262 கூடொத்த சேர்மங்கள்
262 கூடொத்த சேர்மங்கள் பின்னல் கூடை பாவு இவற்றில் இரண்டுமோ ஒன்றோ வளையும் தன்மை கொண்டி ருக்கும். ஊடையை ஒரு பாவு இழையின் கீழ் விட்டுப் பிறகு இரு பாவு இழைகளின் மேலாகக் கொணர வேண்டும். அடுத்த தடையை முதல் இரு பாவு இழைகளில் ஒன்றின் கீழும், இரண்டாம் இரு பாவு இழைகளில் ஒன்றின் கீழும். இவ்வாறே அடுத்துவரும் பாவுகளின் மேலும் போகும்போது செய்வதே இரட்டைப்பின்னல் ஆகும். ஊடை, ஒரு பாவை முழுதும் சுற்றி வருமானால் அதற்குப் பொதிப் பின்னல் என்று பெயர். இரு பாவு இழைகள் ஒரு பாவு இழையின் மேலும் கீழும் மாறி மாறிச் செல்வது முறுக்குப் பின்னல் ஆகும். மேல் தையல். இதில் கடிகாரமுள் சுற்றிவரும் முறையில் இடம்புரியாக முடைதல் நடைபெறும். தையலைத் தடித்த ஊசி கொண்டு செய்வர். தையல், முந்திய சுற்றின் மேல் விளிம்பிலிருந்து வெளியே வந்து, புதுச்சுற்றின் மேல் முன்புறம் சென்று, பிறகு கீழே இறங்கும். எட்டுப் போன்ற தையல். இதில் இரு சுற்றுகள் உடனேயே கட்டப்படும். தையல், முந்திய சுற்றின் அடியே முன்பக்கமாக வந்து முன்பக்கமாகவே மேலே சென்று, பிறகு அதற்கும் புதிய சுற்றிற்குமிடையே பின்பக்கமாகச் செல்லும். இம் முறையில் சற்று முன்னும் பின்னும் ஒரே தோற்றங்கொண்டிருக்கும். தமிழகத்தில் கூடை முடைதல். தமிழகத்தில் சென்னை, தென்னார்க்காடு, மதுரை, திருச்சிராப் பள்ளி மாவட்டங்களில் கூடைமுடையும் தொழில் நடைபெறுகிறது. ஓலைகளைக் கொண்டு கலைப் பொருள்கள் செய்யும் தொழில் சென்னை, இராமேஸ் வரம், தென்காசி ஆகிய ஊர்களில் நடைபெறுகிறது. கூடொத்த சேர்மங்கள் வகை வை படிக் உள்ளமைப்புகளிலோ, பெரிய மூலக் கூறுகளிலோ அமைந்துள்ள குழிகளில் வேறொரு மூலக்கூறுகள் அடைபடுவதால் தோன்றும் கூட்டுச்சேர்மங்கள் அல்லது உள்ளடங்கு சேர்மங்கள் (inclusion compounds) ஆகும். இவற்றின் உட்கூறுகள் திட்டமான விகிதங்களில் உள்ளன; ஆனால், இவை முழு எண் விகிதங்களாக இருக்க வேண்டிய கட்டாய மில்லை. உட்கூறுகள் ஒன்றோடொன்று முதனிலைப் பிணைப்பு வகைகளால் ணைக்கப்படவில்லை. மாறாக, ஒருவகை மூலக்கூறினாலான பொந்தில் மற் றொரு வகைச் சிறிய மூலக்கூறு வெளியேற இயலாத வாறு இறுகப்பிடிபட்டிருக்கும். எனவே, இவ்வகைச் சேர்மங்களின் நிலைத்தன்மை, படிக இடை வெளி களின் வடிவங்களையும், சூழ ப்படும். சிறிய மூலக் கூறின் வடிவத்தையும் பொறுத்தது. கூடொத்த சேர்மங்கள் ஒரு தனிவகைப் பிணைப்பை எடுத்துக்காட்டுவதால் அவை