உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 கேலியம்‌

358 கேலியம் படுத்தி அகற்றப்படுகின்றன. பின்பு கேலியத்தை லித்தியம் குளோரைடு - ஹைட்ரோகுளோரிக் அமிலக் கலவைக் கரைசலில் ஈர்த்துப் பிரிக்கலாம். லுமினி யம் மற்றும் அலுமினியச் சேர்மங்களில் நுண்ணிய அளவில் இடம் பெறும் கேலியத்தை ஹைட்ரோ குளோரிக் அமிலக் கரைசலிலிருந்து குளோரோ காலிக் அமிலமாகப் (HGaCl) பியூட்டைல் அசெட் டேட் எனும் நீர்மத்தைக் கரைப்பானாகப் பயன் படுத்திப் பிரிக்கலாம். வினையுறு வளிமத்துடனும் காற்றுடனும் கலக் கப்பட்ட ஹைட்ரஜன் சுடரில் கேலியத்தை அணு உறிஞ்சல் நிறநிரல் (atomic absorption spectroscopy) மூலம் அளவறியலாம். மற்றத் தனிமங்களின் குறுக் கீடு நிகழாமல் தடுப்பதற்கு ஆயிரத்தில் ஒரு பங்கு எனும் அளவுக்கு மக்னீசியம், ஆர்செனிக் எனும் சேர்மத்தைச் சேர்த்தல் வேண்டும். ஏனைய சூடான எரிகாரங்களையோ, கனிம வகை அமிலங்களையோ பயன்படுத்திக் கேலியத்தைக் கரைக்கலாம். எனினும், உலோகத்தின் தூய்மை கூடக்கூட அமிலம் அல்லது காரத்தின் பாதிப்புக் குறைகிறது. கேலியம் உலோகத்திலுள்ள மாசு நிலை உலோகங்களை நைட்ரிக் அமிலத்திலும், ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலும் மாற்றி மாற்றி வினையுறுத்தி, இடையிடையே நீரால் கழுவி அகற்ற லாம். நைட்ரிக் அமிலம், உலோகத்தைச் சிறுசிறு துளிகளாகச் சிதறச் செய்யும். ஹைட்ரோகுளோரிக் அமிலம் இத்துளிகளை ஒன்றோடொன்று சேர்க்கும். உலோகக் கலவைகள். மிகக் குறைந்த உருகு நிலை கொண்ட நல்லுருகு கலவைகளையும் (eutectic mixture) உலோக இடைச் சேர்மங்களையும் (inter- metallic compounds) பெரும் எண்ணிக்கையில் உரு வாக்கும் உலோகங்களுள் கேலியமும் ஒன்றாகும். கேலியத்தின் நல்லுருகு கலவைகளும் அவற்றின் உருகுநிலைகளும் இயைபு Ga (I-எடை%) Al Ga (5 -எடை%) Zn Ga (8-எடை%1 Sn உருகுநிலை C 26.3 25 20 Ga (12-எடை%) - Sn (6-எடை-%) - Zn 17 Ga (24- எடை%) -In 15.7 Ga (21.5எடை,)-In (16-எடை%) - Sn 10,7 அலுமினியங்களில் கேலியம் சிறிதளவு இடம் இருக்கும். ம்மாசு பெரும் விளைவை பெற்றே ஏற்படுத்துவதில்லையாயினும், 30°C இல் சற்றே கூடுதலான அளவில் கேலியம், அலுமினியப் படிகங் களுக்கு இடையே புகுந்தால் அலுமினியத்தில் பயன் பெரிதும் பாதிக்கப்படுகிறது. 600-1000°C வெப்பநிலை வரம்பில் கேலியத் துள் கேளா ஒலி செலுத்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் வெப்பநிலை மாற்றத்திற்கு எதிர் விகிதத்தில் இருக்கும். கேளா ஒலியின் வெப்பநிலைக் குணகம் கேலியத்தில் ஆன்ட்டிமனி சேர்ப்பதால் மிகவும் குறைகிறது. 50-எடை% ஆன்ட்டிமனி சேர்க்கப்பட்ட நிலையில், 750-900° C வெப்பநிலை வரம்பில் இக்குணகத்தின் மதிப்பு சுழி ஆகும். 4.2 K வெப்பநிலையில் இரும்பினுள் இடம் பெறும் கேலியம் அணுக்களின் உட்புலம் தற்சுழற்சி எதிரொலி ணைப்பு (spin echo technique) எனும் உத்தி வாயி லாக 110 கிலோகாஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது. கேலியத்தின் உருகுநிலைக்கு மேற்பட்ட வெப்ப நிலைகளில் மீதுாய்மையான அலுமினியத்தின் மீது மின் வழிப்படிவாசுக் கேலியம் ஏற்றப்பட்டால், அலும் கேலியம் மினியப் படிகங்களுக்கிடையே ருவும் மக்னீசியத்துடன் சேர்க்கப்படும்போது கேலியம் மக்னீசியத்தின் கடினத் தன்மையைக் கூடுதலாக்கு கிறது. மேலும், ஓர் அரிமானத் தடுப்பு ஆக்சைடு பூச்சுப் படலத்தையும் கேலியம் மக்னீசியத்தின் மீது தோற்றுவிக்கிறது. 5. அணு% வரை சேலியம் மக்னீசி யத்தின் இழுவலு, நெகிழ் வலு (yield strength), நீள்மை (ductility) ஆகியவற்றைக் கூடுதலாக்கும். ஊடு பாதரசத்தின் மீது படியும் நீர்மக்காரீய வில்லை. திண்மநிலை வில்லையைவிட விரைவில் கரைகிறது. கேலியத்தில் பாதரசத்தின் கரைதிறன் 35°C இல் 6.5 எடை % ஆகவும், 100° C இல் 8.6 எடை% ஆகவும் உள்ளது. பாதரசத்தில் கேலியத்தின் சுரை திறன் 1.3 எடை% ஆக 35° C இலும், 1.4 எடை % ஆக 100°C இலும் இருக்கும். 28 கரைசலாக அணு நிக்கவில் திண்மக் அதாவது 31.6 எடை%> வரை கேலியத்தைக் கரைக்கலாம். கேலியத்தின் ஈருலோகச் சேர்மங் களுள் முதன்மையானவை; NiGa, Nb,Ga, PiGag Na, Ga TigGa, UGag. V, GaZr, Ga. சேர்மங்கள். கேலியம்,அலுமினியத்தைப்போன்றே கார்போனேட்டை உண்டாக்குவதில்லை. ஆனால் படிகாரங்களைத் தருகிறது. நீரேற்றம் கொண்ட உப்புகளில் (Ga{H,O),} *+ என்னும் அணைவு அயனி உள்ளது. நீரியக் கரைசலில் கேலியம் உப்புகள் அமிலத் தன்மை வாய்ந்தவை. இதன் விளைவாக, வீரி யம் குறைந்த அமிலங்களின் உப்புகளான சல்ஃபைடு. கார்போனேட், சயனைடு ஆகியலை நீரியக் கரைச லில் நீராற்பகுக்கப்பட்டுச் சிதைவுறுகின்றன. கேலியம் கரிம உலோகச்சேர்மங்களை உருவாக்கவல்லது. R.Ga டிரை அல்க்கைல் கேலியம்எனும் சேர்மத்தைப் பெறுவ