கூந்தற்பனை 265
சல்லடைகள் (molecular sieves ) எனப்படும் இவ் வமைப்புகள் சியோலைட் (zeolite) எனும் நீரின் கடினத்தன்மையை நீக்க உதவும் சிலிகேட் கனிமங் களைப் போன்றவை. வைச் நொதிகள் பற்றுப் பொருள்களைத் தம் மூலக் கூறு அமைப்புகளின் பிளவு அல்லது பள்ளங்களில் (பூட்டு-சாவி அமைப்பைப் போன்று) நிறுத்தி கின்றன. இந்நிலையில் வினை நிகழ்ந்து, வினை விளைபொருள்கள் இவ்விருக்கையிலிருந்து வெளியேறு கின்றன. நொதிகளைப் போலல்லாமல் சிறு மூலக் கூறுகளைக் கொண்ட கூடொத்த சேர்மங்கள் சிலவும் சில வினைகளில் (நீராற்பகுப்பு) இவ்வியங்கு முறை யில் வினையூக்கம் புரிகின்றன. கூடொத்த சில சேர்மங்களின் அமைப்புகள் அட்டவணை 1 - இல் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கூடொத்த சேர்மத்தின் வடிவம் படம் 2 இல் காட்டப்பட்டுள்ளது. காட்டாக, வளிம நீரேறி (gas hydrate) மூலக்கூறுகளின் பெரும வரம்பு வாய்பாடு 6X. 46 H,O என்றிருக்கும்; இங்கு X =Ar, Kr, Xe CICH, இதன் அடிப்படை அமைப்பு 20 நீர் மூலக் கூறுகளாலான இருபது முகி (20-decahedron). . ஒவ்வொரு நீர் மூலக்கூறும் மூன்று நீர் மூலக்கூறு களுடன் ஹைட்ரஜன் பிணைப்புற்றுள்ளன மொத்த ஆக்சிஜன் அணுக்களில் சரிபாதி அவற்றின் நான்காம் அணைவு இருக்கையில் ஒரு ஹைட்ரஜன் அணுவைக் கொண்டுள்ளன. இவ்வணு அடுத்த பன்முகியுடன் ஹைட்ரஜன் பிணைப்புறவல்லது. மறுபாதி ஆக்சிஜன் அணுக்கள் ஒவ்வொன்றும் தம் நான்காம் அணைவு ருக்கையில் ஒரு பிணைவுறா எலெக்ட்ரான் இரட்டையைக் கொண்டுள்ளன. இவற்றின் வாயி லாக அடுத்த பன்முகிகளுடன் ஹைட்ரஜன் பிணைப்பு தோன்றுவது எளிதாகிறது. இவ்வாறு தோன்றும் அமைப்புகளினுர்டே பெரிய வளைகள் தோன்று கின் றன. இவற்றுள் சிறிய வளிம மூலக்கூறுகளான X பொருந்தும். காலி இடங்கள் யாவுமே நிரப்பப் பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாதலால், 6X.46 H,O என்ற வாய்பாடு நடைமுறையில் எட்டப் படுவதில்லை. ஹெக்சா மெத்திலீன் டெட்ரமின் எனும் மூலக் கூறு (CH) N, ஆறு நீர் மூலக்கூறுகளாலான கூண் டில் அடைபட்டுள்ளது. இங்கு அடைபட்ட மூலக் கூறின் மூன்று நைட்ரஜன் அணுக்கள் நீர் மூலக்கூறு களுடன் ஹைட்ரஜன் பிணைப்புற்றுள்ளன. உயர் வளிமங்களைத் (noble gases) திண்ம நிலை யில் கையாள்வதற்கு அவற்றைக் கூடொத்த சேர்ம வடிவிலான நீரேறிகளாக மாற்றுவது நல்ல உத்தி யாகும். குறிப்பாக, கதிர்வீச்சுத் தன்மை