உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளமீன்‌ 653

கோளமீன் 653 என்றும்,ஆரம் + என்றும் இருப்பின் கோளத்தின் சமன் um (x-a) + (y-b)2 + (2-0)³ = 12 என்று எழுதலாம். கோள மையத்தின் வழியாகச் செல்லும் கோடு விட்டமாகிறது. இவ்விட்டம் கோள ஆரத்தைப் போல் இரு மடங்காகும். இது கோள மையத்தின் வழியாகச் சென்று, கோளப்பரப்பில் முடிகிறது. கோளத்தின் ஏதேனும் இரு புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டிற்கு நாண் என்று பெயர். கோளப் பரப்பிற்கு முனைகள் இல்லை. கோளத்தை ஏதாவது ஒரு தளம் வெட்டினால், அந்த வெட்டு முகம் ஒரு வட்டமாகும். அவ்வாறு உண்டாகும் வட்டம், கோள மையத்தின் வழியாகச் சென்றால், அவ்வட்டம் பெரு வட்டம் (great circle) ஆகிறது. பெரு வட்டத்தின் ஆரமும் விட்டமும் முறையே கோள ஆரத்திற்கும் விட்டத்திற்கும் சமமாகின்றன. ஒரு பெரு வட்டம் கோளத்தை இரு பாதியாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பாதிக்கும் அரைக்கோளம் (hemisphere) என்று பெயர். கோள மையத்தின் வழியாகச் செல்லாத வட்டத்திற்குச் சிறுவட்டம் (small circle) என்று பெயர். புளி என்ற கோளத்தில், நடுவரை (terrestrial equator) ஒரு பெரு வட்டத்திற்கும், கடக ரேகை (tropic of cancer), மகர ரேகை (tropic of- capricorn) ஆகியன சிறு வட்டத்திற்கும் எடுத்துக் காட்டுகளாகும். சமி ரு கோளங்கள் வெட்டிக்கொள்ளும் வளைவு ஒரு வட்டமாகும். இரு கோளங்கள் வெட்டிக் கொள்ளும் வட்டத்தின் மேலுள்ள ஏதேனும் ஒரு புள்ளி வழியாக வரையப்படும் தொடுதளங்களுக்கு இடைப்பட்ட கோணம், இரண்டு கோளங்களுக்கு டைப்பட்ட கோணம் என வரையறுக்கப்படுகிறது. இக்கோணத்தின் மதிப்பு 90 ஆகும்பொழுது, இரு கோளங்களும் செங்குத்தாகவெட்டிக்கொள்வனவாகக் கூறப்படும். கோளத்தின் புறப்பரப்பு: 471, கன அளவு r எனும் வாய்பாடுகளால் கணக்கிடப்படுகின்றது. இவற்றில் + என்பது 3.1416 எனும் மதிப்பையும், T என்பது ஆரத்தையும் குறிப்பதாகும். பரப்பளவு சதுர அளவாலும் கனம் கன அளவாலும் குறிப்பிடப்படு கின்றன. சான்றாகச் சதுரமீட்டர், கனமீட்டர் என வை முறையே கணக்கிடப்படுகின்றன. கோளமீன் -எம். அரவாண்டி இம்மீன்களின் உடல் குட்டையாகவும் உருண்டை யாகவும் இருக்கும். காற்றையோ, நீரையோ அதிகம் உள்ளிழுத்துப் பலூன் போல் பருத்து விடுவதுண்டு. இந்நிலையில் இவை நீர்மட்டத்தில் மல்லாந்து மிதக் கும். அப்போது இவை நீரின் போக்கிலேயே இழுத்துச் செல்லப்படுகின்றன. கையில் எடுத்தாலோ, மெது வாசுத் தீண்டினாலோ, கோளமீன் பருக்கும் தன்மை கொண்டிருப்பதால் பிற விலங்குகள் இதைக் கடிக் சுவோ விழுங்கவோ முடியாது. கடித்தால் குத்தீட்டு நிற்கும் முள்கள் குத்தும். ஏறத்தாழ அறுபது வகையான கோள மீன்கள் வெப்பம் அதிகமான நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள கடல்களில் வாழ்கின்றன. ஒருசில னங்கள் ஆறுகளில் வாழ்கின்றன. இவை அனைத்தும் ஐந்து பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வின மீன்கள் முதன்முதலில் இயோசின் காலப் பிற்பகுதியில் (ஏறக்குறைய 5 இலட்சம் ஆண்டுகளுக்கு தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. முன்) கோளமீனில் ஓர் இனமான டெட்ரோடோன் படோகா (Tetrodon Patoca) அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், வங்களா விரிகுடாப் பகுதிகளில் காணப் படுகிறது. இவ்வினக் கோள மீன்கள் இந்தியக் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மிகுதியாகக் காணப் படுகின்றன. இவற்றின் உடல் மேற்பகுதி கறுப்பு அல்லது சிவப்புக் கலந்த வட்ட வெள்ளைப் புள்ளி உடையதாக இருக்கும். ரு பக்கங்களும் வயிற்றின் அடிப்பகுதியும் மினுமினுப்பான வெள்ளை நிறமுடையவை. ஒரு மஞ்சள் நிறமான மெல்லிய கோடு கறுத்த மேல் பகுதியையும் வெளுத்த கீழ்ப் பகுதியையும் பிரிக்கும் வகையில் அமைந்துள்ளது. களை கோளமீனின் ஈரல், குடல், தோல், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியன கொடிய நச்சுத் தன்மையுடை பவை. ஆனால் புலால் சுவையில் ஒரு குறையும் இல்லாமையால் இம்மீன் ஜப்பானியர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. கோளமீனின் புலால் ஃபுகு (Fugu) எனப்படும்; உடலின் நஞ்சுடைய பகுதிகளி லிருந்து அதைப் பிரித்தெடுத்துச் சமைக்கின்றனர். இருந்தும், உணவில் நஞ்சு கலப்பதால் கோளமீன் உணவால் இறப்போர் மிகுதி. இம்மீனில் பற்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே தொகுதியாக அலகு போல் இருக்கும். அலகின் மேற்பகுதிகள் ஒன்றோடொன்று ணைக்கப்பட் டுள்ளன. ஒவ்வோர் அலகிலும் கத்தி போன்ற கூரான விளிம்பின் உட்புறத்தில் கெட்டியான, தடித்து மழுங் கிய ஒரு திண்டு போன்ற பகுதி உள்ளது. இவ்வலகு உயிரிகளின் நுனிகளைக் கடித்து உண்ணுகிறது. கோளமீன் வாயின் உள்பகுதியில் காணப்படும் கெட்டியான பகுதி நத்தையின் ஓடு களைக் கூட நசுக்கி உடைக்கவல்லது. இவ்வாறு நொறுக்கி உடைக்கப்பட்ட நந்தையின் துண்டுகள் எளிதில் செரிக்கின்றன. சுளால் பவள விசிறி போல் அசைவுகளைச் செய்து துடுப்பு களின் உதவியால் கோளமீன் நீரில் நீந்துகிறது.நீரி லிருந்து வெளியே எடுக்கும்போது நாய் உறுமுவது போல் ஒலியெழுப்பும். இம்மீன்களின் தோலில் செதில்