உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 கூனிறால்‌

-302 கூனிறால் நீளத்தைக் கொண்டுள்ளது. மைசிஸ் 2.3 மி.மீ. நீளத்தையும், பின் இளவுயிரிகள் 2.5-6.5 மி.மீ. நீளத்தையும் கொண்டுள்ளன. எசடஸ் இனங்களில் ஏனைய இறால் இனங்களைப் போலல்லாமல் ஒரே ஒரு மைசிஸ் பருவம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அண்மைக்கடல் பகுதிகளில், கூனிறால் கள் சில மாதங்களில் மிகுதியாகப் பிடிபடுவதால் இவற்றின் வளம் முக்கியத்துவம் வாய்ந்தது. கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் இவை பிடிக்கப்படு கின்றன. பம்பாய்க் கடற்கரைப் பகுதிகளில் கூனிறால் வளம் இரண்டாம் முக்கிய இறால் வளமாகக் கருதப் படுவது குறிப்பிடத்தக்கது. ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளில் நடப்பட்டுள்ள பை வலைகளின் மூல மாகவும். தோணி மற்றும் கடற்கரையிலிருந்து யக்கப்படுகின்ற சுருக்குப்பை வலைகள் மூலமாவும் இவை பெரிதும் பிடிக்கப்படுகின்றன. பீடிக்கப்பட்ட கூனிறால்களில் பெரும்பகுதி உப்பிட்டுப் பதப்படுத்தப் படும். கடற்கரையோர மக்களுக்குக் கூனிறால் முக்கிய புரதச் சத்துள்ள உணவாகப் பயன்படு கிறது. கூனிறால்களைப் பக்குவப்படுத்தி இறால் வளர்ப்புப் பண்ணைகளில் இறால் குஞ்சுகளுக்கு உணவாகவும் கொடுக்கலாம். இரா. சந்தானம்