உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 சப்பாத்திக்‌ கள்ளி

746 சப்பாத்திக் கள்ளி 3 2 1. தண்டு 2. மகரந்தத்தாள் J. சூலகம் 4. மகரந்தக்கேசரம் 3, சூலகப்பை 6. ஒபன்ஷியா டிலிளியை மலருடன் சூலகம். சூலகப்பை பல சூலக இலைகள் (poly carpellary) இணைந்ததால் ஏற்பட்டதாகும். கீழ் மட்டச் சூலகம்; பல சூல்கள் உண்டு. உருண்டை யான சூலகத் தண்டு பல சூல் முடிகள் கொண்டு தடிப்பாகவும், நேராகவும் இருக்கும். சூல்கள் சுவர் ஒட்டு (parietal) முறையில் அமைந்திருக்கும். சுனி. சதைக்கனி (berry) வகை. கனி பேரி வடிவத்தில் சதைப் பற்றான கழலைகள் கொண்டது. உண்ணக்கூடியது, விதைகள் சிறியவை, முளை சூழ்தசை (endosperm) அற்றவை, அமுங்கி இருக்கும். புற உறை மிகக் கடினமானது. வித்திலைகள் கள் போன்றிருக்கும். லை கனி ஓபன்ஷியா காக்சிநெல்லிபெரா (Opuntia coccin? llifera). இது திருநெல்வேலி, செங்கற்பட்டு மாவட்டங்களில் காணப்படுகின்றது. மெக்சிகோவில் இருந்து 1788 ஆம் ஆண்டு மசூலிப்பட்டினத்தில் புகுத்தப்பட்டது. டங் ஓபன்ஷியா மோனகாந்தா (Opuntia monacantha). து கோயம்புத்தூர், சென்னை போன்ற களில் வளர்கின்றது. ஒற்றை முள்ளால் ஆன இதை எளிதில் இனங்காணலாம். இது 1786 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டிலிருந்து இங்குக் கொண்டுவரப்பட்ட தாகும்.