உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 கொக்கிப் புழு

4/2 கொக்கிப்புழு எண் பொருள் 1 உடலின் அளவு உடலின் பின்முனை 3 பிறப்பு உறுப்புத் துளை ஆண் சிறியவை (சுமார் 8.மி.மீ. அளவு நீளம்) சீனா, பசிபிக் தீவுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென் மாநிலங்கள் போன்றவற்றில் பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இனத்தோடு தொடர்புடைய நெக்கேட்டார் அமெரிக்கானஸ் என்ற இனம் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பரவ லாகக் காணப்படுகிறது. அமெரிக்கப் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அங்கைலோஸ்டோமா டுயோடி னேல் இனம் மிகப் பரவலாக உள்ளது. கொக்கிப்புழுவில் முழு வளர்ச்சியடைந்தவை மனிதனின் சிறு குடலை இருப்பிடமாகக் கொண்டுள் ளன. குறிப்பாக நடுச்சிறுகுடலில் இவை வாழ்கின் றன. முன்சிறுகுடலில் அரிதாக வாழ்கின்றன. பின் பொதுவாகக் சிறுகுடலில் இவை காணப்படுவ தில்லை. சிறுகுடலின் உட்சுவரின் தசையைத் தன் வாயினால் உள்ளிழுத்துக் கவ்விப் பிடித்து ஓம்புயிரி யோடு பிரிக்க முடியாத ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறது. ஓம்புயிரியின் இரத்தம், நிண நீர், சிதைந்த திசுக்கள் இலேட்டுமப்படலத் துணுக்கு கள் முதலியவற்றை உட்கொள்கிறது. இதன் தொண் டைப்பகுதியின் உறிஞ்சும் தன்மையால் வாயில் சேகரிக்கப்படும் உணவு உள்ளிழுக்கப்படுகிறது. தொண்டைப்பகுதியில் காணப்படும் சுரப்பிகளால் சுரக்கப்படும் நீர் இரத்தம் உறைதலைத் தடை செய்யும் தன்மையுடையது. ஆகையால் ஓம்புபிரியின் இரத் தத்தை உறையவிடாமல் தொடர்ந்து சேகரிக்க முடியும். மேன்மேலும் புண்ணிலிருந்து கசிந்து வரவும் வாய்ப்புள்ளது. இரத்தம் தன் தேவைக்குச் சிறிது இரத்தமே போதுமான தாக இருந்தாலும் இது மிதமிஞ்சிய இரத்தத்தை உட்கொள்கிறது. உடலில் செரித்தது போக எஞ்சும் இரத்தம் புழுவின் மலத்துளை வழியாகச் சொட்டுச் னச்சேர்க்கைக் குழி காரணமாக உடலின் பின் முனை குடை போல் விரிந் துள்ளது. இது பின்புறமாக மலக்குடலுடன் ணைகிறது. பெண் பெரியவை (சுமார் 12 மி.மீ.நீளம்) உடலின் பின்முனை குறுகிச் சூம்பியுள்ளது. இது உடலின் கடை 1/3 பங்கும் இடை 1/3 பங்கும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. சொட்டாக வெளியேறிக் கொண்டே இருக்கும். 24 மணி நேரத்தில் ஒரு கொக்கிப் புடி 0.8 மி.லி.இரத் தத்தை இவ்வாறு வீணடிக்கிறது என்று கணக் கிட்டிருக்கிறார்கள். இதனால் மனிதருக்கு இரத்தச் சோகை நோய் ஏற்படுகிறது. சிறுகுடலில் ஆக்சிஜன் மிகவும் அரிதாகக் காணப்படுவதால், தான் உட் கொள்ளும் இரத்தச் சிவப்பணுக்களில் காணப்படும் ஆக்சிஜனையே இப்புழு தன் வளர்சிதை மாற்றத் திற்குப் பயன்படுத்துகிறது. ஆண்புழு, பெண்புழு என்ற புறவேறுபாடுகள் இப்புழுக்களில் இல்லை. இனப்பெருக்க எண்ணிக் கையில் மிக விரைவில் பல்கிட் பெருகுவதில் வை முதன்மையானவை நான்கு முறை தோலுரித்து வளர்ச்சியடையும் புழுப்பருவம் கொண்ட எளிய எல்லா வாழ்க்கையைக் கொண்டது. வளர்ச்சிப் பருவத்திலும் இப்புழு தன்னிச்சையாகவே வாழ்கிறது. முழு வளர்ச்சியடைந்த ஆண் கொக்கிப்புழு சுமார் 9 மி.மீ நீளமும். பெண்புழு சுமார் 12 மி.மீ நீளமும் இருக்கும் இதன் உடல் சாம்பல் நிறம் கலந்த வெள்ளை நிறத்தைக் கொண்ட உருளையைப் போல் நீண்டிருக்கும். மனிதனின் உடலிலிருந்து வெளி யில் எடுக்கப்பட்ட சிறிது நேரத்திற்குச் சிவப்புக்கலந்த கரும்பழுப்பு நிறமுடையதாக இருக்கும். அச்சமயத் தில் அதன் குடலில் இரத்தம் நிரம்பியிருப்பதே இந் நிறத்திற்குக் காரணமாகும். வாய்ப்பகுதி புழுவின் முன்புறத்தின் கீழ்ப்பகுதியில் காணப்படுகிறது. இது பெரியதாகவும், எளிதில் கண்டறியும் வகையிலும் உள்ளது. இப்பகுதியில் கொக்கி போன்ற அமைப் புடைய நான்கு பற்கள் சீழ்மட்டத்திலும், முக்கோண வடிவக் குமிழ் போன்ற தகடுகளை நுனியில் காண்ட இரு பற்கள் மேல்மட்டத்திலும் உள்ளன. ஆண்புழுவின் வால்பகுதி அகன்றிருக்கும். இவ் வகன்ற பகுதியில் புணர்ச்சிக்குழிவு அமைந்திருக்கிறது.