{{rh|710 சணல், நார் இழைகள்
710 சணல், நார் இழைகள் பனியிலோ (dew - retting) சுமார் ஒரு வார காலத் திற்கு ஊறவைக்கப்படும். ஊறவைத்து நார் பிரிக்கும் முறையை விரைவுபடுத்துவதற்காக, சோடியம் கார் பனேட், சோடியம் ஆக்சலேட், சோடியம் ஹைட்ராக் சைடு ஆகியவற்றின் நீரியக் கரைசலுடன் சூடுபடுத்த லாம் அல்லது நீர்த்த சல்ப்யூரிக் அமிலத்துடன் கொதிக்க வைக்கலாம். கோந்துப் பொருள்கள் சிதை வுற்று, திசுக்கள் நுண்ணுயிர்த் தாக்கத்தால் மென்மை யுறுகின்றன. ஊறவைத்த பிறகு, இழைகள் தண்டி லிருந்து பிரிக்கப்பட்டு, கழுவப்பட்டு, உலர்த்தப்படு கின்றன. இழைகளைத் தண்டிலிருந்து பிரிப்பதற்கு நெளிவகை உலோக உருளைகளில் (fluted metal rollers) செலுத்தி, பின்பு மரச் சம்மட்டியால் அடித் தல் வேண்டும். சணலின் பத்தில் ஒரு பங்கு, நார்ப் பொருள் (லினன்) ஆகும். நுண்ணோக்கியின் மூலம் நோக்குகையில் பெரும் பாலான நாரிழைகளில் காணப்படும் குறுக்குக் கோடுகள் வினனிலும் தெரியும். இவை வட்ட வடி விலோ. அறுகோண வடிவிலோ அமைந்திருக்கும். இவ் விழைகளின் மையப் பகுதியில் ஒரு சிறு குழிவு தென் படும். லினனில் 100% செல்லுலோஸ் இருப்பதால் பருத்தியைப் போன்றே அமிலங்களுடனும் காரங் களுடனும் இது வினையுறுகின்றது. பயிரின் இழை களில் லினனே வலிமை மிக்கதாகும்; ஈரநிலையில் இதன் வலிமை கூடுதலாகும். ஊறவைத்தல் நிகழ்ச்சி யின் தன்மையைப் பொறுத்து இழையின் நிறம் அமைகிறது. வெளிர் மஞ்சளிலிருந்து பழுப்பு வரை ழையை எளிதில் நிறநீக்கம் செய்யலாம். வினன் ழைகள் 30-75 செ.மீ. நீளமும் 5-28 மைக்ரான் குறுக்களவும் கொண்டுள்ளன. ணையாக சிறு சணல் வெட்டிழைகளை (முரட்டிழைகளை) நீட்டி (carding இழை புரியாக்க வேண்டும். நீளமான நீளமான வெட்டிழைகள் சன்னமான லினன் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதைச் சீர்செய்யப்பட்ட சணல் (dressed flax) என்பர். இவை 30-50 செ. மீ. வரை நீளம் கொண்டவை. பரப்பிகள் (spreaders) எனும் கருவிகளின் வழியே செலுத்தி, சமநீளமுள்ள இழைகள் யாவும் தொகுப்பாக்கப்படுகின்றன (படம் 1). ஒரு சணல் நூலின் தர அளவுக்கு வெட்டு (cut) எனப்பெயர். 0. 4536 கி.கிராம் எடையுள்ள சணல் இழையை 273 மீட்டராக நீட்டினால் அந் நூல் Ne1 எனக் குறிப்பிடப்படுகிறது. இதே எடை யுள்ள இழை 546 மீட்டர் நூலாக இழுக்கப்பட்டால், Ne 2 என்று குறிக்கப்படுகிறது. 346 மீட்டர்/ கி.கி என்ற இவ்வலகை தற்போதைய அனைத்துலக அலகான டெக்சுக்கு (tex) மாற்ற 1654 எனும் காரணியால் பெருக்க வேண்டும். சணல் வலிமை மிக்க இழையாக இருப்பினும், மீள்தன்மை குன்றியது. ஈர நூற்பு, உலர் நூற்பு ஆகிய இருசெயல் முறைகளுக்கும் வினனைப் பொறுத்தவரை கட்டுப்படுத்தப்பட்ட, ஊறவைக்கும் முன் உடைத்த துப்புரவு கோதிய சணல் தண்டுகள் பின் செய்த பின் பின் படம்1. செயல்பாட்டின் பல இடங்களில் சணல் இழைகள் படம்2. சணலின் நுண் ஒளிப்படம் (அ) குறுக்கு வெட்டுப் படம் வெதுவெதுப்பான, ஈரமிக்க சூழ்நிலை தேவைப்படு கிறது. சணல் இழையின் மீள்தன்மையற்ற நிலை