அறிமுறை வேதியியலில் முதன்மை பெறுகின்றன. நடைமுறை யில் கூடொத்த சேர்மங்கள் ஹைட்ரோகார்பன் பிரிப் புக்கும், மருந்துகளையும், பூச்சி கொல்லிகளையும் நிலையுறச் செய்வதற்கும், நொதிக் கருத்துப் படிகங் கள் உருவாக்குவதற்கும் பயன்படுகின்றன. உள்ளடங்கு சேர்மங்களுள் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. அவை: அணிக்கோவை உள்ளடங்கு (lattice inclusion) சேர்மங்கள், மூலக்கூறு உள்ளடங்கு சேர் மங்கள், பேரளவு மூலக்கூறு (macromolecules) சேர் மங்கள் ஆகியன. அணிக்கோவை உள்ளடங்கு சேர்மங்களுள் நன்கு அறியப்பட்டவை: யூர் ரியா மற்றும் தயோயூரியா உள்ளடங்கு சேர்மங்கள். ஹைட்ரோகார்பன்கள், கார் பாக்சிலிக் அமிலங்கள் அல்லது நீண்ட சங்கிலி அமைப் புள்ள ஆல்கஹால்கள் ஆகியவற்றை நீரிய யூரியாக் கரைசலில் கலந்து இவ்வகைச் சேர்மங்கள் தயாரிக்கப் படுகின்றன. யூரியா படிகங்களின் அமைப்பில் உள்ள 0.4-0.5 nm விட்டம் கொண்ட நீண்ட வாய்க்கால் களில் ஹைட்ரோகார்பன்கள்-பெரும்பாலும் கிளைச் சங்கிலிகளற்றவை பொருந்தி அமைகின்றன. யூரியா- ஹைட்ரோகார்பன் மோல் விகிதம் ஹைட்ரோகார்பன் மூலக்கூறின் சங்கிலி நீளத்தை மட்டுமே பொறுத்தது. ஹைட்ரோகார்பன் சங்கிலியின் நீளம் கூடுதலாக இருப்பின் ஹைட்ரோகார்பன் மூலக்கூறை முழுமை யாக மூடுவதற்கு நிறைந்த அளவில் யூரியா தேவைப் படும். தயோயூரியாவின் படிக உரு. யூரியாவைப் போன்றதேயாகும். தயோயூரியா படிகத்தில் வாய்க் கால்களின் குறுக்களவு சற்றுக் கூடுதலாகவுள்ளது எனவே, கிளைச்சங்கிலிகளுடன் அமைந்த ஹைட்ரோ கார்பன் மூலக்கூறுகள் இவ்வாய்க்கால்களில் நன்கு பொருந்துகின்றன. நேர்சங்கிவி ஹைட்ரோகார்பன் களின் குறுக்களவு வாய்க்கால் குறுக்களலைவிடக் குறைவாக இருப்பதால் அவை வாய்க்கால்களில் தங்கு வதில்லை. அணுக்கோவை உள்ளடங்கு சேர்மங் களுக்கு மற்றோர் எடுத்துக்காட்டு கோலியிக் அமிலங் கள் ஆகும். இவை கொழுப்பு வகைப் பொருளைச் செரிக்கும் இயக்கத்தில் முக்கிய பங்கேற்கின்றன. ஹைட்ரோகுய்னோன் - ஃபீனால் சேர்க்கை, ஃபீனால் கார்பாக்சிலிக் அமிலங்களின் வளைய நீரிலிகள் திறந்த படிக உள்ளமைப்பு வாய்ந்தவை. இப்பள்ளங்களில் வளிமம் மற்றும் கரைப்பான் மூலக்கூறுகள் அடை படக்கூடும். குளோரின் ஹைட்ரேட் (C1.6H,O) போன் ந சேர்மங்கள் ஏறக்குறைய இருநூறு ஆண்டு களுக்கு முன்பே அறியப்பட்டவை. ஸ்டார்ச்சைப் பகுதி நிலையிறக்கம் செய்து பெறப்பட்ட வளைய டெக்ஸ்ட்ரின் அல்லது வளைய