உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோள்‌ இயற்பியல்‌ 633

யும் கொண்டு கோளின் உட்புறத் பொதுவாகவே ஊகிக்க முடியும். தன்மையைப் எல்லாக் கோள்களுமே தம்மைத் தாமே சுற்றிக் கொள்கின்றன. சில கோள்கள் வேகமாகவே சுழல் கின்றன. இத்தகைய தற்சுழற்சி காரணமாகக் மைய கோனின் நடுக்கோட்டில் ஒரு வெளிப்புற, விலக்கு விசை தோன்றுகிறது. நடுக்கோட்டுத் தளத் தில் செயல்படுகிற இந்த விசை அத்தனத்திலுள்ள பொருளின் எடையை நீடிக்க வைக்க உதவுகிறது. அத்துடன் அதன் காரணமாகக் கோளின் நடுக் கோட்டுப் பகுதியில் ஒரு புடைப்பும் தோன்றுகிறது. இந்தப் புடைப்பின் அளவையும், சுழற்சி வேகத்தை யும் கொண்டு கோளின் உட்பகுதியில் நிறை பரவி யுள்ள விதத்தை அறிய உதவும் கூடுதலான தகவல் களையும் ஊகிக்க முடியும். ஒரு கோளின் உட்புறத்திலிருந்து வெப்பம் வெளியேறும் வீதம், அளவிடக் கடினமான பண்பு ஆகும். ஆயினும் புவியின் உட்பகுதியிலிருந்து வெளி யேறும் வெப்பத்தின் அளவு ஓரளவு தெளிவாகவே அளவிடப்பட்டுள்ளது. சந்திரனின் உட்பகுதியி லிருந்து வெளியேறும் வெப்பத்தின் அளவும் தோராய மாகக் கணக்கிடப்பட்டுள்ளது. புவியிலும் சந்திரனி லும் இந்த உள் வெப்பம் கதிரியக்கப் பொருள்கள் சிதைவடைவதால் ஏற்படுவதாகத் தோன்றுகிறது. இந்த வெப்பப் பாய்வின் அளவிலிருந்து கோளின் உட்பகுதியில் வெப்பம் பரவியுள்ள விதத்தைக் கண்டுபிடிக்க முடியும். புவியையும் சந்திரனையும் எடுத்துக்கொண்டால், இந்த உள்ளிட வெப்பப் பாய்வின் அளவு, சூரியனிலிருந்து வருகிற வெப் பத்தை விடப் பன்மடங்கு குறைந்தது. வியாழன். சனி ஆகிய கோள்களில் உள்ளிட வெப்பப் பாய்வு, சூரியனிலிருந்து வருகிற வெப்பத்திற்கு ஓரளவு சம மாக இருக்கும். அந்தக் கோள்கள் இதன்மூலம் சூரிய னிடமிருந்து வரும் வெப்பத்தை மட்டுமே தோற்று விக்கக் கூடியவை என்பதை விட ஓரளவு அதிகமான வெப்ப நிலையிலிருக்கின்றன என்பதே பொருந்தும். இதன் மூலம் அந்தக் கோள்களின் உள்ளிட வெப்பப் பாய்வை எளிதாக அளவிட முடியும். டவை. குடும் வேதிக் கூட்டமைப்பு வகைகள். சூரியக் பத்திலுள்ள கோள்களின் பண்புகள் பலதரப்பட் சூரியனில் உள்ள பருப்பொருளில் தோராய மாக 98% ஹைட்ரஜனும் ஹீலியமும் உள்ளன. எனவே சூரியனும், சூரியக் குடும்பமும் உரு வாக அடிப்படையாக இருந்த பொருள்களிலும் அளவுக்கு ஹைட்ரஜனும் ஹீலியமும் இருந்திருக்க வேண்டும். எஞ்சிய பொருள் களில் கார்பன். நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகி யவை அடங்கியிருக்கும். ஹைட்ரஜன் பெரும் பான்மையாக இருக்கும்போது அவை அதனுடன் இணைந்து மீத்தேன், அம்மோனியா, நீர் ஆ கியவை