கேஸ்ட்ரோட்டிரைக்கா 385
கேஸ்ட்ரோட்டிரைக்கா 385 நீள் ரோட்டிரைக்காவில் சிறுநீர்ப்பை இல்லை. மடல்களாகவுள்ள தலை நரம்புத்திரளும், வாட்ட ரட்டை நரம்புவடமும், நரம்பிழைகளும் கொண்ட ட நரம்புமண்டலம் காணப்படுகிறது. சுடல் வாழ் கேஸ்ட்ரோட்டிரைக்காக்கள் இருபால் உயிரிக ளாகும். இவற்றில் ஆண் இனச்செல் உறுப்பு முன்ன தாக முதிர்ச்சியடையும். நன்னீர் வாழ் கேஸ்ட்ரோட் டிரைக்காவில்கன்னி இனப்பெருக்க முறை நடைபெறு கிறது. பெண் உயிரிகள் மட்டுமே காணப்படுகின்றன. இவ்வுயிரிகளில் ஆண் இனப்பெருக்க மண்டலம் வளர்ச்சியின் தொடக்ககாலத்தில் காணப்பட்டட போ தும் பின்னர் படிப்படியாகச் சிதைவடைந்து விட்ட து. சினையகம் (ovary) ஒற்றையாகவோ இரட்டை யாகவோ காணப்படும். ஒரு முறையில் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் நீள் உருளை வடிவமுடையவை. கடினமான ஓட்டினால் மூடப்பட் டுள்ளன. சிலவற்றில் முட்டையின் அடிப்பரப்பில் ஒட்டிக்கொள்ளத்தக்க கொக்கிகள் காணப்படு கின்றன. கொக்கிகள் முட்டையின் ஒருபக்கத்தில் மட்டுமோ, இருபக்கத்திலுமோ காணப்படும். சினையணு நாளம் தனித்தோ மலப்புழையோடு இணைந்தோ வெளியே திறந்திருக்கிறது. ஒற்றை அல்லது இரட்டை விந்தகங்களின் விந்துநாளத்துளை டலின் வெவ்வேறு இடங்களில் வெளித் திறக்கும். பியாசாம்ப் என்னும் அறிஞரின் குறிப்புகளி லிருந்து கேஸ்ட்ரோட்டிரைக்காவின் கருவளர்ச்சிபற்றி ஓரளவு தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. கரு முட்டைகள் பெண் உயிரியால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் இடத்தில் இடப்படுகின்றன. மூன்று நாளில் முட்டைகள் பொரிந்து இளரிகள் (juvenile) வெளி வருகின்றன. அடுத்த மூன்று நாளில் முதிர்ச்சியடை கின்றன. கருவுணவு முட்டையினுள் ஒற்றை அல்லது இரட்டைத் திரளாக அமைந்துள்ளது. இளரிநிலை இல்லாத நேரடி வளர்ச்சி முறையுள்ள கேஸ்ட்ரோட் டிரைக்காக்களின் பிளவிப்பெருகல் முழுமையாக நீர்ணயிக்கப்பட்ட திருகுமுறையால் நடைபெறு கிறது. நிறையுயிரியைப் போன்ற தோற்றமுடைய சிறிய உயிரிகள் உண்டாகின்றன. உடலின் பின் முனையில் பிளவுபட்ட பையாக ஓர் எக்ஸ் உறுப்பு அமைந்துள்ளது. வகைப் இவ்வுயிரிகள் மேக்ரோடேசியாய்டியா, கீட்டோ னோட்டாய்டியா என இருவரிசைகளாக படுத்தப்பட்டுள்ளன. தாவரங்கள் குறைவாகவுள்ள மணற்பாங்கான கடலோரப்பகுதிகளில் மேக்ரோ டேசியாக்கள் காணப்படுகின்றன. வை குற்றிழை தவழ் இயக்க (ciliary gliding) முறையால் இடப் பெயர்ச்சி செய்கின்றன. இவ்வரிசையைச் சேர்ந்த உயிரிகளில் பெரும் எண்ணிக்கையில் ஒட்டுக்குழாய் கள் வரிசையாக அமைந்துள்ளன. உடல் அடிப்பகுதி, துகள் திரள்களால் (granular masses) கழிவுநீக்கம் நடத்திடும் இவ்வரிசை உயிரிகளில் நெஃப்ரீடியங்கள் இல்லை. அண்மைக்காலம் வரை ஐரோப்பியக் கடலோரப்பகுதியில் மட்டுமே காணப்படுவதாகச் சொல்லப்பட்டு வந்த இவ்வகைக் கேஸ்ட்ரோட் டிரைக்காக்களில் 13 சிறப்பினங்கள் ந்தியாவில் வால்டேர் கடற்கரைப் பகுதியில் காணப்படுவதைக் கண்டறிந்து கூறியுள்ளனர். கீட்டோனோடாய்டியாக்கள் ஆல்காக்களையும். ஒருசெல் உயிரிகளையும் உண்டு வாழ்கின்றன. வை தாவரங்கள் மிகுதியாகவுள்ள நன்னீர் நிலை களில் காணப்படுகின்றன. இவற்றின் வால் பகுதியில் ஒன்று அல்லது ஈர் இரட்டை ஒட்டுக் குழாய்கள் மட்டுமே இருக்கும். இவ்வரிசை உயிரிகளில் நெஃப் ரீடியங்கள் காணப்படுகின்றன. இவ்வரிசையில் கன்னிப்பிறப்பு முறையால் இனப்பெருக்கம் செய்யும் பெண் உயிரிகள் மட்டுமே உள்ளன. கேஸ்ட்ரோட்டிரைக்காக்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கின் றன. இவை உடலமைப்பால் உருளைப் புழுக்களை ஒத்திருந்தபோதும் சக்கர நுண்விலங்கு களோடு கொண்டுள்ள சில அடிப்படை ஒற்றுமை களைக் கருத்தில் கொண்டு இவை ஒரு பொதுவான டர்பல்லேரியன் மூதாதை வழித் தோன்றியவை என்பது தெளிவாகிறது. இரா.சந்தானம் நூலோதி. L. H Hyman, The Invertebrata, Vol.Ill, McGraw - Hill Book Company New York, 1951. அ. க. 9 -25