உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 குன்றிமணி

240 குன்றிமணி கதிர் இழைகள் (spindle fibres) சென்ட்ரோமியர் துருவங்களைத் நோக்கி இழுக்கின்றன. பின்னடைவு நிலை (anphase). இது இறுதியாக நடைபெறும் பிரிவாகும். ஒத்திசைவான குரோமோ சோம்கள் (குரோமேட்டிடுகளுடன்) எதிர்த் துருவங் களுக்கு இழுக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் கதிர் இழை மைக்ரோட்பியூல்களின் சுருக்கம் தான். குரோமோசோம்கள் இத்துருவங்களுக்கு இழுக்கப்படுவதால் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் குரோமேட்டிடுகள் பிரிவதில்லை. இரு துரு வங்களுக்குச் செல்லும் குரோமோசோம்கள் தாய் அல்லது தந்தையுடைய குரோமோசோம்களாகும். இவற்றின் அமைவு மாறுபட்டதாகும். கடைநிலை (telophase). கடைநிலை குன்றல் பிரிவின் இறுதி நிலையாகத் துருவங்களை வந்த டைந்த குரோமோசோம்களைச் சுற்றி உறை உருவா கிறது. மேலும் உட்கரு (நியூக்ளியஸ்) இரண்டு சேய் நியூக்ளியோலஸ்கள் தோன்றுகின்றன. இதனை அடுத்து சைட்டோபிளாச பிரிவு நடைபெறுவதால் இரண்டு ஒற்றைப்படைச் (இன) செல்கள் உருவா கின்றன. முடிவு நிலை அல்லது கடைநிலை (telophase). இவ்வாறு உருவாகியவை இடைக்காலநிலையை அடை கின்றன. இந்நிலை குன்றல் பகுப்பு நிலையுடன் ஒத்துக் காணப்படும். குன்றல் பிரிவு நடைபெறுவதற்கு மாறாக இரு குன்றல் பிரிதலுக்கு இடைப்பட்ட இடைக்கால நிலையின்பொழுது குரோமோசோம் களின் இரட்டிப்பு நடைபெறுவதில்லை. ஒத்தமுறைக் குன்றல் பிரிவு (humotypic). இப் பிரிவு நிலை குன்றல் பிரிவின் முக்கியமான இரண்டாம் நிலையாகும். மாற்றுமுறைக் குன்றல் நிலைக்கு அடுத்த நிலையாகும். பிரிவு ஒத்தமுறைக் குன்றல் பிரிவு நிலை மைட்டா சிஸ் (mitosis) நிலையை ஒத்துக் காணப்படும். கடை நிலையில் (anaphase) உருவான 2 செல்கள் மேலும் பிரிந்து நான்கு செல்களாகின்றன. இவை நான்கும் பண்புகளில் ஒத்துக் காணப்படும். ஒத்தமுறைக் குன்றல் பிரிவு பின்வரும் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.இம்மூன்று நிலையையும் முறையே முதல்,இடை, கடை நிலைகளின் (pro. meta, anaphases) ரண்டாம் பகுதி எனவும் கூறலாம். முதல்நிலை - II (prophase - II). இது குறுகிய கால அளவு உடையது. இதில் குரோமேடிட்டின் இரட்டிப்பு இல்லை. நியூக்ளியஸ், நியூக்ளியோலஸ் இவற்றின் உறைகள் மறைந்து கதிர் இழைகள் தோன்றுகின்றன. நடுநிலை-II. குரோமோசோம்கள் இந்நிலையில் செல்லின் மைய யத்தில் அமைய, அவற்றின் சென்ட்ரி யோமியர்களுடன் கதிர் கின்றன. இழைகள் இன பின்னடைநிலை - II. கதிர் இழைகள் குரோ மேட்டிடுகளைத் துருவம் நோக்கி இழுக்கின்றன. இதனால் குரோமேட்டிடுகள் பிரிவுற்று எதிர் எதிர்த் துருவங்களை அடைகின்றன. முடிவு நிலை - II. துருவங்களை அடைந்த குரோ மேடிட்டுகள் சேய் உட்கருவாக மாறுகின்றன. எஞ்சிய குரோமேடிட்டுகள் குரோமோசோம்களாக மாறுகின்றன. நியூக்ளியசும், நியூக்ளியோலசும் உருவாகின்றன. பின்பு சைட்டோபிளாசப் பிரிதல் ஏற்பட்டு 4 சேய்ச் செல்கள் உருவாகின்றன. இந்த நான்கில் இரு சேய்ச் செல்களின் பெற்றோர்கள் குரோமோசோம்களின் உள்ளன. இவை பெற்றோர் செல்களிலிருந்தும் வேறு பட்டுக் காணப்படுகின்றன. மறுசேர்க்கையுற்றவையாக குன்றல் பிரிவின் சிறப்புப் பண்புகள். இப் பிரிவு பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் குரோ மோசோம்கள் எண்ணிக்கையைச் சீராக வைப்பதற்கு இன்றியமையாதது. இம் முறை உயிரினங்களில் குறிப் பிட்ட சீரான குரோமோசோம் எண்ணிக்கை தொடர வழி செய்கிறது. மேலும், பிரிதலின் பொழுது நடைபெறும் கயாஸ்மாக்கள் தோன்றல், குறுக்கே கலத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மரபுப் பொருள்களின் பரிமாற்றம், கலத்தல் ஆகியவற்றிற்கு வழிவகுத்துப் பெற்றோர்களின் பண்புகள் மட்டுமல்லாமல் புதிய பண்புகளின் தோற்றத்திற்கும் காரணமாகின்றன. அ.சிவானந்தம் குன்றி மணி ஜெக்குரிட்டி இண்டியன் லிக்கோரைஸ் (Indian liquorice) என்பன இதற்குள்ள ஆங்கிலப் பெயர்கள் அப்ரஸ் பிரிகேட்டோரியஸ் Precatorius (Abrus என்பது இதன் தாவரப் பெயராகும். செடி. புதர்போல் வளரும் அழகிய சுற்றுக் கொடியான இதை இந்தியா முழுதும் சமவெளிகளில் காணலாம். ஏனைய வெப்ப நாடுகளில் வளரும் இச் செடி வேலிகளில் படரும். இதன் இலைகள் இரட் டைக் கூட்டிலை (paripinnately compound) அமைப் பைக் கொண்டிருக்கும். பூக்கள் அவரைப்பூ வடிவில் இருக்கும். இதன் விதைகள் சிவப்பு நிறத்தில் கண் போன்ற கறுப்புப் புள்ளியுடன் அழகாக இருக்கும். சில சமயங்களில் விதைகள் வெள்ளையாகக் கறுப்புப் புள்ளியுடனோ இல்லாமலோ இருக்கலாம். இக்கொடி யின் வேரிலும் இலையிலும் இனிப்பான கிளைசிரிசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அதிமதுரத்தின் இனிப்புத் தன்மையைக் கொண்டிருப்பதால் இதற்கு