440 கொடைக்கானல் வான் ஆய்வு நிலையம்
440 கொடைக்கானல் வான் ஆய்வுநிலையம் கொடுவா மீன் லேட்டஸ் கேல்கேரிஃபர் 3 கிலோ எடையைப் பெறும். இரண்டு ஆண்டுகள் முதிர்ச்சி பெற்ற மீன்கள், இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. இன முதிர்ச்சி பெற்ற மீன்கள் ஆண்டுதோறும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் குஞ்சுகள் இயற்கையில் பெருமளவு கிடைக்காமையால், இவற்றைச் சேகரித்து வளர்ப் பதே முறையாகும். கொடைக்கானல் வான் ஆய்வுநிலையம் ராமையன் வானியலில், கோள், துணைக்கோள், விண்மீன், வால் விண்மீன், சூரியன், புவியைச் சுற்றியுள்ள அண்ட வெளியிலுள்ள பொருள்கள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்தல் போன்ற செயல்களுக்காக, இந்திய வான் -இயற்பியல் நிறுவனம் (Indian Institute of Astrophysics) பெங்களூரில் இயங்கி வருகிறது. மேலும் இந்நிறுவனம் திறம்படச் செயல்படுவதற் காகப் பெங்களூர், கொடைக்கானல், காவலூர், கௌரி பீடனூர் என்னும் இடங்களில் நான்கு தனித் தனிப் பிரிவுகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொடைக்கானலில், பகல் நேரங்களில் சூரியனைப் பற்றிய ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக் கிறது. சூரியன் புவிக்கு மிக மிக அருகில் உள்ள விண் மீனாகும். புவிக்கு மிக அருகில் உள்ள பிராக்சிமா சென்டாரி (proxima centauri) என்ற விண்மீனி லிருந்து வரும் ஒளி புவியை அடைய ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஆகும். ஆனால், சூரிய ஒளி புவியை எட்டரை நிமிடங்களில் அடைகிறதென்பதி லிருந்து, சூரியனின் தொலைவு புலனாகும். சூரியக் கறைப்புள்ளிகள் (sun spots), காந்தப்புயல், ஒளிப் புரை (photosphere), வண்ணப்புரை (chromosphere). சுடர்க்கொழுந்து (prominence), சூர் சூரியப் பரப்பி லிருந்து வெளியாகும் எக்ஸ்கதிர், ரேடியோ அலைகள், அணுத்துகள்கள், திடீர்ச் சுழல் வீச்சுகள் (flares) ஆகிய பல சூரிய நிகழ்ச்சிகளை நவீன கருவிகளைக் கொண்டு படங்கள் பிடித்துப் பதிவு செய்து ஆய்வு கள் நடத்துகிறார்கள். இங்குப்பயன்படுத்தப்படும் கருவிகளில் மிகவும் முக்கியமானது சூரிய ஒளிவண்ணப் பட்டையின் ஓரலைப் பதிவு நிழற்படக்கருவி (spectro heliograph) ஆகும். ஒரே நிறத்தில் சூரியனின் நிழற்படங்கள் எடுக்கும் கருவிகளில் மூன்று கொடைக்கானலில் உள்ளன. முதல் கருவி, 1904 ஆம் ஆண்டிலிருந்தே பயன்பட்டு வருகிறது. இது சூரியனின் வட்டப்பகுதி யையும், சுடர்க்கொழுந்தையும், செங்கருநீல நிறத் தில் கால்ஷியம் அயனியின் K-கோட்டுப்படமாக நாள்தோறும் எடுக்கிறது. 1911 ஆம் ஆண்டு கொடைக்கானல் நிலையத்திலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாம்கருவி H-ஆல்ஃபா எனப்படும் ஹைட்ரஜன் சிவப்புக்கோட்டுப்படம் எடுக்கிறது. K - கோட்டுப்படங் களிலிருந்து வண்ணப்புரைகளின் மேற்பகுதியையும், H - ஆல்ஃபாப்படங்களிலிருந்து அவற்றின் கீழ்ப்பகுதி யையும் ஆய்வு செய்ய முடியும். மூன்றாம் கருவி 1960இல் தயாரிக்கப்பட்டது. சூரியனை எந்த நிறத்திலும் எந்தப் பகுதியிலும் எடுக்குமாறு இக்கருவி அமைந்துள்ளது. மேலும் 15 செ. மீ. துளையுடைய தொலைநோக்கியுள்ள நிழற்படக் கருவி மூலம், நாள்தோறும் 20 செ.மீ விட்டமுள்ள வெண்மை ஒளியுடைய படங்கள் எடுக்கப்படுகின்றன. கறைப்புள்ளிகள், காந்தப் புலங்கள். சூரியனின் சுழற்சி ஆகியவை இவற்றி லிருந்து ஆராயப்படுகின்றன.