உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டைத்‌ துணிகள்‌ 693

தயாரிக்கப்படுகிறது. பாவு நூல்களைவிட நிரப்பு நூல்கள் கூடுதலாகவுள்ளன. தடித்த நிரப்பு நூலின் மேலும் கீழும் மாற்றி மாற்றி அடுத்தடுத்து அமைக்கப் பட்ட இரு பாவு நூல்களைக் கொண்டு நெய்யப் படுகிறது. து ரண்டு முனையுடைய சாதாரண வெண்மையான பருத்தித்துணியாகும். பொ. ரதுவாக, பாவில் வண்ணங்கள் ஏற்றப்படுகின்றன. நாகரிகத் தோற்றமளிக்க இடையிடையே கோடுகள் கொடுக்கப் படுகின்றன. டஃபேட்டா (taffeta). பட்டு மற்றும் செயற்கை இழைகளால் நெருக்கமாக அமைக்கப்பட்ட சாதாரண நெசவு. பொதுவாக எடையேற்றம் செய்யப்பட்டு முறமுறப்பாக்கப்படுகிறது. ஒரே வண்ணத்திலோ. பாவு நூல் ஒரு வண்ணத்திலும், நிரப்பு நூல் மற் றொரு வண்ணத்திலுமாகவோ நெய்யப்படுகிறது. பிந்தைய வகையை ஷாட்டஃபேடா என்பர்.துருத்தப் பட்ட கோலங்களை உருவாக்குவதும் (moiereing) உண்டு. வெண்மை, வெளிர் நிறங்களில் மிகு நுண் இழைகளால் கோடுகளுடன் நெய்யப்படுகிறது. ஒரு திசையில் பட்டு இழையாலும், மறுதிசையில் தாவர இழையாலும் நெய்யப்படுகிறது. ப்ளிசே (plisse). லான் அல்லது சீட்டித் துணி யின்மீது ஏதாவதொரு பசையினால் விரும்பும் பாணியில் கோடு, கட்டம், பூ, கற்பனை வடிவம் பூசவேண்டும். பின்பு துணியை எரிகாரக் கரைசலில் இட்டால், பசையால் மூடப்படாத பகுதி சுருக்கத் திற்குள்ளாகிறது. இறுதியாக, பசையகற்றம் செய் யப்படும்போது, சுருக்கம் நெளியாக மடிப்புப் போன்று தெரியும். பொங்கி (pongee.) இது டஸ்ஸா பட்டு (tussah silk) எனவும் குறிப்பிடப்படுகிறது. கரடுமுரடான, சீர்மையற்ற யாப்புடையது. பொதுவாக, வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தைக் கொண்டது; சாயமேற்றத்தக்கது. சாதாரண நெசவுப் பருத்தித் துணியிலிருந்தும் தயாரிக்கலாம். எஃகு உருளை களால் உயர் அழுத்தத்தில் பதியவைத்தலும், காரவினையேற்றமும் (mercerising) இப்பருத்தித் சட்டைத் துணிகள் 693 துணியின் தோற்றத்தைப் பட்டைப்போல் அளிக்கச் செய்யும், unuafor (poplin). இதில் இரு வகைகள் உள்ளன. பட்டுப் பாவு நூலும், கம்பளி நிரப்பு நூலும் கொண்டது. மேட்டுக்கோடுகள் (ribs) உருவா கின்றன: பருத்தி போன்ற வெட்டிழைகளாலான சாதாரண நெசவு. பாவு நூல்களைவிட நிரப்பு நூல்கள் தடித்தவை. அச்சிடப்பட்ட துணி தயாரிக்க உதவும் நூல்களும், வாரப்பட்ட நூல்களும் பயனா கின்றன. பெரும்பாலும் ஒரே நிறத்தில் தயாரிக்கப் படுகிறது. சிறிது சிறிதாகப் பதப்படுத்தப்பட்டுச் சிக்கெடுக்கப்பட்டு நெய்யப்படுகிறது. இது பெரிதும் அடர் நிறங்களில் சாயமேற்றப்படுகிறது. நீர் ஒட்டாமை, தீப்பிடிக்காமை, பூசணம் தாக் காமை ஆகிய பண்புகள் சீர்செய்தல் முறைகளால் பாப்ளின் துணிக்கு ஏற்றப்படும். ஷார்க் தோல்(shark skin). இது சுறா மீனின் தோலையொத்த தோற்றம் கொண்டது. பொது வாக கம்பளி நூலிலும், சில அமைப்புகளில் ரேயான், அசெட்டேட் நூல்களைக் கொண்டும் தயாரிக்கப்படு கிறது. வண்ண நூல் ஒரு குறுக்குவிட்டத்திலும் இருபடை (twill) நெசவு மற்றொரு குறுக்குவிட்டத் திலும் அமைந்திருக்கும். சூரா (surah). பட்டு, செயற்கை இழைகளிலான இருபடை நெசவு, மகளிர் சட்டைக்கு ஏற்ற இத்துணி மென்மையானது. . வாயில், வாரப்பட்ட, நன்கு முறுக்கப்பட்ட ஒற்றை நூல்களிலிருந்து தயாராகும் சாதாரண நசவு. மகளிர் சட்டைக்கு ஏற்றது. பணிமுறை சார்பற்ற வெள்ளைச் சட்டைத்துணி. தூய அளவான வார்ப்பால் நெய்யப்பட்டு, வெண்மை யாக்கப்பட்டுச் சிறந்த தரமான வெள்ளைச் சட்டைத் துணிகள் (shirting) நெய்யப்படுகின்றன. வெள்ளைப் பருத்திச் சட்டைகள் பதப்படுத்தப்படுகின்றன. அல்லது பதப்படுத்தப்பட்ட நூல் இழைகளோடு நெய்யப்படுகின்றன. படம் 3. மென் கம்பளித்துணி