கொண்ட தனிமங்களுக்கு இது சிறந்த வழி முறையாகும். சில மூலக்கூறின் அமைப்புகள் உயர் வளிமக் கூந்தற்பனை 265 உயர் கலவையைப் பிரிப்பதற்கும் பயன்படுகின்றன. வளிமங்கள் உயிரியல் அமைப்புகளில் எவ்வாறு பணி புரிகின்றன என்பதை அறிவதற்குக் கூடொத்த சேர்மங்களைப்பற்றிய அறிவு உதவுகிறது. சான்றாக செனான், உணர்வகற்றத்தைத் (anaesthesia) தோற்று விக்கவல்லது. இச்செயலைப் புரிவதற்கு இவ்வளிமம் உடனுறை வேதிப் போருள்களுடன் வினை புரிந்தாக வேண்டும். இவ்வியங்கு முறையில் கூடொத்த அமைப்பு உருவாவதாக அறியப்பட்டுள்ளது. உயர் வளிம அணுக்களுக்குப் பதிலாக C, SO,, CH CI ஆகியனவும் குறிப்பிட்ட முனைவுடன் இடம் பெறக் கூடும். ஹைட்ரோகுய்னோனும், முப்பதிலீடு செய்யப் பட்ட வளைய பாஸ்ஃபசீன்களும் கூடு அமைக்கத் தக்க மூலக்கூறுகளாகும். ஹைட்ரோகுய்னோனால் மூடப்படும் மூலக்கூறு கள்: Ar. Kr, Xe, N2, H,S, CO, CH,OH. ட்ரை பாஸ்ஃபசீனினால் மூடப்படும் மூலக்கூறுகள்: பென்சீன் மற்றும் சைலீன்கள். கூடொத்த சேர்மங்கள் உரு வாகும்போது வெளியிடப்படும். ஆற்றல் மிகக் குறைவேயாதலால், இச்சேர்மங்கள் உருவாதல் எதிர் பார்க்கப்படுவதில்லை. எனினும், இயல்பாற்றல் மாற்றம் நேர்குறியீடு கொண்டிருத்தலால் இச்சேர்மங் களின் உருவாகும் வாய்ப்புக் கூடுகிறது. இயல் பாற்றல் உயர்வதற்குக் காரணமாக விளங்குவது குழிகள் தாறுமாறாக நிரம்புவதேயாகும். ஆர்கான் வளிமக் கொதிநிலையில் ஆர்கான் ஹைட்ரோகுய் னோன் கூடொத்த சேர்மத்தின் சிதைவு அழுத்தம் (dissociation pressure) 2x 10-8 வளி மண்டலமே யாகும். மாறாக, அறை வெப்பநிலையில் (298K), இக்கூடொத்த சேர்மத்தின் படிகங்கள். தாம் பிணைத்து வைத்துள்ள ஆர்கான் வளிமத்தில் 10%-ஐ (ஒரு வாரம் காற்றுப்பட வைத்திருந்தால்) இழக் கும். இதிலிருந்து கூடொத்த சேர்மம் உருவாதல் இயல்பாற்றல் உயர்வினால்தான் என்பது தெளி வாகும். -மே.ரா.பாலசுப்பிரமணியன் நூலோதி. James E. Huheey, Inorganic Chemistry, Third Edition, Harper and Row, New York. 1983. கூந்தற்பனை இதற்குக் கொண்டைப்பனை, மலைப்பனை, திப்பிலிப் பனை, ஜவ்வரிசிமரம் என்ற பெயர்களும் உண்டு. இதனை, சுகர் பாம். ஒயின் பாம், டாடி பாம், ஃபிஷ்டெயில் பாம், கிட்டுல் பாம், பாஸ்டர்ட் சேகோ, இந்திய ஜவ்வரிசி மரம் எனப் பல பெயர்களில் கூறுவர். இதன் தாவரப் பெயர் கேரியோட்டா ரென்ஸ் (Cariyata urens) என்பதாகும். இது பனை,