடன் கலந்தால் ஆல்டால் (ஆல்டிஹைடு தொகுதியும், ஆல்கஹால் தொகுதியும் கொண்ட மூலக்கூறு) உண்டாகிறது. மீ 2CH, CHO NaOH CH,CH(OH)CH,CHO (50%) பொது கார்போளைல் தொகுதிக்கு அடுத்த கார்பனின் து ஒரு ஹைட்ரஜன் அணுவையாவது பெற்றுள்ள ஆல்டிஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் வான வினை ஆல்டால் குறுக்க வினையாகும். இதன் வினை வழிமுறை பின்வருமாறு அமைந்துள்ளது. HỌ HẾCH, CHO—H_O+CH,CHO 0- (1) CHỊCH CHỊCHO–CH,CHCH,CHO OH 11₂O (II) CH,CHCH,CHO+OH- வினையின் விரைவு ĐI GI GỌT LÊN GÂY a @4 = k x [CH,CHO] × OH^] என்று ஆய்வு வழியாக அறியப்பட்டுள்ளதால், கார்பன் எதிர் அயனித் தோற்றமான முதல் கட்டமே வினைவேகத் தீர்மானக் கட்டம் (rate determining step) ஆகும்; ஆனால் இதே குறுக்கவினை இரு அசெட்டோன் மூலக்கூறுகளுக்கு கையில் இடையே நிகழ் வினையின் விரைவு = k x [CH,COCH, ]" X [OH -] என்றிருப்பதால் இரண்டாம் கட்டம் மிக மெல்லவே நிகழ்கிறது. இக்கட்டத்தில் கார்பன் எதிர் அயனி மற்றோர் அசெட்டோன் மூலக்கூறுடன் வினைபுரிகிறது. MeCOMe+OH" = H,O+CH,COMe 0° Me,H,COMe = Me,CCH,COMe H₂O OH = Me,CCH,COMe+ OH- குறுக்க வினைகள் 171 அசெட்டால்டிஹைடுக்கும் அசெட்டோனுக்கும் விரைவை அறுதியிடும் கட்டங்கள் வேறுபடுவதற்குக் காரணம் அசெட்டால்டிஹைடைவிட அசெட்டோன் மீது அணுக்கருக்கவர் பொருளின் தாக்கம் குறைவாக வுள்ளது. ஹைட்ரஜனுடன் ஒப்பிடும்போது, அசெட் டோனிலுள்ள மெத்தில் தொகுதியின் எலெக்ட் ரானை விலக்கும் தன்மை அசெட்டோனுடன் கார்பன் அயனி இணைந்து உருவாக்கும் இடைநிலை அயனியின் நிலைத்தன்மையைக் குறைக்கிறது. ஆல் டால் குறுக்கவினையின் ஒரு பொது இயல்பு; C--C ணைப்பு உருவாகும் கட்டத்தின் விரைவைக் கார் போனைல் தொகுதியுடனுள்ள எலெக்ட்ரான் ஈர்ப்புத் தொகுதிகள் உயர்த்துகின்றன. எலெக்ட்ரான் விலக் குத் தொகுதிகள் குறைக்கின்றன. இவ்வினை முழுதும் மீள்தன்மை பெற்றது. எனவே வினை விளைபொருளை உயர் விளைச்சலில் பெற வேண்டுமெனில் தனி உத்திகள் கையாளப்பட வேண்டும். காட்டாக, பேரியம் ஹைட்ராக்சைடை ஒரு சாக்ஸ்லெட் சாறு இறக்கியின் (soxlet extractor} குடுவைக்கு மேல்பகுதியில் பொருத்தி, குடுவையில் அசெட்டோனைச் சூடுபடுத்த வேண்டும். அசெட் டோனின் ஆவி பேரியம் ஹைட்ராக்சைடுடன் (வினை யூக்கி) தொடர்புறும்போது குறுக்கம் நிகழ்கிறது. வினை விளைபொருளான டை அசெட்டோன் ஆல்க ஹால் வடிகுழாய் ஒன்றின் வழியாகக் கொதி குடுவைக் குள் செலுத்தப்படுகிறது. அசெட்டோனைவிட டை அசொட்டோன் ஆல்கஹால் 100C உயர் கொதி நிலை கொண்ட நீர்மமாதலால், அசெட்டோன் மட்டுமே ஆவியாகி, வினை விளைபொருளை மீண்டும் மீண்டும் தருகிறது. இவ்வாறு விளைச்சலை 70% வரை உயர்த்தலாம். ஆலடால்கள் தனித்தனி மூலக்கூறுகளாகத் தோன்றுவதில்லை. அசெட்டால்டால் ஒரு வளைய உருக்கொண்ட அரை-அசெட்டால் மூலக்கூறாகவே தோன்றுகிறது. சூடுபடுத்துகையில் இம்முப்படி (tri- mer) ஆல்டாலாகச் சிதைவுறுகிறது. செறிவுமிக்க எரி காரக் கரைசலை வினைப்பொருளாகப் பயன்படுத் தினால் அசெட்டால்டால் நீரகற்றமுற்று குரோட் டானால்டிஹைடு எனும் சேர்மத்தைத் தருகிறது. இவ்வால்டிஹைடு மேலும் குறுக்கவினையுற்று நீள் தொடர் நிறைவுறா ஆல்டிஹைடாகிறது. - மீண்டும் மீண்டும் விரைவாக இதே வழிமுறை பின்பற்றப்பட்டு, இறுதியில் ஒரு பெரிய பல்லுறுப்பு மூலக்கூறு (ரெசின்) உண்டாகிறது. வினையுறும் ஆல் டிஹைடு மூலக்கூறுகள் & ஹைட்ரஜனைக் கொண்ட இரு வெவ்வேறு மூலக்கூறுகளாக இருப்பின், நான்கு விளை விளைபொருள்கள் விளையலாம். ஒவ்வோர் ஆல்டிஹைடும் கார்போனைல் சேர்மமாகவும், கார் பன் எதிர் அயனியாகவும் செயல்புரியச் சமவாய்ப்புக் கொண்டவை. ஒரு மூலக்கூறு மட்டுமே - ஹைட்ர ஐனைக் கொண்டதாக இருந்தால், வினை