உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொசு 419

கொசு 419 பெறுதியாகக் கொள்ளலாம். கொக்கெய்னின் அமைப்பை டிரோப்பினோனிலிருந்து தொகுக்கலாம். த.தெய்வீகன் கொசு கணுக்காலிகளில் டிப்டீரா வகையைச் சார்ந்த இவற்றில் 2,700 சிறப்பினங்கள் ள்ளன. அனாபிலஸ், கியூலெக்ஸ், ஈட்ஸ் இவற்றுள் முக்கிய மானவை. பெரும்பாலும் ஈரப்பதமான இடங்களி லேயே இவை வாழ்கின்றன. எனினும், காடுகளிலும் வறள் பகுதிகளிலும் காணப்படலாம். ஆண் கொசுக்கள் பூக்களின் தேன், மரப்படை யின் சாறு போன்றவற்றை உறிஞ்சிக் குடிக்கும். பெண் கொசுக்களோ முதுகெலும்புகளின் இரத்தத் தையே குடிக்கும். பெரும்பாலும் இரவில் இயங்கி னாலும், பகலிலும் இவற்றின் நடமாட்டம் குறைவ தில்லை. மனிதருக்குத் தொல்லை தரும் உயிரினங் களில் கொசுக்கள் மிகவும் முக்கியமானவை. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு, யானைக்கால் நோய் போன்றவை கொசுக்களால் பரப்பப்படும் நோய்களாகும். ஓய்வில்லாமல் பறப்பது கொசுக் களுக்கு உரிய பண்பாகும். தொடர்ந்து 2,3 மணி நேரம் பறந்து 20-30 கி.மீட்டர் தொலைவைக் கடந்து விடும். நொடிக்கு 250-600 முறை இறக்கை களை அடித்துக் கொள்ளும். இருட்டில் கொசுக் களுக்குக் கண் தெரியாது. உணர் கொம்புகளாலும், கால்களாலும் புலனுறுப்புப் பண்பு நிலை நாட்டப் படுகிறது. . அமைப்பு. சில கொசுக்கள் 3-6 மி.மீட்டரும் வேறுசில 10 மி.மீட்டரும் நீளம் உடையவை. பழுப் புக் கலந்த கறுப்பு நிறமே உடலின் நிறமாகும். அனா பிலஸ் கொசுவின் உடம்பில் கரும்புள்ளிகள் உள்ளன. ஈட்ஸ் கறுப்பாக, வெள்ளைக்கோடுகனை உடையது. இரத்தத்தையும், தேனையும் உறிஞ்சும் வண்ணம் வாயுறுப்புகள் ஊசிபோல மாற்றம் பெற்றுள்ளன. ஆனால் இம்மாற்றம், ஆண் கொசுவில் இல்லை. துருவு தாடைகள் இல்லை. இரத்தத்தை உறிஞ்சும் போது. உறையாமலிருக்க இரத்த உறைவு எதிர்ப்புப் பொருள் ஒன்று இரத்தத்தினுள் செலுத்தப்பட்டபின் றிஞ்சப்படுகிறது. கொசுவினால் கடிவாயின் விடப்பட்ட உமிழ்நீரே நமைச்சலை ஏற்படுத்துகிறது. கொசுக்களில் ஆணும் பெண்ணும் வேறுபாடுடையவை. முட்டைகள் 200-400 எனக் கூட்டம் கூட்டமாக மேல் அ. க. 9-27 அ கியூலெக்ஸ்