உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கௌ கெளரிபாடாணம் (சித்த மருத்துவம்) பன்றி நெய்யில் ஒரு சாமம் சுருக்குக் கொடுக்கச் சுத்தியாகும். கெளரிபாடாணத்தை அவுரி இலைச் சாறு, பாகற்காய்ச் சாறு ஒவ்வொன்றிலும் மூன்று நாள் ஊறவைத்து எடுக்க, சுத்தியாகும். கௌரிபாடாண மாத்திரை. கௌரி 35 கிராம் எடுத்து, தாய்ப்பாலில் மூன்று நாள் ஊறப்போட் டெத்து ஏட்டிலிட்டு, தாய்ப்பாலால் 12 மணி நேரம் சுருக்குக் கொடுத்தெடுக்கச் சுத்தியாகும். தாளகம் 35 கிராம் எடுத்துச் சுண்ணாம்புக்குள் வைத்து, நீர் ஊற்றித் தாளித்து எடுத்து, இவ்விதம் ஏழு முறை செய்யத் தாளகம் சுத்தியாகும். இவ்விரண்டு சரக்கை யும் ஒன்றாய்க் கல்வத்திலிட்டுத் தாய்ப்பால் விட்டு 12 மணி நேரம் அரைத்து 65 மி.கி. மாத்திரைகளாகச் செய்து, நிழலில் உலர்த்திப் பதனம் செய்து, காலை மாலை மூன்றுநாள் வேளைக்கு 1 மாத்திரை வீதம் கொடுக்கப் பித்தக் காய்ச்சல், வாதக்காய்ச்சல், குளிர், ஐயக்காய்ச்சல், மாறல்காய்ச்சல் முதலியன நீங்கும். புளி, புகை நீக்கி, துவரை, சுத்தரிப்பிஞ்சு சேர்த்து, மருந்தருந்துங்கால் அரோசகம் வந்தாலும், பத்தியம் தவறினாலும் மிளகைக் குடிநீர் செய்து கொடுக்க வேண்டும். சுத்தி செய்த கொளரிபாடாணம் 35 கிராம், இலிங்கம் 25 25 கிராம் எடுத்துக் கல்வத்திலிட்டு, எலுமிச்சம் பழச்சாறு, தாய்ப்பால் இவற்றால் தனித்தனியே 12 மணி நேரம் அரைத்துக் கேழ்வரகு போன்ற மாத்திரைகள் உருட்டி, நிழலில் உலர்த்திப் பதனம் செய்து! ஓராண்டு வைத்துப் பிறகு பயன் படுத்த வேண்டும். ஒரு நோயாளிக்கு ஆறு மாத்திரைக்கு மேல் கொடுக்கக்கூடாது. அனுபானம். இஞ்சிச்சாறு, தேன், தாய்ப்பால், பழச்சாறு இவற்றால் பானம் செய்து அருந்த பித்தம். வாதக்காய்ச்சல், பித்தக்காய்ச்சல் முதலியன தீரும். மருந்தருந்தும் காலத்து நச்சு மிகாமலிருக்க நீலி வேர்ப்பட்டை, மிளகு, சிறுகீரைவேர் இவற்றைக் கொண்டு செய்யப்பட்ட குடிநீரையும் அருந்த வேண்டும். கெளரிபாடாணத்தைப் பேய்ப் பீர்க்கன் சாற்றில் இரண்டொரு சாமஞ்சுருக்கிட அது கட்டி விடும். அக்கட்டினைத் தேனிலுரைத்து உள்ளுக்குத் தர, காய்ச்சல் முதலியவை தீரும். சே. பிரேமா