உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொம்புகள்‌ 481

கொம்புகள் 48/ செர்விடி, ஜிராஃபிடி, போவிடி, ஆன்டிலோகேப்ரிடி என்பன. செர்விடி என்னும் மான் குடும்பத்தில் கலைக் கொம்புகள் ஆண் மான்களுக்கு மட்டும் உண்டு. ரெயின்டீர் என்னும் பனி மானில் பெண் மான்களுக்குக் கொம்புண்டு. மஸ்க்கஸ் என்னும் சுஸ் தூரி புறச் மான்களுக்குக் கொம்பில்லை. அதற்குப் பதிலாக ஆணின் மேல் தாடையிலுள்ள நாய்ப்பல் நீண்டு பெரிதாக வளர்ந்திருக்கும். ஆண்பாலுக் குரிய ஹார்மோன், கலைக்கொம்பு வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. விதையடித்த மானில் கலை கள் செம்மையாக வளர்வதில்லை. சுலைமானின் கொம்பு, மேல் தோலின் வளர்ச்சியன்று; சட்டசுப்பகுதியுமன்று. அகச்சட்டகத்தைச் சேர்ந்தது. இளவேனிலில் கொம்பு நெற்றியெலும்பின் புடைப் பாக எழுகிறது. அப்போது தோல் அதைப் போர்த்தி இருக்கும். அத்தோல் மென்மையாகவும் இரத்தக் குழாய்கள் நிரம்பியும் மெல்லிய மயிர் முளைத்தும் மென்போர்வை போல இருக்கும். ஆதலால் அத் தோலுக்கு வெல்வெட் என்று பெயர். கலைமானிவ் இலையுதிர் காலந் தொடங்கி புதிய கொம்பு முளைத்து, சில காலத்திற்குள்ளே கொம்பின் வளர்ச்சி முற்றுப் பெற்றுவிடும். அதன் பிறகு ஒரு வளையம் போன்ற வரம்பு (burr) கொம்பின் அடிக்குச் சிறிது தள்ளி மேலே தோன்றும். இவ்வரம்பிற்குக் கீழே உள்ள பகுதி காம்பு (pedicel) என்றும் மேலுள்ளது தூலம் என்றும் குறிக்கப்படும். வரம்பு உண்டாகித் தோலை அழுத்துவதால் மேலே போகும் இரத்த ஓட்டம் தடைப்பட்டுப் பிறகு நின்று விடும். கொம்பினுள் இருக்கும் எலும்பும் மேலே போர்த் துள்ள வெல்வெட்டும் பட்டுப்போகும். மரப்பட்டை உதிர்வது போல் வெல்வெட் உதிர்ந்துவிடும் அல்லது மான் தன் கொம்பை மரம் முதலியவற்றில் தேய்ப்பதால் உள்ளீடாக இருந்த எலும்பு வெளியே தோன்றும். அதில் வரம்புகளும் பள்ளங் களும் தெரியும். இப்பள்ளங்கள், இரத்தக்குழாய்கள் ஓடிக்கொண்டிருந்த இடங்கள் ஆகும். இணை விழைச்சுப் பருவத்தில் பெண்ணுக்காக ஆண் ஒன்றோ டொன்று போட்டியிடும். கொம்புகளால் தாக்கிப் போர் புரியும். பிறகு குளிர் கால முடிவில் அல்லது இளவேனில் தொடக்கத்தில் கலைக்கொம்பின் அடிப் பகுதியில் காம்பின் நுனியிலுள்ள எலும்பு உள்ளு றிஞ்சப்படும். அதனால் வரம்பு அதற்கு மேலுள்ள தூலம் உட்படக் கொம்பு உதிர்ந்துவிடும். காம்பின் முனை காய்ந்து பக்காக (scab) ஆகிவிடும். அப்போது அது வழவழப்பாகவும் மயிர் மூடியுமிருக்கும். பழைய கொம்பிள் அடிக்குறடாகிய இக்காம்பிலிருந்து புதிய கொம்பு வளரும். ஆண்டுதோறும் சிலகாலம் புதிய கிளைகள் தோன்றும். சில மான் கொம்புகளில் பல