சமமின் புள்ளி 787
எண்ணிக்கை N, ஆகவும் துணை மின் சுருளின் சுற்று எண்ணிக்கை N,ஆகவும் கொண்டால் அவ்விரு சுருளின் சுற்று எண்ணிக்கைக்கு உள்ள விகிதம் a ஆகும். தெவனின் சம மின்சுற்று. ஒரு மின்சுற்றில் உள்ள ஒரு பகுதியில் செல்லும் மின்னோட்டத்தை அறிய, மின் சுற்றில் அந்தப் பகுதி தவிர ஏனைய பகுதிக்குச் சமமான மின்சுற்றை உருவாக்க, தெவனின் தேற்றம் பயன்படுகிறது. படம் 7 இல் R என்ற மின் தடையில் உள்ள மின்னழுத்தம் VAB. மின்னோட்டம் IAB இவற்றை எளிதில் நிர்ணயிக்க வேண்டுமாயின் R என்ற மின் தடை தவிர, படத்தில் அதன் இடப்புறம் சுட்டமிடப் பட்ட மின்சுற்றுக்குச் சமமான ஒரு மின்சுற்றை நிர்ணயிக்க வேண்டும். படம் 7இல் R என்ற மின் தடையை அகற்றிய பின் A,B என்ற இரு முனை களுக்கு இடையில் உண்டாகும் மின்னழுத்தம் மின் சுற்று திறக்கப்பட்ட நிலை மின்னழுத்தம் எனப் படும். இதை VAB(O) எனக் குறிக்கலாம். இதையே தெவனின் மின்னழுத்தம் VTh எனவும் குறிப்பிடலாம். A, B என்ற பகுதிக்கு இடப்புறமுள்ள மின்சுற்றில் உள்ள மின்னழுத்த மூலங்களைக் குறுக்குச் சுற்றுச் செய்தும். மின்னோட்ட மூலங்களின் சுற்றைத் திறந்தும் மின்சுற்றில் மின்னோட்டங்களைத் தடுத்து ஓர் உயிரற்ற மின்சுற்றானபின் மின்சுற்றில் எஞ்சி யுள்ள மின் தடைகளின் சம தடையை Req கணக் கிட்டால் அது தெவனின் தடை Rah எனப்படும். இவ்வாறு கணக்கிடப்பட்ட தெவனின் மின்னழுத்தத் துடன் தெவனின் தடையையும் R என்ற மின் தடையையும் தொடர் ணைப்பின் மூலம் இணைத் தால் R என்ற பகுதியில் செலுத்தப்படும் மின்னோட் டத்தின் அளவையும் மின்னழுத்தத்தையும் எளிதாகக் கணக்கிடலாம். நார்ட்டன் சம மின்சுற்று. தெவனின் தேற்றத்தைப் போல் எளிய சம மின்சுற்றை ஏற்படுத்தி ஒரு பகுதியில் செலுத்தப்படும் மின்னோட்டம், மின்ன ழுத்தம் முதலியவற்றைக் கணக்கிடும் மற்றொரு முறை நார்ட்டன் தேற்றமாகும். படம் 7 இல் R என்ற மின் தடையை எடுத்த பின் A, B யைக் குறுக்கு இணைப்புச் செய்தால் அப்பகுதி யில் ஏற்படும் மின்னோட்டம் Isc ஆகும். இந்த Isc ஐ ஒரு மின்னோட்ட மூலமாகக் கொண்டு இடப் புறமுள்ள மின்சுற்றை உயிரற்றதாக்கிக் கண்டுபிடிக்கப் பட்ட சமதடையான Reg ஐப் படம் 9இல் காணு மாறு பக்கவாட்டாக இணைத்து ஓர் எளிய இணை மின்சுற்றை உருவாக்குவதே இம்முறையாகும். நேரியல் பண்பற்ற கருவிகளான வெற்றிடக் குழாய்கள், திரிதடையங்கள் முதலியவற்றின் சமமின் சுற்றுகளில் அக்கருவிகளின் இயக்கங்களைக் கொண்ட அ. க. 9-50 அ சமமின் புள்ளி 787 கற்பனையான மின்னாக்கி ஒன்று அக்கருவிகளின் ஏனைய பண்புகளடங்கிய மின்சுற்றுடன் இணைக்கப் படும். இவ்வாறு இணைக்கப்பட்ட மின்னாக்கியும், 18 Isc REA www A lab R B படம் 9. நார்ட்டன் சம மின்சுற்று மின்சுற்றும் அக்கருவியின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் தான், அவற்றின் சம மின்சுற்றாகக் கருதப்படும். அவ்வெல்லைகள் மாறும்போதும் எந்த ஒரு பகுதியில் பெரும் மாற்றம் இல்லாத நிலை ஏற் படுகிறதோ அந்தப் பகுதி மட்டுமே சம மின்சுற்றாகச் செயல்படும். இத்தகைய சம மின்சுற்றுகள் வரை யறுக்கப்பட்ட எல்லைக்குள் சிறு குறிப்புகளை மட்டுமே பகுத்தாயப் பயன்படுகின்றன. பெரிய அளவில் பகுத்தாய வேண்டுமெனில் கட்டத்தாள்களில் வரையப்பட்ட அக்கருவிகளின் பண்பு வரைகோடு சுளையே பயன்படுத்த வேண்டும். -பொ. இராஜாமணி -க.அர. பழனிச்சாமி நூலோதி: Donald G.Fink, H. Wayne Beaty, Standard Hand Book for Electrical Engineers, Eleventh Edition, McGraw-Hill Book Company, New York, 1978. சமமின் புள்ளி கூழ்மநிலையில் பிரிகை அடைந்திருக்கும் ஒரு பொருளின் துகள்கள், மின்புலத்தில் நகராமல் இருக்