கோள் இயற்பியல் 633 யாக மாறும். இப்பொருள்கள் எல்லாம் பனி எனப் படும். இது மிகக் குறைந்த வெப்ப நிலைகளில் ஆவியாக மாறிவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவை மிகவும் அடர்த்தி குறைந்த வளிமங்கள். இவையும் பனியும் புவியிலும் பிற உட்புறக் கோள் களிலும் மிகக் குறைந்த செறிவுகளில் காணப்படு ன்றன. இவற்றில் பாறை வகைப் பொருள்களே பெருமளவிலுள்ளன. பாறைகளில் மக்னீசியம், சிலிகான், இரும்பு, அலுமினியம், கால்சியம், குரோ மியம் ஆகியவை மிகுதியாகக் கலந்து ஆக்சைடு களாக உள்ளன. விண்ணிலிருந்து புவியில் வந்து விழுகிற எரிகற்றை களில் இரும்பு ஆக்சைடாகவும், தனி உலோகமா கவும் கலந்துள்ளது. புவியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் இரும்பு ஏறக்குறைய முழு அளவில் ஆக்சைடாகவே அமைந்துள்ளது. புவியிலுள்ள உலோக நிலை இரும்பில் பெரும்பகுதி அதன் உள்ள கத்தில் செறிந்துள்ளது. இப்பொருள்கள் வெவ்வேறு வெப்ப நிலைகளில், அளவுகளில் ஆவியாகின்றன. இவ் வேறுபாடு கோள்களின் களுக்கும் சூரியக் குடும்பத்திலுள்ள பண்புகளுக்கும் இடையில் தொடர்புண்டு. இவற்றின் மூலம் கோள்கள் உருவான சூழ்நிலைப் பண்புகளைக் கண்டுபிடிக்க முடியும். உட்புறக் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், புவி ஆகியவை பாறைகளால் ஆனவை. இவை மிகு சூடான நிலையில் தோன்றிய வையாகலாம். ஆகவேதான் எளிதில் ஆவியாகும் பொருள்கள் திண்மமாகவோ நீர்மமாகவோ உறைந்து பாறைகளில் தங்காமல் போய்விட்டன. சூரியனிலிருந்து மிகு தொலைவில் திரிகிற வால் விண்மீன்களில் பனியும், பாறைகளும் நிறைந்திருக் கின்றன. வெளிப்புறக் கோள்கள் மிகப் பெரியவை. அவற்றில் யுரேனசும், நெப்டியூனும் பாறை, பனி இவற்றின் சுவவைகளாலானலை என்று தோன்று கிறது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரியவையான வியாழனும், சனியும் ஏறக்குறைய சூரியனை ஒத்த கூட்டமைப்புக் கொண்டவையாக உள்ளன. ஆயினும் அவற்றின் உட்பகுதியில் மிகு நிறையுடைய தனிமங்கள் செறிந்திருப்பதை அறிய லாம். கூட்டமைப்புகளில் இவ்வாறான வேறுபாடுகளி லிருந்து ஹைட்ரஜனையும் ஹீலியத்தையும் திண்ம நிலைக்குக் கொண்டு வரக் கூடிய குறை வெப்ப நிலை இருந்தால் மட்டும் போதாது என்பதும் அவற்றைத் தம்பால் இருத்தி வைத்துக்கொள்ளும் அளவுக்கு நிறையீர்ப்பு விசையைச் செலுத்தும் நிறை இருக்க வேண்டும் என்பதும் தெளிவு. வியாழனும் சனியும் நிறை மிக்கவையாதலின் தப்பியோடும் தன்மையுள்ள ஹைட்ரஜனையும் ஹீலியத்தையும் இவை பிடித்து வைத்துக் கொள்ள முடியும். ஹைட்ரஜனும் ஹீலிய மும் இல்லாத வால் விண்மீன்கள் அளவிலும் நிறை