கிளைகள் இருக்கும். கொம்பு முழுவதும் கெட்டியாக அ. க. 9 - 31 இருப்பதால் மான்கள் கெட்டிக் கொம்பிகள் எனப் படுகின்றன. ஜிராஃபிடி என்னும் ஒட்டகச்சிவிங்கிக் குடும்பத் தில் கொம்புகள் சிறியவை. இவை ஆண், பெண்களில் உண்டு. ஒட்டகச்சிவிங்கியில் அவை சிறு எலும்பு முடிச்சுகளாக இருக்கும். வெளிப்புறத்தில் தோல் மூடியிருக்கும். கொம்பு, முதலில் தலையின் பக்கச்சுவர் எலும்பிற்கு மேலே ஒரு சிறு உருண்டையான தனி எலும்பாக எலும்புநீட்சி (epiphysis) போல உண்டா கும். பக்கச் சுவரெலும்பிலிருந்து ஒரு புடைப்பு எழுந்து வளர்ந்து அந்த உருண்டையோடு ஒட்டிக் கொள்ளும். இப்புடைப்பும் முதிர்த்து கொம்பின் பெரும்பகுதியாக அமையும். இக்குடும்பத்து மற்றொரு விலங்காகிய ஒக்காப்பியிலும் கொம்பு அவ்வாறே உள்ளது. ஆனால் தோல் அதை முற்றிலும் மூடி யிருப்பதில்லை. கொம்பின் நுனித்தோல் மூடப் பெறாமல் வெறுமையாக இருக்கும். இவற்றின் கொம்புகள் நிலையானவை, உதிர்வதில்லை. போவிடி என்னும் மாட்டுக்குடும்பத்தில் ஆண் பெண் இரண்டிற்கும் கொம்புகள் உண்டு. இந்தக் கொம்பின் உள்ளீடு எலும்பு நெற்றியெலும்பிலிருந்து வளர்ந்து தோல் போர்த்தியிருக்கும். தோலின் மேல் 110 அடுக்கில் கெரட்டின் என்னும் பொருள் உண்டாகி அடுக்கடுக்காகப் படியும், கெரட்டின் என் றால் கொம்புப்பொருள் எனப் பொருள்படும். பகை அது அல்புமினாய்டு என்ற வேதி வகுப்பைச் சேர்ந்தது. ஒளி ஓரளவுக்கு ஊடுருவும் தன்மை கொண்டது. கெரட்டின் பாதுகாப்பான மேற்பரப்பாகவும் வேலை செய்வதற்குரிய தொழில் கருவியாகவும் விலங்குகளோடு போரிடவோ தற்காப்புக்கோ உதவும் படைக்கருவியாகவும் பயன்படுகிறது.நகம். வளைநகம், குளம்பு, பறவை அலகு, ஆமை ஓடு, சில திமிங்கலங்களின் மேல் தாடையில் வளரும் பேலீன் (baleen) என்னும் திமிங்கலத் தகடுகள், மயிர், மனிதன் காலில் உண்டாகும் காய்ப்பு அல்லது ஆணி, அழுங்கின் (manis-anteater) ஓடுகள், பாம்பு, ஓணான் ஆகியவற்றின் செதில்கள் இவையனைத்தும் கெரட் டின் பொருளால் ஆனவையே. கிளைகள் ஆடு, மாடு ரலைகளின் கொம்பில் உண்டாவதில்லை. இதில் மேற்புறத்திலுள்ள கெரட் ஷன் அடுக்கைத் தவிர எல்லாப்பகுதிகளும் உயிருள்ள திசுக்களாலானவை. ஆதலால் வளர்ச்சி, தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கலாம். வெளிப்புறக் கொம்புப் பொருள் அடியிலுள்ள தோல்படையிலிருந்து வளர்கிறது. அடியில் புதிய படைகள் வளர வளர். பழைய படைகள் மேலுக்குத் தள்ளப்படும். எலும்பு வளர வளர், அதற்கேற்றவாறு கொம்புப் பொருளும் வளர்ந்து அதன் அடுக்குகள் மேலுக்கு வரும். மாட்டுக் குடும்பத்தில் கொம்பின் நடுவிலுள்ள எலும்பிலும் உள்துளை உண்டு. ஆதலால் இவ்விலங்கு